கடந்த மாதம் கீக்பெஞ்ச் பட்டிடயலில் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் இருப்பதாக அறியப்பட்டது.
நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா உள்ளதாக கூறப்படுகிறது
நோக்கியாவின் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2.4 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
நோக்கியா தரப்பில் புதிதாக 2.4 ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. இது 2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி மற்றும் 3ஜிபி ரேம், 64ஜிபி மெமரி என இரு வேரியன்டுகளில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. நோக்கியா 2X சீரிஸின் ஒரே போன் இதுவே ஆகும்.
இதுதொடர்பாக நோக்கியா பவர் யூசர் தளத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி, நீலம், கிரே, பர்ப்பிள் என மொத்தம் மூன்று நிறங்களில் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் வருகிறது. கடந்தாண்டு நோக்கியா 2.2 அறிமுகம் செய்யப்பட்ட போது 3ஜிபி ரேமுடன் வந்தது. தற்போதும் அதே போல் ஒரு வேரியன்டும், அடிப்படையாக 2ஜிபி ரேம் கொண்ட ஒரு வேரியன்டும் வருகிறது.
நோக்கியாவின் 2X சீரிஸில் 2ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் இந்த நோக்கிய 2.4 ஸ்மார்ட்போன் ஆகும். FCC பட்டியலின்படி, TA-1277, TA-1270, TA-1274, மற்றும் TA-1275 என நான்கு மாடல்கள் உள்ளன. இவற்றில் TA-1270 தவிர மற்ற அனைத்து மாடல்களும் ஒரே விதமான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன. இதன் பேட்டரி சக்கதி 4,500 mAh என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் கீக்பெஞ்சில் தென்பட்டது. அதில் ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ P22 SoC பிராசசர், 2ஜிபி ரேம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், 6.5 இன்ச் நாட்ச் திரை, 13MP, 2MP டூயல் கேமரா, முன்பக்கத்தில் 5MP செல்ஃபி கேமரா இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
.
Poco M2 Pro: Did we really need a Redmi Note 9 Pro clone? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
NASA Says the Year 2025 Almost Became Earth's Hottest Recorded Year Ever
Civilization VII Coming to iPhone, iPad as Part of Apple Arcade in February