OnePlus நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான OnePlus 15 மற்றும் OnePlus Ace 6 ஆகியவற்றை அக்டோபர் 27 அன்று சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
Photo Credit: OnePlus
OnePlus 13s-ஐப் போன்ற கேமரா தீவு வடிவமைப்பை OnePlus 15 கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
OnePlus நிறுவனம், தன்னோட அடுத்த பெரிய ஈவென்ட் தேதியை உறுதி பண்ணிட்டாங்க. அதுவும் ஒத்த போன் இல்ல, ரெண்டு போன். OnePlus 15 மற்றும் அதனுடன் OnePlus Ace 6 என்ற இந்த இரண்டு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்களும் சைனாவுல அக்டோபர் 27-ஆம் தேதி ஒரே மேடையில லான்ச் ஆகப் போகுதுன்னு அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காங்க. இதுல ஒவ்வொண்ணுலயும் என்ன இருக்குன்னு பார்ப்போம். முதலில், OnePlus 15! இதுதான் இந்த வருடத்தோட டாப்-எண்ட் ஃபிளாக்ஷிப் மாடல். இதுல Qualcomm-இன் புதிய Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் இருக்கறது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெர்ஃபார்மன்ஸ்ல இப்போதைக்கு இதை அடிக்க ஆளே இல்லைன்னு சொல்லலாம். அதோட டிஸ்பிளேவைப் பத்தி ஏற்கனவே பார்த்தோம். 1.5K ரெசல்யூஷனுடன் கூடிய 165Hz OLED ஸ்க்ரீன் இதுல வருது. பேட்டரி பவர் 7000mAh சப்போர்ட் இருக்குன்னு சொல்லியிருக்காங்க. இதுலதான் எல்லா ஹை-எண்ட் அம்சங்களும் இருக்கும்.
அடுத்து, OnePlus Ace 6! இந்த போன் தான் இப்போ நிறைய பேருக்கு சர்ப்ரைஸாக இருக்கு. இது சைனாவுல 'Ace' சீரிஸ்ஸாக வந்தாலும், நம்ம இந்தியன் மார்க்கெட்டுக்கு இது OnePlus 15R என்ற பெயர்ல வரும்னு பல டெக் வட்டாரங்கள்ல பேசப்படுது. OnePlus 15-ஐ விட இது கொஞ்சம் குறைவான விலையில வரும்னு எதிர்பார்க்கலாம்.
Ace 6-இன் சிப்செட் Snapdragon 8 Elite ஆக இருக்கலாம்னு லீக்ஸ் சொல்லுது. இதுவும் ஒரு செம பவர்ஃபுல்லான சிப்செட்தான். OnePlus Ace 6-ல இன்னொரு பிரம்மாண்டமான விஷயம் என்னன்னா, இதோட பேட்டரி. இதுல 7,800mAh என்ற மிகப்பெரிய பேட்டரி இருக்கலாம்னு சொல்லியிருக்காங்க. இந்த பெரிய பேட்டரியை சார்ஜ் செய்ய, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் இருக்கு. இவ்வளவு பெரிய பேட்டரியும், வேகமான சார்ஜிங்கும் இருந்தா, பவர் யூசர்களுக்கு வேற என்ன வேணும்? இந்த போன், OnePlus 15-ஐப் போலவே புதிய Square-shaped கேமரா மாட்யூல் கொண்டிருக்கு. இது சில்வர், ஒயிட், மற்றும் டார்க்/பிளாக் கலர் ஆப்ஷன்ஸ்ல டீஸ் பண்ணப்பட்டிருக்கு. இந்த இரண்டு போன்களும் சீனாவில் அக்டோபர் 27-ஆம் தேதி லான்ச் ஆகுது. அதுக்கப்புறம் சில வாரங்கள்ல உலகளாவிய அறிமுகம், இந்தியாவுக்கான வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் வரலாம்.
விலையைப் பொறுத்தவரை, OnePlus 15 ₹65,000-க்கு மேல இருக்கும்னு எதிர்பார்க்கலாம். Ace 6 (OnePlus 15R) முந்தைய மாடலைப் போலவே ₹40,000 முதல் ₹45,000 என்ற விலைப் பிரிவில் வந்தா, மார்க்கெட்டை கலக்கிடும். மொத்தத்துல, OnePlus ரசிகர்கள் இப்போ ரொம்ப உற்சாகமாக இருப்பீங்கன்னு நம்புறேன். இந்த ரெண்டு போன்ல உங்களுக்கு எந்த மாடல் அதிகமா பிடிச்சிருக்குன்னு கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்