மூன்று கேமராக்களுடன் வெளியான ஒன்ப்ளஸ் 7 Pro: விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!

இந்தியாவில், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் மற்றும் ஒன்ப்ளஸ்-ன் ஆன்லன் தளங்கள், ஒன்ப்ளஸ்-ன் கடைகள் மற்றும் ஒன்ப்ளஸ்-ன் பங்குதாரர் நிறுவனங்களின் கடைகளில் மே 17 துவங்கவுள்ளது.

மூன்று கேமராக்களுடன் வெளியான ஒன்ப்ளஸ் 7 Pro: விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!

அமேசான் மற்றும் ஒன்ப்ளஸ் தளங்களில் வெளியாகவுள்ள ஒன்ப்ளஸ் 7 Pro

ஹைலைட்ஸ்
  • ஒன்ப்ளஸ் 7 Pro-வின் துவக்க விலை ரூபாய் 48,999
  • 48 மேகாபிக்சல், 8 மேகாபிக்சல் மற்றும் 16 மேகாபிக்சல் என மூன்று கேமராக்கள்
  • ஒன்ப்ளஸ் பாப்-அப்களின் வாயிலாக மே 15 தேதியே இந்த ஸ்மார்ட்போனை பெறலாம்
விளம்பரம்

ஒன்ப்ளஸ் நிறுவனம், தன் அடுத்த ஸ்மார்ட்போன்களான ஒன்ப்ளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 Pro, ஆகிய ஸ்மார்ட்போன்களை செவ்வாய்க்கிழமையான நேற்று வெளியிட்டது. பெங்களூரு, நியூயார்க் மற்றும் லண்டன் ஆகிய நகரங்களில் ஒரே நேரத்தில் தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய இந்த நிறுவனம், பெங்களூருவில், இந்திய நேரப்படி நேற்று இரவு 8.15 மணிக்கு இந்த நிகழ்ச்சியினை துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்ப்ளஸ் 7 Pro, QHD+ திரை, 12GB வரையிலான RAM, 4000mAh பேட்டரி மற்றும் பாப்-அப் செல்பி கேமரா என பல அம்சங்களை கொண்டு வெளியாகியுள்ளது. மேலும், ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் பாப்-அப் செல்பி கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆல்மண்ட் (Almond), சாம்பல் (Mirror Grey), மற்றும் ப்ளூ (Nebula Blue) ஆகிய வண்ணங்களில் வெளியாகியுள்ளது. இதன் விலை, சிறப்பம்சங்கள் என்னென்னெ? எப்போது இந்தியாவில் வெளியாகவுள்ளது?

ஒன்ப்ளஸ் 7 Pro: விலை மற்றும் விற்பனை துவங்கும் நாள்!

முன்னதாக யூகிக்கப்பட்டு வெளியான தகவல்களின்படியே இந்த ஸ்மார்ட்போன்களின் வகைகள் அமைந்துள்ளது. 6GB RAM + 128GB சேமிப்பு, 8GB RAM + 256GB சேமிப்பு மற்றும் 12GB RAM + 256GB சேமிப்பு அளவு என மூன்று வகைகளில் வெளியாகியுள்ளது. இதில் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு( சாம்பல் (Mirror Grey) வண்ணத்தில் மட்டும்) கொண்ட ஒன்ப்ளஸ் 7 Pro-வின் விலை ரூபாய் 48,999. அதே நேரம் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு(அனைத்து வண்ணங்களிலும்) கொண்ட ஒன்ப்ளஸ் 7 Pro-வின் விலை ரூபாய் 52,999 எனவும், 12GB RAM + 256GB சேமிப்பு அளவு(ப்ளூ (Nebula Blue) வண்ணத்தில் மட்டும்) கொண்ட ஒன்ப்ளஸ் 7 Pro-வின் விலை ரூபாய் 57,999 எனவும் அறிவித்துள்ளது.

அமேசான் மற்றும் ஒன்ப்ளஸ்-ன் ஆன்லன் தளங்கள், ஒன்ப்ளஸ்-ன் கடைகள் மற்றும் ஒன்ப்ளஸ்-ன் பங்குதாரர் நிறுவனங்களின் கடைகளில் கிடைக்கப்பெரும் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் மே 17 அன்று துவங்கவுள்ளது. மே 17 அன்று சாம்பல் (Mirror Grey) வண்ணத்தினலான ஸ்மார்ட்போன்களை மட்டும் விற்பனைக்கு விடவுள்ளது. மேலும் மற்றொரு வண்ணமான ப்ளூ (Nebula Blue) வண்ண நிற போன்களை மே28-ல் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ள இந்த நிறுவனம், ஆல்மண்ட் (Almond) ஜூன் மாதத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றும் அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு இந்த விற்பனைக்கான அனுமதி மே16-ஆம் தேதியே கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கு அஹமதாபாதி, பேங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதெராபாத், மும்பை மற்றும் பூனே ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒன்ப்ளஸ் பாப்-அப்களின் வாயிலாக மே 15 தேதியே இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கப்பெரும். ஜியோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கு 9,300 ரூபாய் வரையிலான சலுகைகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒன்ப்ளஸ் 7 Pro: சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம் வசதியை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராஉட் 9.0 பை(Android 9.0 Pie) அமைப்பைக்கொண்ட இந்த ஸ்மார்போன் ஆக்சிஜன் ஓ எஸ்(OxygenOS) கொண்டு செயல்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் திரை QHD+ (1440x3120 பிக்சல்கள்) கொண்ட திரை அமைப்பை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கான சாப்ட்வேர் அப்டேட் மற்றும் 3 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்ப்டேட் ஆகியவை கிடைக்கும் எனவும் இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 12GB வரையிலான RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு வெளியாகவுள்ளது

