இந்தியாவில் மீண்டும் விற்பனையில் ஒன்பிளஸ் 8 - விலை, ஆஃபர் விவரம்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 11 ஜூன் 2020 14:16 IST
ஹைலைட்ஸ்
  • OnePlus 8 sale begins at 12pm IST in India
  • Launch offers include Jio benefits worth Rs. 6,000
  • OnePlus 8 6GB RAM + 128GB model is exclusive to Amazon

இந்தியாவில் மீண்டும் விற்பனையில் ஒன்பிளஸ் 8 - விலை, ஆஃபர் விவரம்!

ஒன்பிளஸ் 8 இன்று இந்தியாவில் இன்று மீண்டும் விற்பனையில் உள்ளது. இந்த மொபைல், ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது, ஆனால் இந்தியாவில் விற்பனை இந்த மாதத்திலிருந்து மட்டுமே தொடங்கி வருகிறது, தற்போது நடந்து வரும் கொரோனா ஊரடங்கு நெருக்கடியால் ஏற்பட்ட உற்பத்தி சிக்கல்கள் காரணமாக ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனை முற்றிலும் ஒத்திவைக்கப்பட்டது. அதே நேரத்தில் ஒன்பிளஸ் 8 ஃபிளாஷ் விற்பனை மூலம் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 8 அமேசான் இந்தியா மற்றும் ஒன்பிளஸ்.இன் ஆகிய வலைதளங்களில் நண்பகல் 12 மணிக்கு முதல் கிடைக்கிறது. இந்த தொலைபேசியில் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது மற்றும் இது ஸ்னாப்டிராகன் 865 SoCல் இயக்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 8 விலை, விற்பனை, வெளியீட்டு சலுகைகள்

ஒன்பிளஸ் 8 விலை இந்தியாவில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜூடன் கொண்ட பிரத்தியேக அமேசான் அடிப்படை மாடலின் விலை ரூ.41,999 ஆகும். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல்களின் விலை முறையே ரூ.44,999 மற்றும் ரூ.49,999 ஆகும். மேசான் இந்தியா மற்றும் ஒன்பிளஸ்.இன் ஆகிய வலைதளங்களில் இந்த மொபைல்களின் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்த மொபைல் ஓனிக்ஸ் கிரீன், ஓனிக்ஸ் பிளாக் மற்றும் இன்டர்ஸ்டெல்லர் க்ளோ கலர் விருப்பங்களில் கிடைக்கும்.

ஒன்பிளஸ் 8-ஐ அறிமுக சலுகைகளில் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கினால், ரூ.2,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும், 12 மாதங்கள் வரை இஎம்ஐ விருப்பம் இல்லாமல் பெறலாம், மேலும் ரூ.6,000 மதிப்பிலான ஜியோ சலுகைகளும் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 8 சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 8 ஆக்ஸிஜன் ஓஎஸ் 10ல் இயங்குகிறது மற்றும் 6.55 இன்ச் முழு எச்டி + (1080x2400 பிக்சல்கள்)  அமோலேட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoCல் இயக்கப்படுகிறது, இது 12 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 8 128 ஜிபி மற்றும் 256 ஜிபி உள் சேமிப்பு விருப்பங்களில் வருகிறது.

இது 48 மெகாபிக்சல் ஷூட்டர், 2 மெகாபிக்சல் செகண்டரி மேக்ரோ ஷூட்டர் மற்றும் 16 மெகாபிக்சல் ஷூட்டர் ஆகியவற்றைக் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. ஒன்ப்ளஸ் 8 இல் 4,300 எம்ஏஎச் பேட்டரி வார்ப் சார்ஜ் 30 30T (5V/ 6A)ஆதரவுடன் உள்ளது

இணைப்பு விருப்பங்களில் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இந்த மொபைலில் டிஸ்ப்ளேயில் கைரேகை சென்சார் உள்ளது.


OnePlus 8 vs Mi 10 5G: Which Is the Best 'Value Flagship' Phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Very good build quality
  • Vivid display
  • Excellent performance and software
  • Solid battery life
  • Decent camera performance
  • Bad
  • No IP rating or wireless charging
  • Low-light video could be better
  • 12GB variant isn’t great value
 
KEY SPECS
Display 6.55-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 16-megapixel + 2-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4300mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Apple M5 MacBook Pro லான்ச் டீஸ்: தேதி, எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலை விவரம்
  2. Game of Thrones ஃபேன்ஸ், ஏத்துங்க! Realme 15 Pro 5G GOT Edition Rs. 41,999ல வந்திருக்கு
  3. WhatsApp Status Questions அம்சம்: Android Beta-வில் வெளியீடு
  4. விறுவிறுப்பான Display அனுபவத்துடன் வருகிறது Lava Shark 2. 120Hz refresh rate, 50MP camera
  5. iQOO ரசிகர்களுக்கு விருந்து! Pad 5e, Watch GT 2, TWS 5 வெளியீடு: தேதி மற்றும் Key Specs இங்கே!
  6. மோட்டோரோலா Android 16 வந்திருக்கு! Edge 60 Pro, Fusion முதல்ல அப்டேட், Notification Grouping, Instant Hotspot
  7. Lava Shark 2 வருது! பிளாக், சில்வர் கலர்ஸ், 50MP AI கேமரா உடன் கிளாஸி லுக்
  8. சாம்சங் Galaxy F36, M36-க்கு One UI 8 அப்டேட்! Android 16-ஓட வந்திருக்கு, இப்பவே செக் பண்ணுங்க
  9. Samsung ஃபோன் வாங்க சரியான நேரம்! Galaxy S24 FE உட்பட பிரீமியம் மாடல்களில் Rs. 28,000 வரை சேமிக்க வாய்ப்பு
  10. கட்டிங் எட்ஜ் All-in-One PC மாடல்களில் Rs. 24,990-லிருந்து ஆரம்பிக்கும் அதிரடி சலுகைகள்! HP, ASUS, Lenovo மாடல்களை குறைந்த விலையில்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.