ஒன்பிளஸ் 8-ஐ அறிமுக சலுகைகளில் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கினால், ரூ.2,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்
இந்தியாவில் மீண்டும் விற்பனையில் ஒன்பிளஸ் 8 - விலை, ஆஃபர் விவரம்!
ஒன்பிளஸ் 8 இன்று இந்தியாவில் இன்று மீண்டும் விற்பனையில் உள்ளது. இந்த மொபைல், ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது, ஆனால் இந்தியாவில் விற்பனை இந்த மாதத்திலிருந்து மட்டுமே தொடங்கி வருகிறது, தற்போது நடந்து வரும் கொரோனா ஊரடங்கு நெருக்கடியால் ஏற்பட்ட உற்பத்தி சிக்கல்கள் காரணமாக ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனை முற்றிலும் ஒத்திவைக்கப்பட்டது. அதே நேரத்தில் ஒன்பிளஸ் 8 ஃபிளாஷ் விற்பனை மூலம் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 8 அமேசான் இந்தியா மற்றும் ஒன்பிளஸ்.இன் ஆகிய வலைதளங்களில் நண்பகல் 12 மணிக்கு முதல் கிடைக்கிறது. இந்த தொலைபேசியில் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது மற்றும் இது ஸ்னாப்டிராகன் 865 SoCல் இயக்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 8 விலை இந்தியாவில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜூடன் கொண்ட பிரத்தியேக அமேசான் அடிப்படை மாடலின் விலை ரூ.41,999 ஆகும். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல்களின் விலை முறையே ரூ.44,999 மற்றும் ரூ.49,999 ஆகும். மேசான் இந்தியா மற்றும் ஒன்பிளஸ்.இன் ஆகிய வலைதளங்களில் இந்த மொபைல்களின் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்த மொபைல் ஓனிக்ஸ் கிரீன், ஓனிக்ஸ் பிளாக் மற்றும் இன்டர்ஸ்டெல்லர் க்ளோ கலர் விருப்பங்களில் கிடைக்கும்.
ஒன்பிளஸ் 8-ஐ அறிமுக சலுகைகளில் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கினால், ரூ.2,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும், 12 மாதங்கள் வரை இஎம்ஐ விருப்பம் இல்லாமல் பெறலாம், மேலும் ரூ.6,000 மதிப்பிலான ஜியோ சலுகைகளும் கிடைக்கிறது.
ஒன்பிளஸ் 8 ஆக்ஸிஜன் ஓஎஸ் 10ல் இயங்குகிறது மற்றும் 6.55 இன்ச் முழு எச்டி + (1080x2400 பிக்சல்கள்) அமோலேட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoCல் இயக்கப்படுகிறது, இது 12 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 8 128 ஜிபி மற்றும் 256 ஜிபி உள் சேமிப்பு விருப்பங்களில் வருகிறது.
இது 48 மெகாபிக்சல் ஷூட்டர், 2 மெகாபிக்சல் செகண்டரி மேக்ரோ ஷூட்டர் மற்றும் 16 மெகாபிக்சல் ஷூட்டர் ஆகியவற்றைக் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. ஒன்ப்ளஸ் 8 இல் 4,300 எம்ஏஎச் பேட்டரி வார்ப் சார்ஜ் 30 30T (5V/ 6A)ஆதரவுடன் உள்ளது
இணைப்பு விருப்பங்களில் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இந்த மொபைலில் டிஸ்ப்ளேயில் கைரேகை சென்சார் உள்ளது.
OnePlus 8 vs Mi 10 5G: Which Is the Best 'Value Flagship' Phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
OnePlus Nord CE 6
Starts from ₹27,999
Vivo X300 FE
Starts from ₹79,999
Vivo Y31 5G
Starts from ₹21,179
HP 303D Laser Single Function Monochrome Printer
Starts from ₹13,999
HP MFP 323DNW Laser Multi Function Monochrome Printer
Starts from ₹21,999
HP 303DW Laser Single Function Wireless Monochrome Printer
Starts from ₹15,999
HMD Luma 2 Design Revealed via Leaked Renders; Tipped to Feature 6,000mAh Battery, 6.75-Inch Display
Sony Reportedly Removes PC Ports Reference from Business Report Filed to SEC Amidst Shift to PS5 Exclusives