2-வது சேலின் வெற்றியை தொடர்ந்து அடுத்த சேலுக்கு தயாராகும் ரியல்மி3!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 19 மார்ச் 2019 11:32 IST
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் ரூ.8,999 முதல் விற்பனையை துவங்கிய ரியல்மி 3!
  • இரண்டாவது முறையாக நடந்த ரியல்மி 3 சேல்!
  • அறிமுகம் ஆஃபர்களுடன் வெளியான ரியல்மி 3!

நேற்று இரண்டாவது முறையாக சேலில் விற்பனை செய்யப்பட்ட ரியல்மி 3 ஸ்மார்ட்போன் இதுவரை சுமார் 2,10,000 போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

தனது முதல் சேலில் 1,50,000 போன்களை விற்பனை செய்த நிலையில் இரண்டாவது சேலில் 60,000 போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு சேல்களின் வெற்றியை தொடர்ந்து  தனது மூன்றாம் கட்ட விற்பனை சேலை வரும் மார்ச் -19 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்கும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் வெளியானது. மேலும் ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் தளங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரியல்மி 3 விலை இந்தியா:

இந்தியாவில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ரியல்மி 3 மாடல் ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே வகையின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதிகொண்ட ஸ்மார்ட்போன் ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதுவரை கருப்பு மற்றும் டைனாமிக் பிளாக் நிறங்கள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் வரும் மார்ச் 26 முதல் ரேடியன்ட் நீல நிறத்தில் வெளியாகவுள்ளது. மேலும் அந்நிறுவனத்தின் சார்பில் வெளியான தகவலின்படி கருப்பு, டைமண்ட் புளூ மற்றும் மஞ்சள் நிறங்களில் போன் கேஸ்கள் வெளியிடப்போவதாக தகவல் வந்துள்ளது.

ரியல்மி 3 அமைப்புகள்:
இரண்டு சிம்கார்ட் வசதி, கலர் ஓஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பைய் மென்பொருள் என பல முக்கிய அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் 6.2 இஞ்ச் ஹெச்டி திரையும் பெற்றுள்ளது. 

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2.1 ஆக்டா கோர் மீடியாடெக் ஹூலியோ SoC-யுடன் வெளியாகியுள்ளது. 3 மற்றும் 4 ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் தனது பிரமாண்டமான இரண்டு பின்புற கேமராக்களுடன் வெளியாகியுள்ளது. 

Advertisement

13/2 மெகா பிக்சல் சென்சார்கள் உள்ள நிலையில், ஹெச்டிஆர், ஃபேஸ் ஆன்லாக் போன்ற சிறப்பு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. பேட்டரி வசதியை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4,230mAhவுடன் வெளியாகிறது.

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sturdy body
  • Powerful processor
  • Quick face recognition
  • ColorOS 6.0 looks slick
  • Bad
  • Front and rear get smudged easily
  • Average cameras
  • Videos aren’t stabilised
  • HD resolution display
 
KEY SPECS
Display 6.20-inch
Processor MediaTek Helio P70
Front Camera 13-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4230mAh
OS Android Pie
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme 3 price in India, Realme 3, Realme
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. உங்க ஐபோன் ஸ்லோவா இருக்கா? இதோ வந்துருச்சு iOS 26.3! புது அம்சங்கள் முதல் பேட்டரி தீர்வு வரை.. முழு விவரம் உள்ளே
  2. சாம்சங் வெறியர்களே ரெடியா? S26 Ultra-வோட 360 டிகிரி லுக் வெளியாகிடுச்சு! அந்த கேமரா ஐலேண்ட் வேற லெவல்.. முழு விவரம் உள்ளே
  3. Pixel 9a விலையில 11,000 ரூபாய் அதிரடி குறைப்பு! கூகுள் கேமரா வேணுமா? அப்போ உடனே இதை பாருங்க
  4. வெயிட்டிங் லிஸ்ட் ஓபன்! Samsung Galaxy S26 சீரிஸ் இப்போவே ப்ரீ-ரிசர்வ் பண்ணலாம்! அமேசான், பிளிப்கார்ட்ல அதிரடி விற்பனை
  5. பட்ஜெட் பத்தி கவலையே இல்ல! Samsung Galaxy S24 Ultra விலையில ₹25,000 தள்ளுபடி! அமேசான்ல ஆஃபர் மழை.. சீக்கிரம் பாருங்க
  6. சார்ஜ் போட மறந்தாலும் கவலை இல்ல! Oppo K14x 5G-ல அசுரத்தனமான 6500mAh பேட்டரி! விலை என்ன தெரியுமா?
  7. ஒன்பிளஸ் வெறியர்களுக்கு ஜாக்பாட்! OnePlus 13 விலையில 12,000 ரூபாய் அதிரடி குறைப்பு! இந்த சான்ஸ விட்றாதீங்க மக்களே
  8. iPhone-க்கு டஃப் கொடுக்க Samsung S26 ரெடி! எப்போ லான்ச்? என்னென்ன ஸ்பெஷல்? முழு விவரம் உள்ளே
  9. OnePlus-ல இவ்வளவு கம்மி விலையா? Pad 3 முதல் Buds Pro 3 வரை வாரி வழங்கும் சலுகைகள்
  10. பட்ஜெட் விலையில ஒரு தரமான 5G போன்! Lava Bold N2 இந்தியாவிற்கு வராரு.. மத்த பிராண்ட்லாம் கொஞ்சம் ஓரமா நில்லுங்க
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.