பெரிதும் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 5310 மொபைல் - விற்பனைக்கு வரும் தேதி அறிவிப்பு!!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
பெரிதும் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 5310 மொபைல் - விற்பனைக்கு வரும் தேதி அறிவிப்பு!!

ஸ்டாண்ட் பை மோடில் 30 நாட்கள் வரை சார்ஜ் தாங்கும் சக்தி கொண்டது.

ஹைலைட்ஸ்
 • Nokia 5310 comes with FM Radio support
 • The phone is a refreshed version of a 2007 phone
 • HMD Global is taking registrations of interest for the Nokia 5310

பேசிக் மொபைல் பிரியர்களின் ஆஸ்தான பிராண்டான நோக்கியா, 5310 மாடல் மொபையை களத்தில் இறக்கவுள்ளது. இந்த  மொபைல் போன் சந்தைக்கு வரும் தேதி குறித்த விவரங்களை நோக்கியா வெளியிட்டுள்ளது.  

இதுதொடர்பாக நோக்கியா இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில், ஜூன் 16-ம்தேதி சந்தைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த வாரம் செவ்வாய்க் கிழமை முதல் நோக்கியா 5310 - ன் விற்பனை தொடங்குகிறது.

முன்னதாக கடந்த 2007-ல் நோக்கியா 5310 மியூசிக் மொபைல் வெளியானது. அதனை மேம்படுத்தி தற்போது புதிய மாடலை நோக்கியா சந்தைப்படுத்தவுள்ளது. 

வெள்ளை, சிவப்பு, கருப்பு வண்ணங்களில் நோக்கியா 5310 சந்தையில் கிடைக்கும். .

டெக்னிக்கலாக இந்த மொபைலில் என்னென்ன அம்சங்கள் இருக்கும் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நோக்கியா சீரிஸ் 30+ மென்பொருள், 2.4 இன்ச் டிஸ்ப்ளே, 2 ஸ்பீக்கர்கள், டச் இல்லாத ஃபிசிக்கல் கீபேட் ஆகியவற்றை இந்த மொபைல் கொண்டுள்ளது. 

ரேம் மெமரி 8 எம்.பி.யாகவும், உள்ளடக்க மெமரி 16 எம்.பியாகவும் ஸ்டோரேஜ் அம்சங்கள் இதில் இருக்கின்றன. மைக்ரோ எஸ்.டி.யை பயன்படுத்திய 32 ஜி.பி. வரையில் மெமரியை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். 

விஜிஏ கேமராதான் இதில் உள்ளது. எடுக்கும் வசதிகொண்ட 1,200 ஆம்பியர் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. ஸ்டேன்ட் பை மோடில், 30 நாட்கள் வரையில் போன் சார்ஜ் தாங்கும். எம்.பி.3 எஃப்.எம். ரேடியோ இதில் உள்ளன. 

ஒரேயொரு  சிம் மட்டும்தான் பயன்படுத்த முடியும். 2 ஜிக்கு மட்டுமே இந்தமொபைல் சப்போர்ட் செய்யும். ரூ.  3,190க்கு இந்த மொபைல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


OnePlus 8 vs Mi 10 5G: Which Is the Best 'Value Flagship' Phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. ரெட்மி 8 மொபைல் விலை மீண்டும் உயர்ந்தது! செல்போன் பிரியர்கள் அதிர்ச்சி
 2. 128 ஜி.பி. இன்டர்னல் மெமரி, 5,000 ஆம்ப் பேட்டரி பவருடன் வீவோ Y30 மொபைல் வெளியீடு!
 3. zoom-க்கு மாற்றாக இலவச வீடியோ கான்பரன்சிங் App-ஐ வெளியிட்ட ரிலையன்ஸ் ஜியோ!
 4. அட்டகாசமான வசதிகளுடன் எம்ஐ லக்ஸ் 65-இன்ச் 4k எல்இடி டிவி அறிமுகம்! விலை தெரியுமா?
 5. டிக் டாக் மாற்றான இந்திய செயலி ’சிங்காரி’: 1 கோடிக்கும் மேல் பதிவிறக்கம்!
 6. ரூ. 2,399 ரீசார்ஜ் - 600 நாட்கள் வேலிடிட்டி! BSNL-ன் அட்டகாசமான ஆஃபர்
 7. சாம்சங் ஃப்ளிப் மாடல் மொபைல் விலை ரூ. 7 ஆயிரம் அதிரடியாக குறைப்பு!
 8. விரைவில் விற்பனைக்கு வருகிறது விவோ Y30! விலை தெரியுமா?
 9. ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனை தொடக்கம்; விலை, ஆஃபர் விவரம்!
 10. சாம்சங் கேலக்ஸி ஏ31 விலை அதிரடி குறைப்பு! சிறப்பு சலுகைகள் அறிமுகம்
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com