Photo Credit: Twitter/ Pete Lau
ஒன்பிளஸ் 7 குறித்து, அந்த போனை தயாரித்த நிறுவனமான ஒன்பிளஸ் டீசர் வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் சி.இ.ஓ பீட் லாவ், ட்விட்டரில் போன் குறித்த டீசரை வெளியிட்டு பரபரப்பை கூட்டியுள்ளார். ஒன்பிளஸ் 7 போன், வேகமாகவும் ஸ்மூத்தாகவும் இருக்கும் என்று டீசரில் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல ஒன்பிளஸ் 7 மாடலில் மூன்று வெர்ஷன்கள் வரும் என்பதும் டீசரில் சூசகமாக சொல்லப்படுகிறது.
பீட் லாவ், ‘எங்கள் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ஒன்பிளஸ் 7 குறித்த டீசரை பகிர்வதில் பெரு மகிழ்ச்சிக் கொள்கிறேன். போன் உலகில் வேகம் மற்றும் ஸ்மூத் ஆகியவற்றுக்கு ஒன்பிளஸ் 7 புது முகம் தரும். குறிப்பாக ஸ்மூத். வேகம் என்பதைவிட ஸ்மூத் என்பது மிகவும் கடினமான ஒன்று. மென்பொருள் மற்றும் வன்பொருள் ஒருங்கிணைப்பு அதற்கு மிக முக்கியமானதாகும். இந்தப் புதிய தயாரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது. அதை உங்களிடம் காண்பித்தேயாக வேண்டும்' என்று டீசர் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.
இந்த டீசர், போனில் இருக்கும் அமைப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து நமக்கு எதையும் தெரிவிக்கவில்லை.
ஆனால் டீசரில் வரும் சூசக குறியீட்டை வைத்துப் பார்க்கும்போது, ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ 5ஜி ஆகிய போன்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என்பதை யூகிக்க முடிகிறது.
பிரபல டெக் வல்லுநர் இஷான் அகர்வால் ஒன்பிளஸ் 7 குறித்து தகவல்களை லீக் செய்துள்ளார். அவர்தான் அடுத்த மாதம் 14 ஆம் தேதி, 7 வரிசை மாடல்கள் ரிலீஸ் பற்றி தெரிவித்துள்ளார்.
மேலும் போனின் உட்கட்டமைப்பு அம்சங்கள் குறித்து இதுவரை நமக்குக் கிடைத்த தகவல்படி, டூயல் எட்ஜ் டிஸ்ப்ளே, 6.67 இன்ச் சூப்பர் ஆப்டிக் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 ப்ராசெஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பு வசதி, மூன்று ரியர் கேமரா செட்-அப், ஆண்ட்ராய்டு பைய் இயங்கு மென்பொருள், வயர்-லெஸ் இயர் பட்ஸ் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்