ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஷாவ்மி ஸ்மார்ட்போன்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் வரையிலும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன.
ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்ஸ்களைத் தவிர்த்து மற்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கும் ஆஃபர்கள் உள்ளன.
ஆகஸ்ட் 6 ஆம் தேதி அமேசான் பிரைம் டே சேல் தொடங்குகிறது. இதில் ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்ஸ்களுக்கு எக்கச்சக்க ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமேசான் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்காக பிரைம் டே சேல் மூலம் சிறப்பு தள்ளுபடி விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு அமேசான் பிரைம் டே சேல் வரும் 6 ஆம் தேதி தொடங்குகிறது.
இதில் மொபைல்ஸ் மற்றும் கேட்ஜெட்ஸ்களுக்கு 40 சதவீதம் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் வரையில் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. குறிப்பாக சாம்சங் ப்ரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரையில் ஆஃபரும், ஆப்பிள் ஐபோன் 11, ஸ்மார்ட்போன்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
ஃபிளாஷ் சேல்:
பிரைம் டே சேல் தினத்தன்று ரெட்மி 9, ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி நோட் 9, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஃபிளாஷ் சேல் முறையில் விற்பனைக்கு வருகின்றன. ரெட்மி பிரியர்கள் இந்த ஸ்மார்ட்போனை காலை 10 மணி, நண்பகல் 12 மணி, மதியம் 2 மணி, மாலை 4 மணி அளவில் ஆர்டர் செய்யலாம். ஹானர் 9A ஸ்மார்ட்போன் காலை 11 மணிக்கு பிளாஷ் சேல் செய்யப்படுகிறது. இதே போல் இதே ஸ்மார்ட்போன்களுக்கு மறுநாள், அதாவது ஆகஸ்ட் 7 ஆம் தேதியும் பிளாஷ் சேல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தள்ளுபடியைப் பொறுத்தவரையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஷாவ்மி ஸ்மார்ட்போன்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் வரையிலும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. இதே போல், சாம்சங் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரையிலும், கூடுதலாக 4 ஆயிரம் ரூபாய் வரையிலும் சிறப்பு தள்ளுபடி உள்ளன.
ஆப்பிள் ஐபோன் 11, ஐபோன் 8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு 14 ஆயிரம் ரூபாய் வரையிலும் சிறப்பு தள்ளுபடி உள்ளன. 9 மாதங்களுக்கு வட்டியில்லா இஎம்ஐ வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தவிர பவர் பேங்க், இயர்போன்கள், மொபைல் கேட்ஜெட்களுக்கு 70 சதவீதம் வரையில் தள்ளுபடி உள்ளன. குறிப்பாக கேட்ஜெட்கள் 99 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.
ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்ஸ்களைத் தவிர்த்து மற்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கும் ஆஃபர்கள் உள்ளன. கேமராக்கள், ஹெட்போன்களுக்கு 70 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகின்றன. லேப்டாப்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரையில் ஆஃபர் உள்ளது. ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு 60 சதவீதம் வரையிலும், டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 40 சதவீதம் வரையிலும் சலுகைகள் உள்ளன.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival 2026: Gaming Headset Deals Under Rs. 5,000
Amazon Great Indian Festival 2026 Sale: Best Gaming Monitors Under Rs. 20,000
Amazon Great Indian Festival 2026: Best Power Bank Deals