Realme 3 pro:ரெட்மி நோட் 7 ப்ரோவுக்குப் போட்டியாக ரியல்மி 3 ப்ரோ வெளியிடப்படுகிறது.
Realme 3 pro: வாட்டர்-ட்ராப் நாட்ச், 6.3 இன்ச் ஸ்க்ரீன், குவால்கம் ஸ்னாப்டிராகன் 710 எஸ்.ஓ.சி உள்ளிட்ட வசதிகளை இந்த போன் பெற்றிருக்கும்
ரியல்மி 3 ப்ரோ(Realme 3 pro) போன், இன்று மதியம் 12 மணி முதல் இந்தியாவில் முதன்முறையாக விற்கப்பட உள்ளது. ஃப்ளிப்கார்ட் தளம் மூலமும் ரியல்மி தளம் மூலமும் இந்த போன் விற்கப்படும். ரெட்மி நோட் 7 ப்ரோவுக்குப் போட்டியாக ரியல்மி 3 ப்ரோ வெளியிடப்படுகிறது. வாட்டர்-ட்ராப் நாட்ச், 6.3 இன்ச் ஸ்க்ரீன், குவால்கம் ஸ்னாப்டிராகன் 710 எஸ்.ஓ.சி உள்ளிட்ட வசதிகளை இந்த போன் பெற்றிருக்கும். மூன்று வகைகளில் இந்த போன் சந்தையில் கிடைக்கும்.
ரியல்மி 3 ப்ரோ விலை:
ரியல்மி 3 ப்ரோவின் 4ஜிபி + 64ஜிபி வகை 13,999 ரூபாய்க்கும், 6ஜிபி + 64ஜிபி வகை மற்றும் 6ஜிபி+ 128ஜிபி வகைகள் முறையே 15,999 ரூபாய்க்கும் 16,999 ரூபாய்க்கும் விற்கப்பட உள்ளன. கார்பன் க்ரே மற்றும் நைட்ரோ ப்ளூ வண்ணங்களில் இந்த போனை வாங்க முடியும்.
ரியல்மி தளத்திலிருந்து, ரியல்மி 3 ப்ரோ போனை வாங்கும் முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு ரியல்மி பட்ஸ் இலவசமாக கொடுக்கப்படும். மேலும் ரியல்மி தளத்தில் இருந்து போனை, மொபிக்விக் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 1,500 ரூபாய் கேஷ்-பேக் கொடுக்கப்படும்.
ஃப்ளிப்கார்ட் தளம் மூலம் இந்த போனை, எச்.டி.எப்.சி கிரெடிட், டெபிட் கார்டுகள பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 1,000 ரூபாய் தள்ளுபடி கொடுக்கப்படும். ஃப்ளிப்கார்ட் பயனர்களுக்கு 6 மாத நோ காஸ்ட் இ.எம்.ஐ வசதியும் கொடுக்கப்படும்.
ரியல்மி 3 ப்ரோ சிறப்பம்சங்கள்:
ஆண்ட்ராய்டு 9 பைய் மூலம் இயங்கும் ரியல்மி 3 ப்ரோ போன், 6.3 முழு எச்.டி+ திரை, 19.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, கொரில்லா க்ளாஸ் 5 பாதுகாப்பு, குவால்கம் ஸ்னாப்டிராகன் 710 எஸ்.ஓ.சி, 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் உட்கட்டமைப்பு, அட்ரினோ 6161 ஜிபியூ, 64ஜிபி/128ஜிபி சேமிப்பு வசதி கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளைப் பெற்றிருக்கும்.
கேமரா வசதியைப் பொறுத்தவரை, போனின் பின்புறத்தில் 16 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமரா, 5 மெகா பிக்சல் இரண்டாவது கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 25 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவையும் ரியல்மி 3 ப்ரோ பெற்றிருக்கிறது.
கூடுதலாக ஃபிங்கர் பிரின்ட் சென்சார், 4,045 எம்.ஏ.எச் பேட்டரி, டூயல் சிம் சப்போர்ட், 4ஜி எல்.டி.இ, வைட்வைன் L1 இணைப்பு ஆகியவற்றை ரியல்மி 3 ப்ரோ கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Redmi Note 17 and Poco M8 Plus Appear on BIS Certification Database, Might Launch in India Soon: Report