Photo Credit: OnLeaks/ PriceBaba
தன் அடுத்த ஸ்மார்ட்போன்களான ஒன்ப்ளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 Pro, ஆகிய ஸ்மார்ட்போன்களை மே 14-ஆன நாளை வெளியிடவுள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போனை ஒரே நேரத்தில் மூன்று நாடுகளில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக, இந்தியாவில் பெங்களூர், இங்கிலாந்தில் லண்டன் மற்றும் அமெரிக்காவில் நியூ யார்க் ஆகிய இடங்களை தேர்வு செய்து வைத்துள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம். மேலும் நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கான டிக்கெட்கள் விற்பனை சென்ற மாதம் துவங்கிய நிலையில், துவங்கிய ஒரு வாரத்திலேயே, டிக்கெட்கள் விற்று தீர்ந்து போய்விட்டது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன?
ஒன்ப்ளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 Pro-வின் வெளியிட்டு நிகழ்வு: எங்கு, எப்போது நடக்கும்?
ஒன்ப்ளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 Pro-வின் வெளியிட்டு நிகழ்வு, நாளை மே 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்தியாவில் பெங்களூருவில் அறிமுகப்படுத்தவுள்ள இந்த ஸ்மார்ட்போன், இந்திய நேரப்படி மாலை 8:15 மணிக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. அதே நேரம், நியூ யார்க் நகரில் அமெரிக்க நாட்டு நேரப்படி காலை 11 மணிக்கும், மற்றும் லண்டனில் இங்கிலாந்து நாட்டு நேரப்படி மாலை 4 மணிக்கும் அறிமுகப்படுத்தவுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வை தனது யூடுப் சேனலிலும் நேரலையில் வெளியிடவுள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம். அந்த நேரலை ஒன்ப்ளஸின் யூடுப் சேனலில் காலை 8.15 மணிக்கு துவங்கும்.
சென்ற மாதம் இந்த நிகழ்விற்கான டிக்கெட்களை விற்பனை செய்யும் செயலில் ஈடுபட்டது ஒன்ப்ளஸ் நிறுவனம். 999 ரூபாய் மதிப்புள்ள இந்த டிக்கெட்கள், விற்பனை துவங்கிய ஒரு வாரத்திலேயே விற்று தீர்ந்துபோனது.
ஒன்ப்ளஸ் நிறுவனம் ஒன்ப்ளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்துடன், புல்லட்ஸ் வயர்லெஸ் 2 ஹெட்போன் மற்றும் வார்ப் சார்ஜ் 30 கார் சார்ஜர் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்ப்ளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 Pro ஸ்மார்ட்போன்களின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
ஒன்ப்ளஸ் 7 Pro 6GB RAM + 128GB சேமிப்பு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு என இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தலாம் எனவும், அதன் விலைகள் 49,999 ரூபாயாகவும் 52,999 ரூபாயாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி 12GB RAM + 256GB சேமிப்பு என்ற வகையிலும் இந்த ஒன்ப்ளஸ் 7 Pro வெளியாகலாம் எனவும், அதன் விலை ரூபாய் 57,999 ஆக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்ப்ளஸ் 7, ஒன்ப்ளஸ் 6T கொண்ட வகைகளிலேயே அறிமுகப்படுத்தப்படலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை, ஒன்ப்ளஸ் 6T-யின் விலைக்கு நெருக்கமாகவே இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசான் மற்றும் ஒன்பளஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் கடைகளிலும், இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமேசானில் முன்பதிவு செய்ய, 1000 ரூபாய் மதிப்புள்ள கிப்ட் கார்ட் தேவைப்படும். அதே நேரம், இதை க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் கடைகளில் முன்பதிவு செய்ய 2000 ரூபாய் பணம் செலுத்தவேண்டி இருக்கும். மேலும் இந்த பணம், மொபைல்போனை பெறும்போது, அந்த பணம் திரும்ப வழங்கப்படும் எனவும் கூறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்ப்ளஸ் 7 Pro-வில் 6.7-இன்ச் QHD+ திரையும் ஒன்ப்ளஸ் 7-ல் 6.4-இன்ச் QHD+ திரையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த இரண்டு போன்களும் 5G வசதி கொண்டு வெளியாகும், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னெப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேமரா பற்றி கருதுகையில், ஒன்ப்ளஸ் 7 Pro 48 மேகாபிக்சல், 5 மேகாபிக்சல் மற்றும் 16 மேகாபிக்சல் என 3 கேமராக்கள் கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒன்ப்ளஸ் 7-ல் இரண்டு கேமராக்கள், 48 மேகாபிக்சல் மற்றும் 5 மேகாபிக்சல், பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் 4000mAh பேட்டரி அளவு கொண்டும், டைப்-C சார்ஜ் போர்ட், மேலும் 30W அதிவேக வார்ப் சார்ஜர் கொண்டு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்