oneplus 7 pro back gadgets 360 oneplus

6.67-இன்ச் QHD+ திரையை கொண்டிருக்கும் இந்த ஒன்ப்ளஸ் 7 Pro-வில் 90Hz திரை புதுப்பிப்பு விகிதம்(refresh rate) கொண்டு வெளியாகவுள்ளது. மேலும் 19.5:9 என்ற திரை விகிதத்தையும், 516ppi பிக்சல் டென்சிடியையும் கொண்டுள்ளது. HDR10+ தரம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்களின் திரை நெட்ப்ளிக்சின் HDR வீடியோக்களை பார்க்கும் வசதி கொண்டுள்ளது. மேலும் டிஸ்ப்லேமேட்டால் A+ தரம் கொண்ட டிஸ்ப்லே என்ற சான்றிதழையும் பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கொரில்லா கிளாஸ் 5 பொருத்தப்பட்டுள்ளது. மிக குறைந்த வெளிச்சமாக 0.27 நிட்ஸ் குறைந்த ஒளிவரையின் இந்த ஸ்மார்ட்போனின் வெளிச்சத்தை குறைத்துக்கொள்ளலாம்.

மொத்தம் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.  48 மேகாபிக்சல், 8 மேகாபிக்சல் மற்றும் 16 மேகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது இந்த மூன்று கேமராக்கள். மேலும் இந்த கேமராக்களில் 16 மேகாபிக்சல் அளவிலான கேமரா, வைட் ஆங்கிள் கேமராவாக இருக்கும் எனவும் 117 டிகிரி வரை விரிந்த அளவிலான புகைப்படங்களை தரும் எனவும் கூறப்படுகிறது. அதே நேரம், 8 மேகாபிக்சல் அளவிலான கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 16 மேகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்பி கேமரா இருக்கும்.  இந்த நிறுவனம் முன்னதாக வெளியிட்டிருந்த டீசரில் ஒன்ப்ளஸ் 7 Pro ஸ்மார்ட்போன் மூன்று கேமராக்கள் வெளியாகும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் ஒன்ப்ளஸ் 7 Pro-வில் 4000mAh பேட்டரி அளவு கொண்ட பேட்டரி, டைப்-C சார்ஜ் போர்ட், அதிவேக வார்ப் சார்ஜர் 30(5V/ 6A) கொண்டு வெளியாகும் என அறிவித்துள்ளது. 162.6x75.9x8.8mm போன்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 206 கிராம் எடை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

இன்னும் பல வசதிகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 4G VoLTE மற்றும் வை-பை வசதி கொண்டும் மற்றும் ப்ளூடூத் v5.0 கொண்டும் வெளியாகவுள்ளது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium build
  • Vivid and immersive display
  • Powerful stereo speakers
  • Snappy UI and app performance
  • Useful secondary cameras
  • Good battery life
  • Bad
  • Heavy
  • Inconsistent AF in macros
  • 4K videos have oversaturated colours
  • Mediocre low-light video performance
  • No wireless charging
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 16-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 1440x3120 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff
 ...மேலும்
        
    
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 13: புதிய பச்சை நிறத்தில் ஜூலை 4-ல் லான்ச்! Snapdragon 8 Elite SoC, 120W சார்ஜிங்குடன் மாஸ்!
  2. AI+ Nova 5G, Pulse: ஜூலை 8-ல் மாஸ் லான்ச்! ₹5,000-க்கு 5G போன்? 50MP கேமராவுடன் வருகிறது!
  3. Vodafone Idea அதிரடி: இனி Family Plan-ல Netflix இலவசம்! டேட்டா, OTT பலன்கள் அள்ளி வழங்கும் Vi!
  4. அறிமுகமாகிறது Tecno Pova 7 Ultra 5G: Dimensity 8350, 144Hz AMOLED, 6000mAh பேட்டரியுடன் வருகிறது!
  5. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  6. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  7. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  8. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  9. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  10. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »