ஒன்ப்ளஸ் 7 Pro-வின் நீல நிற (Nebula Blue) ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் விற்பனையாகிறது. இதன் துவக்க விலை 52,999 ரூபாய்.
நீல நிறம் கொண்ட ஒன்ப்ளஸ் 7 Pro
ஒன்ப்ளஸ் 7 Pro-வின் நீல நிற (Nebula Blue) ஸ்மார்ட்போன், இறுதியாக இந்தியாவில் இன்று விற்பனைக்கு வரவுள்ளது. 8GB + 256GB மற்றும் 12GB + 256GB என இரண்டு வகைகள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், அமேசான் மற்றும் ஒன்ப்ளஸ் தளங்கள், மற்றும் இந்தியாவில் ஒன்ப்ளஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள பல நிறுவனங்களின் கடைகளிலும் கிடைக்கும். இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போன், கடந்த மே 14 அன்று இந்தியாவின் பெங்களூருவில் அறிமுகமானது. இந்த ஒன்ப்ளஸ் 7 Pro, QHD+ திரை, 12GB வரையிலான RAM, 4000mAh பேட்டரி மற்றும் பாப்-அப் செல்பி கேமரா என பல அம்சங்களை கொண்டு விற்பனையாகவுள்ளது. மேலும், மற்றொரு வண்ணமான ஆல்மண்ட் (Almond) நிற ஒன்ப்ளஸ் 7 Pro ஜூன் மாதத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் மூன்று வகைகளில் வெளியாகியுள்ள 'ஒன்ப்ளஸ் 7 Pro', 6GB RAM + 128GB சேமிப்பு, 8GB RAM + 256GB சேமிப்பு மற்றும் 12GB RAM + 256GB சேமிப்பு அளவு எனற அளவுகளை கொண்டு வெளியாநது. இதில் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு (சாம்பல் (Mirror Grey) வண்ணத்தில் மட்டும்) கொண்ட ஒன்ப்ளஸ் 7 Pro-வின் விலை ரூபாய் 48,999. அதே நேரம் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு (அனைத்து வண்ணங்களிலும்) கொண்ட ஒன்ப்ளஸ் 7 Pro-வின் விலை ரூபாய் 52,999 எனவும், 12GB RAM + 256GB சேமிப்பு அளவு (ப்ளூ (Nebula Blue) வண்ணத்தில் மட்டும்) கொண்ட ஒன்ப்ளஸ் 7 Pro-வின் விலை ரூபாய் 57,999 எனவும் அறிவித்துள்ளது.
அமேசான் மற்றும் ஒன்ப்ளஸ்-ன் ஆன்லன் தளங்கள், ஒன்ப்ளஸ்-ன் கடைகள் மற்றும் ஒன்ப்ளஸ்-ன் பங்குதாரர் நிறுவனங்களின் கடைகளில் கிடைக்கப்பெரும் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் மே 17 அன்று துவங்கியது. முன்னதாக, மே 17 அன்று சாம்பல் (Mirror Grey) வண்ணத்தினலான ஸ்மார்ட்போன்களை மட்டும் விற்பனைக்கு விடப்பட்ட நிலையில், மற்றொரு வண்ணமான ப்ளூ (Nebula Blue) வண்ண நிற போன்களை மே 28-ல் சந்தையில் அறிமுமாகும் என இந்த நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளது. மற்றொரு வண்ணமான ஆல்மண்ட் (Almond) நிற ஒன்ப்ளஸ் 7 Pro ஜூன் மாதத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கு 9,300 ரூபாய் வரையிலான சலுகைகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எஸ் பி ஐ வங்கி இந்த ஸ்மார்ட்பொனுக்கு 2,000 ரூபாய் கேஷ்பேக் அறிவித்துள்ளது.
இரண்டு நானோ சிம் வசதியை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராஉட் 9.0 பை(Android 9.0 Pie) அமைப்பைக்கொண்ட இந்த ஸ்மார்போன் ஆக்சிஜன் ஓ எஸ்(OxygenOS) கொண்டு செயல்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் திரை QHD+ (1440x3120 பிக்சல்கள்) கொண்ட திரை அமைப்பை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கான சாப்ட்வேர் அப்டேட் மற்றும் 3 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்ப்டேட் ஆகியவை கிடைக்கும் எனவும் இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 12GB வரையிலான RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு வெளியாகவுள்ளது
6.67-இன்ச் QHD+ திரையை கொண்டிருக்கும் இந்த ஒன்ப்ளஸ் 7 Pro-வில் 90Hz திரை புதுப்பிப்பு விகிதம்(refresh rate) கொண்டு வெளியாகவுள்ளது. மேலும் 19.5:9 என்ற திரை விகிதத்தையும், 516ppi பிக்சல் டென்சிடியையும் கொண்டுள்ளது. HDR10+ தரம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்களின் திரை நெட்ப்ளிக்சின் HDR வீடியோக்களை பார்க்கும் வசதி கொண்டுள்ளது. மேலும் டிஸ்ப்லேமேட்டால் A+ தரம் கொண்ட டிஸ்ப்லே என்ற சான்றிதழையும் பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கொரில்லா கிளாஸ் 5 பொருத்தப்பட்டுள்ளது. மிக குறைந்த வெளிச்சமாக 0.27 நிட்ஸ் குறைந்த ஒளிவரையின் இந்த ஸ்மார்ட்போனின் வெளிச்சத்தை குறைத்துக்கொள்ளலாம்.
மொத்தம் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 48 மேகாபிக்சல், 8 மேகாபிக்சல் மற்றும் 16 மேகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது இந்த மூன்று கேமராக்கள். மேலும் இந்த கேமராக்களில் 16 மேகாபிக்சல் அளவிலான கேமரா, வைட் ஆங்கிள் கேமராவாக இருக்கும் எனவும் 117 டிகிரி வரை விரிந்த அளவிலான புகைப்படங்களை தரும் எனவும் கூறப்படுகிறது. அதே நேரம், 8 மேகாபிக்சல் அளவிலான கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 16 மேகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்பி கேமரா இருக்கும். இந்த நிறுவனம் முன்னதாக வெளியிட்டிருந்த டீசரில் ஒன்ப்ளஸ் 7 Pro ஸ்மார்ட்போன் மூன்று கேமராக்கள் வெளியாகும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒன்ப்ளஸ் 7 Pro-வில் 4000mAh பேட்டரி அளவு கொண்ட பேட்டரி, டைப்-C சார்ஜ் போர்ட், அதிவேக வார்ப் சார்ஜர் 30(5V/ 6A) கொண்டு வெளியாகும் என அறிவித்துள்ளது. 162.6x75.9x8.8mm போன்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 206 கிராம் எடை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இன்னும் பல வசதிகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 4G VoLTE மற்றும் வை-பை வசதி கொண்டும் மற்றும் ப்ளூடூத் v5.0 கொண்டும் வெளியாகவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features