அமேசானில் 5-வது ஆண்டு விழா கொண்டாட்டத்துடன், இந்திய சந்தையில் அறிமுகமான ஐந்தாவது ஆண்டை ஒன்பிளஸ் கொண்டாடுகிறது. விற்பனையின் ஒரு பகுதியாக, OnePlus 7 Pro ரூ. 10,000 வரையிலான தள்ளுபடியையும், அதே சமயம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 7T-யில் ரூ. 3,000 விலைக் குறைப்பையும் பெறுகிறது. கூடுதலாக, வங்கி தள்ளுபடி ரூ. 3,000 வரையும் மற்றும் no-cost EMI ஆப்ஷன்களும் அட்டவணையில் உள்ளன. மேலும், OnePlus TV Q1 Pro மற்றும் OnePlus TV Q1 4K QLED TV-யும் இப்போது no-cost EMI மற்றும் அமேசானில் வங்கி தள்ளுபடியுடன் கிடைக்கின்றன.
ஒன்பிளஸ் 5-வது ஆண்டுவிழா கொண்டாட்ட விற்பனை இப்போது அமேசானில் நேரலையில் உள்ளது. இது டிசம்பர் 2 வரை தொடரும். சலுகைகளில் தொடங்கி, OnePlus 7 Pro-வின் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ. 52,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது அமேசானில் 42,999 ரூபாய்க்கு வாங்குவதற்கு கிடைக்கிறது. 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டைப் பொறுத்தவரை, அதன் அசல் விலையான ரூ. 48.999-யிலிருந்து இப்போது ரூ. 39,999-க்கு கிடைக்கிறது. no-cost EMI மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ. 2,000 மதிப்புள்ள உடனடி தள்ளுபடியை அமேசான் வழங்குகிறது. எக்ஸ்சேஜிற்கு ரூ. 7,000 மதிப்பிலான தள்ளுபடியும் அடங்கும்.
OnePlus 7T-க்கு வரும்போது, போனின் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் தற்போது ரூ. 34,999-யிலிருந்து அசல் விலையில் ரூ. 3,000 மதிப்பினை தள்ளுபடி செய்யப்படுள்ளது. OnePlus 7T-யின் 8 ஜிபி + 256 ஜிபி மாடலை அதன் அசல் விலையான ரூ. 39.999-யிலிருந்து இப்போது அமேசானில் 37,999 ரூபாய்க்கு வாங்கலாம். OnePlus 7T-யிலும் எச்.டி.எஃப்.சி வங்கி அட்டைதாரர்களுக்கான no-cost EMI மற்றும் வங்கி தள்ளுபடிகள் பொருந்தும். வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,500 உடனடி தள்ளுபடியை பெறலாம்.
ஒன்பிளஸின் டிவிகளைப் பொறுத்தவரை, அவற்றில் தள்ளுபடி இல்லை. இருப்பினும், no-cost EMI திட்டங்கள் மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி கடன் அல்லது பற்று அட்டைதாரர்களுக்கு ரூ. 5,000 உடனடி தள்ளுபடியை அமேசான் வழங்குகிறது. OnePlus TV Q1 மற்றும் Q1 Pro QLED TV இரண்டும் மேற்கூறிய பலன்களுக்கு பொருந்தும். OnePlus Q1 QLED TV தற்போது ரூ. 69,899-யாக பட்டியலிடப்படுள்ளது. அதே சமயம் அமோசானில் OnePlus TV Q1 Pro ரூ. 98,999-க்கு வாங்குவதற்கு கிடைக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்