ரியல்மியின் இந்த புதிய போன் இந்தியாவில் கடந்த வாரம் வெளியானது
ரியல்மி தளத்தில் இருந்து போனை, மொபிக்விக் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 1,500 ரூபாய் கேஷ்-பேக் கொடுக்கப்படும்
ரியல்மி 3 ப்ரோ போன், இன்று இந்தியாவில் இரண்டாவது முறையாக விற்பனைக்கு வரவுள்ளது. ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி ஆன்லைன் ஸ்டோர்களில் இன்று விற்பனைக்கு வரவுள்ளது ரியல்மி 3 ப்ரோ. ஓப்போவின் துணை நிறுவனமான ரியல்மியின் இந்த புதிய போன் இந்தியாவில் கடந்த வாரம் வெளியானது. திங்கட்கிழமை ரியல்மி 3 ப்ரோ, முதன்முறையாக விற்பனைக்கு வந்தது. கடந்த 29 ஆம் தேதி முதன்முறையாக இந்த போனை ரியல்மி நிறுவனம், 12, 4 மற்றும் 8 மணிகளுக்கு தனித் தனியே விற்பனை செய்தது. தற்போது வரை, இன்று மதியம் 12 மணிக்கு ரியல்மி 3 ப்ரோ, விற்பனை செய்யப்படும் என்று மட்டும்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு நேரங்களில் இன்று விற்பனை செய்யப்படுமா என்பது தெரியவில்லை.
ரியல்மி 3 ப்ரோ விலை:
ரியல்மி 3 ப்ரோவின் 4ஜிபி + 64ஜிபி வகை 13,999 ரூபாய்க்கும், 6ஜிபி + 64ஜிபி வகை மற்றும் 6ஜிபி+ 128ஜிபி வகைகள் முறையே 15,999 ரூபாய்க்கும் 16,999 ரூபாய்க்கும் விற்கப்பட உள்ளன. கார்பன் க்ரே மற்றும் நைட்ரோ ப்ளூ வண்ணங்களில் இந்த போனை வாங்க முடியும்.
ரியல்மி தளத்தில் இருந்து போனை, மொபிக்விக் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 1,500 ரூபாய் கேஷ்-பேக் கொடுக்கப்படும்.
ஃப்ளிப்கார்ட் தளம் மூலம் இந்த போனை, எச்.டி.எப்.சி கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 1,000 ரூபாய் தள்ளுபடி கொடுக்கப்படும். ஃப்ளிப்கார்ட் பயனர்களுக்கு 6 மாத நோ காஸ்ட் இ.எம்.ஐ வசதியும் கொடுக்கப்படும்.
ரியல்மி 3 ப்ரோ சிறப்பம்சங்கள்:
ஆண்ட்ராய்டு 9 பைய் மூலம் இயங்கும் ரியல்மி 3 ப்ரோ போன், 6.3 முழு எச்.டி+ திரை, 19.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, கொரில்லா க்ளாஸ் 5 பாதுகாப்பு, குவால்கம் ஸ்னாப்டிராகன் 710 எஸ்.ஓ.சி, 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் உட்கட்டமைப்பு, அட்ரினோ 6161 ஜிபியூ, 64ஜிபி/128ஜிபி சேமிப்பு வசதி கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளைப் பெற்றிருக்கும்.
கேமரா வசதியைப் பொறுத்தவரை, போனின் பின்புறத்தில் 16 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமரா, 5 மெகா பிக்சல் இரண்டாவது கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 25 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவையும் ரியல்மி 3 ப்ரோ பெற்றிருக்கிறது.
கூடுதலாக ஃபிங்கர் பிரின்ட் சென்சார், 4,045 எம்.ஏ.எச் பேட்டரி, டூயல் சிம் சப்போர்ட், 4ஜி எல்.டி.இ, வைட்வைன் L1 இணைப்பு ஆகியவற்றை ரியல்மி 3 ப்ரோ கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Redmi Note 17 and Poco M8 Plus Appear on BIS Certification Database, Might Launch in India Soon: Report