Photo Credit: WinFuture & Ishan Agarwal
தன் அடுத்த ஸ்மார்ட்போன்களான ஒன்ப்ளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 Pro, ஆகிய ஸ்மார்ட்போன்களை இன்று வெளியிடவுள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போனை ஒரே நேரத்தில் மூன்று நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, இந்தியாவில் பெங்களூரு, இங்கிலாந்தில் லண்டன் மற்றும் அமெரிக்காவில் நியூயார்க் ஆகிய இடங்களை தேர்வு செய்து வைத்துள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம். இந்த நிகழ்வை எப்படி நேரலையில் காண்பது என்று யோசித்துக்கொண்டிருந்தால், அதற்கான தகவல் இந்த செய்தியில் கிடைக்கும். இதற்கு முந்தைய ஸ்மார்ட்போன்கள் வெளியீட்டில், முன்னதாகவே, அந்த ஸ்மார்ட்போன்கள் பற்றிய அம்சங்களை டீசர்கள் வாயிலாக இந்த சீன நிறுவனம் வெளியிட்டது. ஆனால் இந்த முறை அப்படி ஏதும் வெளிடயிடாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து வெளியாகியுள்ள அளவிற்கதிகமான தகவல்களை கொண்டு இந்த போன்களுக்கான சிறப்பம்சங்களை அறிந்துகொள்ளலாம். இன்று வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன?
ஒன்ப்ளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 Pro-வின் வெளியிட்டு நிகழ்வு: எங்கு, எப்போது நடக்கும்?
ஒன்ப்ளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 Pro-வின் வெளியிட்டு நிகழ்வு, இன்று நடைபெறவுள்ளது. இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது இந்த போன்கள்.
இந்தியாவில் பெங்களூருவில் அறிமுகப்படுத்தவுள்ள இந்த ஸ்மார்ட்போன், இந்திய நேரப்படி மாலை 8:15 மணிக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. அதே நேரம், நியூயார்க் நகரில் அமெரிக்க நாட்டு நேரப்படி காலை 11 மணிக்கும், மற்றும் லண்டனில் இங்கிலாந்து நாட்டு நேரப்படி மாலை 4 மணிக்கும் அறிமுகப்படுத்தவுள்ளது. பெங்களூருவில் இந்த நிகழ்ச்சி, பெங்களூர் சர்வதேச கண்காட்சி மையம் (Bengaluru International Exhibition Centre)-ல் நடக்கவுள்ளது. அதே நேரம், லண்டனில் ப்ரின்ட்வொர்க்ஸ் என்ற இடத்திலும், நியூயார்க்கில் பியர் 94 என்ற இடத்திலும் இந்த நிகழ்வுகள நடக்கவுள்ளன.
சென்ற மாதம் இந்த நிகழ்விற்கான டிக்கெட்களை விற்பனை செய்யும் செயலில் ஈடுபட்டது ஒன்ப்ளஸ் நிறுவனம். 999 ரூபாய் மதிப்புள்ள இந்த டிக்கெட்கள், விற்பனை துவங்கிய ஒரு வாரத்திலேயே விற்று தீர்ந்துபோனது.
இந்த இடங்கள் மட்டுமின்றி, தன் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்பத்தும் நிகழ்வை தனது யூடியூப் சேனலிலும், தனது தளத்திலும் நேரலையில் வெளியிடவுள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம். அந்த நேரலை ஒன்ப்ளஸின் யூடியூப் சேனலில் காலை 8.15 மணிக்கு துவங்கும். நியூ யார்க் மட்டும், லண்டனில் நடைபெரும் நிகழ்வுகளுக்கான நேரடி ஒளிபரப்பின் ஸ்ட்ரீம் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், இன்னும் பெங்களூருவில் நடைபெரும் நிகழ்விற்கான ஸ்ட்ரீம் இணைப்பை அந்த நிறுவனம் வெளியிடாத நிலையில், அந்த நிகழ்விற்கான கவுன்ட்-டவுன் ஒன்று அந்த நிறுவத்தின் பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், அந்த பக்கத்தில் நினவூட்டலுக்கான ஒரு வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அங்கு பதிவு செய்துகொண்டால், நிகழ்ச்சி துவங்குவதற்கு 30 நிமிடங்கள் முன்பு, இ-மெயில் வாயிலாக, அந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பு நினைவூட்டப்படும்.
மேலும், ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது ஒன்ப்ளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தின்போது, புல்லட்ஸ் வயர்லெஸ் 2 ஹெட்போன் மற்றும் வார்ப் சார்ஜ் 30 கார் சார்ஜர் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்ப்ளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 Pro: விலை என்னவாக இருக்கலாம்?
