Photo Credit: Amazon India
அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கில் அமேசான் பிரைம் டே சேல் இன்று (ஆகஸ்ட் 6) தொடங்கியுள்ளது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில் எந்தந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு ரூபாய் தள்ளுபடி என்பதை இங்குப் பார்க்கலாம்.
ஆப்பிள் ஐபோன் 11
இந்த ஆண்டின் புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் காத்திருக்க விரும்பவில்லை என்றால், அல்லது புதிய ஐபோன் மாடலுக்கான முழு விலையையும் செலவிட விரும்பவில்லை என்றால், கடந்த ஆண்டு ஐபோன் 11 ஸ்மார்ட்போனின் 64 ஜிபி வேரியன்ட் தள்ளுபடி விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
விலை: ரூ. 59,900 (அசல் விலை ரூ. 68,300)
ஒன்பிளஸ் 7T
ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் தற்போது பிரைம் டே சேலில் 35,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 39,999 ஆகும். HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், கட்டணமில்லா ஈஎம்ஐ வசதியும் உண்டு.
விலை: ரூ. 35,999 (அசல் விலை ரூ .39,999)
ஒன்பிளஸ் 7T ப்ரோ
பழைய ஸ்மர்ட்போன்களைப் பற்றிப் பேசுகையில், ஒன்பிளஸ் 7T ப்ரோ, 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் 43,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 53,999 ஆகும்.
விலை: ரூ. 43,999 (அசல் விலை ரூ. 53,999)
ஒப்போ ரெனோ 4 ப்ரோ
ஒப்போ சமீபத்தில் அறிமுகப்படுத்திய ரெனோ 4 ப்ரோவும் அமேசான் பிரைம் டே சேலில் இடம்பெற்றுள்ளது. இது ஒரு புதிய ஸ்மார்ட்போன் என்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் தள்ளுபடி இருக்காது. அமேசான் பே வழியாக 3,000 கேஷ்பேக் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ஒப்போ ரெனோ 4 ப்ரோவை 31,990 ரூபாய்க்கு (அசல் விலை ரூ .34,990) வாங்க முடியும். ரூ. 14,600 வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது.
விலை: ரூ. 34,990 (அசல் விலை ரூ. 37,990)
ரெட்மி கே 20 ப்ரோ (6 ஜிபி, 128 ஜிபி)
ஷாவ்மியின் ரெட்மி கே 20 ப்ரோ 22,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ. 28,999 ஆகும். இதற்கு ரூ. 13,600 வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது. ரெட்மி கே 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வருகிறது. குவால்காம் ஸ்நாப்டிராகன் 855 SoC பிராசசர் உள்ளது.
விலை: ரூ. 22,999 (அசல் விலை ரூ .28,999)
சாம்சங் கேலக்ஸி S10
சாம்சங் கேலக்ஸி S10 இன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் தற்போது, பிரைம் டே 2020 விற்பனைக்கு அமேசானில் 44,999 ரூபாய்க்கு கிடைக்கிறது (அசல் விலை ரூ. 71,000). கேலக்ஸி எஸ் 10 டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 10 மெகாபிக்சல் முன் கேமராவுடன் வருகிறது. இந்த தொலைபேசி சாம்சங்கின் எக்ஸினோஸ் 9820 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது 3,400 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது மற்றும் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
விலை: ரூ. 44,999 (அசல் விலை ரூ .71,000)
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்