இந்தியாவில் நோக்கியா தரப்பில் 5.3 மற்றும் C3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நோக்கியா 5.3, நோக்கிய C3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இந்தியாவில் புதிதாக நோக்கியா 5.3 மற்றும் நோக்கியா C3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு தற்போது நோக்கியா தரப்பில் 5.3 மற்றும் C3 ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சீனாவில் இம்மாத தொடக்கத்தில் நோக்கியா C3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு அம்சம் உள்ளது.
நோக்கியா 5.3 மற்றும் நோக்கியா C3 இரண்டு ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ளன. 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் விலை 13,999 ரூபாய் என்றும், 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 15,499 ரூபாய் என்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு தற்போது நோக்கியா தளத்தில் நடைபெற்று வருகிறது.
நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளரகளுக்கு ஜியோ தரப்பில் 349 ரூபாய் ரீசார்ஜ் பிளானில் 4,000 ரூபாய் மதிப்பிலான பரிசு வழங்கப்படுகிறது.
நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10, 6.55 இன்ச் அளவிலான திரை, ஆக்டாகோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 665 SoC பிராசசர் உள்ளன. மேலும், பின்பக்கத்தில் 13 மெகா பிக்சல் பிரைமரி கேமராவுடன் குவாட் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டள்ளது. 13MP கேமராவுக்கு ஆதரவாக 5MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ சூட்டர் கேமராக்கள் உள்ளன. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சலுடன் செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
கூடுதல் சிறப்பம்சங்களாக 64ஜிபி எக்ஸ்பேண்டபிள் மெமரி, 4ஜி நெட்வொர்க், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், USB டைப் சி, 3.5மிமி ஹெட்போன் ஜேக், லைட் சென்சார், 4,000mAh பேட்டரி, 10W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 5.99 இன்ச் அளவிலான திரை, ஆக்டாகோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் Unisoc SC9863A SoC பிராசசர், 3ஜிபி ரேம் உள்ளன. மேலும், பின்பக்கத்தில் 8 மெகா பிக்சல் பிரைமரி கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சலுடன் செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ![]()
Nokia C3 comes with an HD+ display
கூடுதல் சிறப்பம்சங்களாக 64ஜிபி எக்ஸ்பேண்டபிள் மெமரி, 4ஜி நெட்வொர்க், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், USB டைப் சி, 3.5மிமி ஹெட்போன் ஜேக், லைட் சென்சார், 3,040mAh பேட்டரி, 10W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
OpenAI, Anthropic Offer Double the Usage Limit to Select Users Till the New Year
BMSG FES’25 – GRAND CHAMP Concert Film Now Streaming on Amazon Prime Video