ஆனர் 7ஏ, பிகசல் 2 மொபைல் போன்கள் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்கள் சலுகை விலையில் கிடைக்கின்றன
சுதந்திர தினத்தை முன்னிட்டு Flipkart தளம் நடத்தும் big freedom sale மூன்று நாள் சிறப்பு விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. ஆகஸ்ட் 12 வரை இச்சலுகை விற்பனை நீடிக்கும். சிட்டிபேங்க் கிரெடிட் கார்ட் மூலம் 4999ரூபாய்க்கு அல்லது கூடுதலாகப் பொருட்கள் வாங்கினால் 10% கேஷ்பேக் உண்டு. ஒரு கார்டில் அதிகபட்சம் 2000ரூபாய் வரை கேஷ்பேக் பெறலாம். மேலும் நீங்கள் இவ்விற்பனையில் எதையேனும் வாங்கத் திட்டமிட்டிருந்தால் அமேசான் தளத்திலும் அதன் விலையை சோதித்துக் கொள்ளவும். ஏன் என்றால் அவர்களும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இதேபோன்ற சலுகை விற்பனையை அறிவித்துள்ளனர். ப்ளிப்கார்ட்டில் எக்ஸ்சேஞ்ச் ஆபர்கள், கட்டணமில்லா மாதத்தவணை ஆபர்கள் போன்ற சலுகைகள் உள்ளன. இதனால் சாதாரண நாட்களை விட, தற்போது நீங்கள் வாங்கும் பொருட்களின் விலை குறைந்து கிடைக்கும்.
இன்றைய சில முக்கிய ஆபர்களை உங்களுக்காக கீழே பட்டியலிடுகிறோம். மேலும் இதுகுறித்த சூடான அப்டேட்டுகளைப் பெற எங்களோடு இணைந்திருங்கள்.
ஆனர் 7A 32ஜிபி:
சலுகை விலை 7,999 (பழைய விலை 10,999). பத்தாயிரத்துக்குக் குறைவான விலையில் திறன்பேசிகளுள் இவ்விலையில் நல்ல தேர்வாக இது அமையும்.
5.7" எச்டி டிஸ்பிளே, பின்புறத்தில் இரட்டை கேமரா, 3000 mAh பேட்டரி, ஆண்டிராய்ட் ஓரியோ 8.0.
பிக்சல் 2:
61,000ரூபாயக்கு விற்றுவந்த இந்த மொபைல் தற்போது சலுகை விலையாக 49,999ரூபாய்க்கு கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்தினால் மேலும் 15,950 ரூபாய் வரை கழிவு பெறலாம். எச்டிஎப்சி கிரெடிட், டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கினால் 8000 ரூபாய் கேஷ்பேக்கும் உண்டு. இதில் 4ஜிபி ரேம், 5" முழு எச்டி டிஸ்பிளே, 12.2 mp பின்புற கேமரா, 8 mp முன்புற கேமரா ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளன. குவால்காம் 835 SoCஇல் இயங்குகிறது.
பிற மின்னணு சாதனங்களுடன் கூடிய சலுகைகள்:
ஆப்பிள் ஐபேட் (ஆறாம் தலைமுறை) 32ஜிபி, வைபை வசதியுடன்
எக்ஸ்சேஞ்ச் முறையில் 16000 வரை கழிவு உண்டு. மேலும் சிட்டி பேங்க் கிரெடிட் கார்டில் வாங்கினால் 10% கேஷ்பேக் சலுகை.
சலுகை விலை: 23,900 (அசல் விலை: 28,000)
ஆனர் 10 (6ஜிபி ரேம்/128 ஜிபி மெமரி)
அட்டகாசமான 5.84" எச்டி டிஸ்பிளேவும், நீடித்து நிற்கும் 3400 mAh பேட்டரியும் 24mp செல்பி கேமராவும் இதன் சிறப்பம்சங்கள்.
சலுகை விலை: 29,999 (அசல் விலை: 35,999)
ஏசர் பிரிடேட்டர் ஹீலியஸ் 300 மடிக்கணினி:
8ஆம் எட்டாம் தலைமுறை இன்டெல் கோர் i5 பிராசசர் கொண்ட மடிக்கணினி. 8ஜிபி ரேம்
சலுகை விலை: 63,990 (அசல் விலை: 88,990)
LG G7+ ThinQ 128ஜிபி:
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட போன் என்பதால் பிற போன்களுக்கு உள்ளதைப் போன்ற சலுகைகள் இல்லை.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 42மிமீ
சலுகை விலை: 27,900 (அசல் விலை: 34,410)
கூகுள் ஹோம் மினி:
அமேசான் எக்கோ டாட்டுக்கு சிறந்த மாற்றாக இந்த ஸ்பீக்கர்கள் அமையலாம். சாவ்ன், கானா செயலிகள் முன்பே நிறுவப்பட்டு ஓராண்டு சந்தா (அக்டோபர் வரை) இலவசமாகக் கிடைக்கிறது. மேலும் இதில் கேள்விகள் கேட்பது, நினைவூட்டல்களை சுட் செய்வது, அலாரம் வைப்பது, வானிலை அறிவது எனப் பல செயல்களை மேற்கொள்ள முடியும்.
சலுகை விலை: 3,499 (அசல் விலை: 4,499)
MSI GF சீரிஸ் 15.6" கேமிங் மடிக்கணினி:
8ஆம் தலைமுறை i7 பிராசசர், 8ஜிபி ரேம்
அசல் விலை: சலுகை விலை: 79,990 (அசல் விலை: 99,990)
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Shambala Now Streaming Online: What You Need to Know About Aadi Saikumar Starrer Movie
Microsoft CEO Satya Nadella Says AI’s Real Test Is Whether It Reaches Beyond Big Tech: Report