இந்த ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் என்னவாக இருக்கும் என்பதை முன்னதாக வெளியான பல தகவல்களை வைத்து யூகிக்க முடிகிறது. இந்த தொழில்சர்ந்த வல்லுனர், முன்னதாக ஐரோப்பாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை என்னவாக இருக்கும் என்ற தகவலை வெளியிட்டிருந்தார். பிறகு, ஒன்ப்ளஸ் 7 குறித்து பல தகவல்களை வெளியிட்டு வரும் இந்த தொழில் வல்லுனர் இஷான் அகர்வால், இந்தியாவில் இவற்றின் விலை என்னவாக இருக்கும் என்பதனையும் வெளியிட்டார். அதன்படி, ஒன்ப்ளஸ் 7 Pro 6GB RAM + 128GB சேமிப்பு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு என இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தலாம் எனவும், மேலும் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட ஒன்ப்ளஸ் 7 Pro-வின் விலை 49,999 ரூபாயாக இருக்குமென்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு கொண்ட ஒன்ப்ளஸ் 7 Pro-வின் விலை 52,999 ரூபாயாகவும் இருக்குமென்றும் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி 12GB RAM + 256GB சேமிப்பு என்ற வகையிலும் இந்த ஒன்ப்ளஸ் 7 Pro வெளியாகலாம் எனவும், அதன் விலை ரூபாய் 57,999 ஆக இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஸ்மார்ட்போன்கள் மூன்றுவிதமான வண்ணங்களில் வெளியாகலாம் என குறிப்பிட்டிருந்த அவர், ஆல்ம்ண்ட், நெபுலா ப்ளூ மற்றும் கிரே ஆகியவையே அந்த வண்ணங்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அனைத்து வகை ஸ்மார்ட்போன்களும் இந்த மூன்று வண்ணத்தில் கிடைக்கது என குறிப்பிட்டிருந்த அவர், இதுவரை கிடைக்கப்பெற்ற தகவலின்படி 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட ஒன்ப்ளஸ் 7 Pro மட்டுமே கிரே வண்ணத்தில் கிடைக்கும் எனவும், மற்ற வகை போன்கள் இந்த வண்ணத்தில் தயாரகியுள்ளதா என்பதற்கான எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஒன்ப்ளஸ் 7-வின் விலை, குறித்து பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 39,500 ரூபாய்க்கு இதியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கணிப்பு, ஒன்ப்ளஸ் நிறுவனம் தன் அடுத்தடுத்த ஸ்மார்ட்போன்களைக்கு விலையை கூட்டுவது அளவிட்டு கூறப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிய நிலையில், அமேசான் மற்றும் ஒன்பளஸ் நிறுவனத்துடன் ஒப்பத்தம் செய்துள்ள க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் கடைகளிலும், இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவை செய்துகொள்ளலாம். அமேசானில் முன்பதிவு செய்ய, 1000 ரூபாய் மதிப்புள்ள கிப்ட் கார்ட் தேவைப்படும். அதே நேரம், இதை க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் கடைகளில் முன்பதிவு செய்ய 2000 ரூபாய் பணம் செலுத்தவேண்டி இருக்கும். மேலும் இந்த பணம், மொபைல்போனை பெரும்போது, அந்த பணம் திரும்ப வழங்கப்படும் எனவும் கூறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்வோர்க்கு 15,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கிரீன் ரீப்லேஸ்மென்ட் (Screen Replacement)-ஐ ஆறு மாதங்களுக்கு இலவமாக வழங்கவுள்ளது. இருந்தாலும், வாடிக்கையாளர்கள் இந்த சலுகைக்கு பதிவு செய்துகொள்ள 750 ரூபாய் கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ஜியொ நிறுவனமும் 9,300 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஒன்ப்ளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களை பெருபவர்கள், தங்கள் மொபைல்போனில் முதல் ரீ-சார்ஜாக 299 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால் 5,400 ரூபாய் கேஷ்பேக் என அறிவித்துள்ளது தொலைதொடர்பு நிறுவனங்களின் ஜாம்பவனான ஜியோ நிறுவனம். அதுமட்டுமின்றி 3,900 ரூபாய்க்கான கூடுதல் சலுகைகளையும் வழங்கவுள்ளது இந்த நிறுவனம். "பியாண்ட் ஸ்பீட் ஆப்பர்" (Beyond Speed Offer) என பெயரிடப்பட்டுள்ள இந்த சலுகை ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மே 19 முதல் கிடைக்கும். மேலும் இந்த சலுகை, ஜியோவின் புதிய மட்டும் பழைய வாடிக்கையாளர்கள் இருவருக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது. இந்த மே 19 என்பது ஒருவேளை இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கும் நாளாக கூட இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்ப்ளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 Pro: சிறப்பம்சங்கள்!
