நோக்கியா 5.1 ப்ளஸ் போன் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு மாதத்துக்குப் பின்னர், அதன் விலையை வெளியிட்டுள்ளது ஹெச்.எம்.டி க்ளோபல் நிறுவனம். இந்தியாவில் அதன் சந்தை விலை 10,999 ரூபாய் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போன், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு வசதியுடன் கிடைக்கப் பெறும். 400 ஜிபி வரை உள் சேமிப்பு வசதியை அதிகபடுத்திக் கொள்ளும் ஆப்ஷன் இருக்கிறது. நோக்கியா 6.1 போன் போல, நோக்கியா 5.1 ப்ளஸ் ஸ்மார்ட் போனும், ஃப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா இணையதளங்களில் மட்டுமே கிடைக்கும்.
நோக்கியா 5.1 ப்ளஸ் விற்பனைக்கான ஆர்டர்கள் தற்போதே எடுக்கப்பட்டு வருகின்றன. வருகிற 1 ஆம் தேதி முதல் இந்த போனை வாங்க முடியும்.
5.68 ஹெச்.டி ப்ளஸ் ஸ்க்ரீன், பின்புற டூயல் கேமரா, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ போன்றவைகள் இந்த போனின் சிறப்பம்சங்களாகும்.
ஏர்டெல் ப்ரீபெய்டு இணைப்பு வைத்திருக்கும் நபர்கள், நோக்கியா 5.1 ப்ளஸ் வாங்கினால் அவர்களுக்கு 1,800 ரூபாய் கேஷ்-பேக் தரப்படும். மேலும் பல டேட்டா பேக்குகளிலும் சலுகைகள் உண்டு.
நோக்கியா 5.1 ப்ளஸ் வெளியிடுவது குறித்து ஹெச்.எம்.டி நிறுவனத்தின் துணைத் தலைவர் அஜய் மேத்தா, ’நோக்கியா 5.1 ப்ளஸ் மூலம் மிகச் சிறப்பாக செயல்படும் ஒரு ஸ்மார்ட் போனை சந்தைக்குக் கொண்டு வர நாங்கள் முயன்றுள்ளோம். மொபைல் கேமிங்கிற்கு ஏற்றாற் போலவும், வீடியோக்கள் பார்ப்பதற்கு சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதையும் மனதில் வைத்து இந்த போனை உருவாக்கியுள்ளோம். நோக்கியா 5.1 ப்ளஸில் அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் இருக்கும்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்