ரியல்மி 3 போன் இனி இந்தியாவில் ஒப்பன் சேல் மூலம் கிடைக்கும். சென்ற மாதம் இந்தியாவில் ரிலீஸ் செய்யப்பட்ட ரியல்மி 3 போன், லிமிட்டெட் கால விற்பனையில் மட்டுமே கிடைத்து வந்தது. சில நாட்களுக்கு முன்னர் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட் போன் ரிலீஸ் ஆன நிலையில் இந்த புதிய அறிவிப்பை நிறுவனத்தின் சி.இ.ஓ மாதவ் சேத் கூறியுள்ளார். ரியல்மி 3 ப்ரோ, ரெட்மி நோட் 7 ப்ரோவுக்குப் போட்டியாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த வாரத்திலிருந்து ரியல்மி 3 ப்ரோ இந்தியாவில் விற்பனையைத் தொடங்கும்.
ரியல்மி 3 போன், ரியல்மி தளம் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களில் அனைத்து நேரமும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி 3 விலை:
இந்தியாவில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ரியல்மி 3 மாடல் ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே வகையின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதிகொண்ட ஸ்மார்ட்போன் ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முதலில் கறுப்பு மற்றும் டைனாமிக் பிளாக் நிறங்கள் மட்டுமே வெளிவந்த ரியல்மி 3, மார்ச் 26 முதல் ரேடியன்ட் நீல நிறத்தில் கிடைக்க ஆரம்பித்தது. இந்த ஓப்பன் சேலில், மூன்று வண்ணங்களில் ஆன ரியல்மி 3 போன்களும் விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ரியல்மி 3 அமைப்புகள்:
இரண்டு சிம்கார்டு வசதி, கலர் ஓஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பைய் மென்பொருள் என பல முக்கிய அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் 6.2 இஞ்ச் ஹெச்டி திரையையும் பெற்றுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2.1 ஆக்டா கோர் மீடியாடெக் ஹூலியோ SoC வசதியைப் பெற்றுள்ளது. 3 மற்றும் 4 ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் தனது பிரமாண்டமான இரண்டு பின்புற கேமராக்களுடன் கலக்குகிறது.
13/2 மெகா பிக்சல் சென்சார்கள் உள்ள நிலையில், ஹெச்டிஆர், ஃபேஸ் அன்லாக் போன்ற சிறப்பம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. பேட்டரி வசதியைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4,230mAh பவருடன் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்