வேகமான மற்றும் மென்மையான அனுபவத்தை இந்த ஸ்மார்ட்போன்கள் அளிக்கும் என விளம்பரப்ப்டுத்தியிருந்தது ஒன்ப்ளஸ் நிறுவனம். இதை வைத்து பார்க்கையில், வேகமான என்பது, தற்போது உள்ள ப்ராசஸர்களின் மிகவும் மேன்மையான ஸ்னெப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர், இந்த ஒன்ப்ளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மென்மையான என குறிப்பிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன்களின் செயலாடு மற்றும் திரையை மையமாக வைத்து குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நானோ சிம் வசதியுடன் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அண்ட்ராய்ட் 9.0 பை(Android 9.0 Pie) அமைப்பை கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
திரையை பற்றி பேசுகையில், ஒன்ப்ளஸ் 7 Pro-வில் 6.67-இன்ச் QHD+ திரையும் ஒன்ப்ளஸ் 7-ல் 6.4-இன்ச் QHD+ திரையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 90Hz திரை புதுப்பிப்பு விகிதம்(refresh rate) இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரை புதுப்பிப்பு விகிதம் என்பது அதிகபட்சமாக 120Hz கொண்டு ஐபோன் X-ல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஒன்ப்ளஸ் 7 Pro-வின் திரை HDR 10+ தரம் கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ளஅ ஸ்மார்ட்போன்களின் திரையில் HDR 10+ தரமே, அதிக திரை தரம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் திரைக்கு டிஸ்ப்லேமேட் A+ சான்றிதழ் வளிங்கியுள்ளது, கவணிக்கப்பட வேண்டிய தகவல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் திரை எந்த ஒரு நாட்ச்-ம் இல்லாமல் முழு நீல திரையாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில், இந்த ஸ்மார்ட்போனின் முன்புற கேமரா பாப்-அப் கேமராவாக இருக்கலாம். மேலும் ஒன்ப்ளஸ் 7-ல், ஒன்ப்ளஸ் 6T-யில் இருந்தது போன்று சிரிய நாட்ச் பொருத்தப்பட்டிருக்கும் என வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த ஒன்ப்ளஸ் 7 Pro அதிவேக 3.0 சேமிப்பு (UFS 3.0 Storage) கொண்டு வெளியாகும் எனவும், இந்த வசதி கொண்டு வெளியாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகத்தான் இருக்கும் என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இதன் முந்தைய மாடல்களில், வைப்ரேசன் குறித்து பல புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதையும் இந்த மாடலில் சரி செய்திருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. முன்னதாக இருந்தைவிட இரண்டு மடங்கு அதிகம் சக்தியுள்ள வைப்ரேசன் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றவாறான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய மோட்டரின் வாயிலாக, மொபைல் பயன்பாட்டாளர்கள் மூன்று விதமான வைப்ரேசன் அளவினை தங்கள் போனில் செட் செய்துகொள்ளலாம் என கூறப்படுகிறது.
இந்த நிறுவனம் முன்னதாக வெளியிட்டிருந்த டீசரின் படி இந்த ஒன்ப்ளஸ் 7 Pro ஸ்மார்ட்போன் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த கேமராக்கள் பற்றி கருதுகையில், ஒன்ப்ளஸ் 7 Pro 48 மேகாபிக்சல், 8 மேகாபிக்சல் மற்றும் 16 மேகாபிக்சல் என 3 கேமராக்கள் போன்ற அளவுகளை கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கேமராக்களில் 16 மேகாபிக்சல் அளவிலான கேமரா, வைட் ஆங்கிள் கேமராவாக இருக்கும் எனவும் 117 டிகிரி வரை விரிந்த அளவிலான புகைப்படங்களை தரும் எனவும் கூறப்படுகிறது. அதே நேரம், 8 மேகாபிக்சல் அளவிலான கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 16 மேகாபிக்சல் அளவிலான் பாப்-அப் செல்பி கேமரா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஒன்ப்ளஸ் 7-ல் இரண்டு கேமராக்கள் இருக்கும் எனவும், ஒன்ப்ளஸ் 7 Pro போன்றே 48 மேகாபிக்சல் மற்றும் 16 மேகாபிக்சல் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் எனவும், 3x ஆப்டிகல் ஜூம் செல்லக்கூடிய 8 மேகாபிக்சல் கேமரா மட்டும் இருக்காது எனவும் கூறப்படுகிறது. இதன் முன்புற கேமரா பற்றி கூறுகையில், முனதாக கூறியது போல 8 மேகாபிக்சல் நாட்ச் கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஒன்ப்ளஸ் 7 Pro-வில் 4000mAh பேட்டரி அளவு கொண்ட பேட்டரி, டைப்-C சார்ஜ் போர்ட், மேலும் 30W அதிவேக வார்ப் சார்ஜர் கொண்டு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 162.6x75.9x8.8mm போன்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 210 கிராம் எடை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
அதே சமயம் ஒன்ப்ளஸ் 7-ல் அதைவிட சிறிதே 3700mAh பேட்டரி அளவு கொண்ட பேட்டரி கொண்டு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 157.7x74.8x7.1mm போன்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இரண்டு போன்களிலும் 3.5mm ஆடியோ ஜாக் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 5G வசதி கொண்டு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்