Realme 2020 சேல்: தள்ளுபடி விலையில் Realme போன்கள்!

Realme 2020 சேல்: தள்ளுபடி விலையில் Realme போன்கள்!

ரியல்மி 2020 விற்பனையில் Realme X-ன் விலை ரூ. 14,999-யாக குறைக்கப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • Realme 2020 விற்பனை ஜனவரி 5 ஞாயிற்றுக்கிழமை வரை நேரலையில் இருக்கும்
  • Realme C2-வின் விலை ரூ. 5,999-யாக குறைக்கப்பட்டுள்ளது
  • Realme 5 Pro, ரூ. 1,000 மதிப்புள்ள தள்ளுபடியை பெற்றுள்ளது
விளம்பரம்

இந்தியாவில் ரியல்மி 2020 விற்பனையின் போது Realme X, Realme 5 Pro மற்றும் Realme 3 Pro தள்ளுபடிகள் பெற்றுள்ளன. சீன நிறுவனத்தின் நான்கு நாள் விற்பனை, ஜனவரி 5, ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும். Realme 3i, Realme 3, மற்றும் Realme C2 ஆகியவற்றில் தள்ளுபடி விலையையும் கொண்டு வந்துள்ளது. ரியல்மி விற்பனை தற்போது அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் பிளிப்கார்டில் நேரலையில் உள்ளது.

ரியல்மி சமூக மன்றங்களில் விற்பனை சலுகைகளைக் குறிப்பிடும் பதிவின் படி, ரியல்மி 2020 விற்பனை Realme X-ன் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷனுக்கு ரூ. 16,999-யில் இருந்து குறைக்கப்பட்டு, ரூ. 14.999-யாக கொண்டுவந்துள்ளது. Realme X-ன் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட், விற்பனையின் ஒரு பகுதியாக ரூ. 17.999-க்கு வாங்கலாம். இதன் சில்லறை விலை ரூ. 19,999 ஆகும்.

Realme 5 Pro-வை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, புதிய விற்பனையில் ரூ. 1,000 தள்ளுபடியை கொண்டுவந்துள்ளது. இதன் பொருள் நீங்கள் Realme 5 Pro-வை ரூ. 13,999-யில் இருந்து குறைக்கப்பட்டு ரூ. 12,999-க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் ஆப்ஷன்களில் 128 ஜிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் வருகிறது.

ரியல்மி விற்பனையின் ஒரு பகுதியாக Realme 3 Pro-வின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 12,999-யில் இருந்து குறைக்கப்பட்டு ரூ. 9,999-க்கு கிடைக்கும்.

Realme 3 Pro-வைப் போலவே, Realme 3-யும் ரியல்மி விற்பனையின் ஒரு பகுதியாக தள்ளுபடி விலையை பெற்றுள்ளது. இதன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ. 9,999-யில் இருந்து குறைக்கப்பட்டு, ரூ. 7,999-க்கு கிடைக்கிறது.

வாடிக்கையாளர்கள் Realme 3i-யின் 3GB RAM + 32GB ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ. 6,999-க்கு வாங்கலாம். இது Realme 3i-யின் வழக்கமான தொடக்க விலையாக ரூ. 7,999-யில் இருந்து குறைக்கப்பட்டுள்ளது. Realme 3i-யின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் ஆப்ஷனும் ரூ. 9,999-யில் இருந்து குறைக்கப்பட்டு, ரூ. 7,999-யாக உள்ளது.

இந்தியாவில் Realme C2-வின் 2GB RAM + 32GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையும் ரூ. 6,499-யில் இருந்து குறைக்கப்பட்டு ரூ. 5,999-யாக தள்ளுபடி செய்யப்படுள்ளது. வாடிக்கையாளர்கள் Realme C2-வின் 3GB RAM + 32GB ஸ்டோரேஜ் வேரியண்டையும் ரூ. 7,499-யில் இருந்து குறைக்கப்பட்டு, ரூ. 6,999-க்கு வாங்கலாம்.

Realme no-cost EMI ஆப்ஷன்களை வழங்க Bajaj Finserv உடன் கூட்டு சேர்ந்துள்ளது. சமீபத்திய விற்பனையின் போது வாடிக்கையாளர் ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது no-cost EMI ஆப்ஷன்கள், MobiKwik-ல் இருந்து ரூ. 1000 மதிப்புள்ள 10 சதவீதம் SuperCash மற்றும் Cashify வழியாக எக்ஸ்சேஞ்-க்கு கூடுதலாக ரூ. 500 தள்ளுபடி போன்ற பலன்களையும் பெறலாம்.

ஸ்மார்ட்போன் வழக்கமான விலை (ரூ.) தள்ளுபடி விலை (ரூ.)
Realme X 4GB+128GB 16,999 14,999
Realme X 8GB+128GB 19,999 17,999
Realme 5 Pro 4GB+64GB 13,999 12,999
Realme 5 Pro 6GB+64GB 14,999 13,999
Realme 5 Pro 8GB+128GB 16,999 15,999
Realme 3 Pro 4GB+64GB 12,999 9,999
Realme 3 4GB+64GB 9,999 7,499
Realme 3i 3GB+32GB 7,999 6,999
Realme 3i 4GB+64GB 9,999 7,999
Realme C2 2GB+32GB 6,499 5,999
Realme C2 3GB+32GB 7,499 6,999

சமீபத்திய விற்பனையின் கீழ் சலுகைகளை சிறப்பிக்கும் ஒரு பிரத்யேக மைக்ரோசைட் (dedicated microsite), ரியல்மி தளத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய சலுகைகளைக் காண்பிக்கும் மைக்ரோசைட்டையும் பிளிப்கார்ட் உருவாக்கியுள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »