Amazon Prime Day Sale: எக்கச்சக்க ஆஃபர்கள்.. இன்றே கடைசி நாள்.. உடனே முந்துங்கள்!

அமேசான் பிரைம் டே சேல் இன்று இரவு 12 மணிக்கு முடிவடைகிறது.

Amazon Prime Day Sale: எக்கச்சக்க ஆஃபர்கள்.. இன்றே கடைசி நாள்.. உடனே முந்துங்கள்!

அமேசான் பிரைம் டே சேல் சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்றோடு நிறைவு பெறுகிறது.

ஹைலைட்ஸ்
  • இன்றிரவு 12 மணிக்கு அமேசான் பிரைம் டே சேல் முடிவடைகிறது
  • ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், கேட்ஜெட்டுக்களுக்கு சிறப்பு தள்ளுபடி
  • HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி
விளம்பரம்

அமேசானின் பிரைம் டே சேல் சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று (ஆகஸ்ட் 7) இரவு 12 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த ஆஃபரில் மிகக்குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள், டிவி, கேட்ஜெட்ஸ் என எக்கச்சக்க பொருட்கள் கிடைக்கின்றன. 

அமேசான் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பிரைம் டே சேல் என்ற பெயரில், தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு தள்ளுபடி விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான பிரைம் டே சேல் நேற்று, ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கியது. இந்த விற்பனை இன்று இரவு 12 மணிக்கு நிறைவு பெறுகிறது. 

அமேசான் பிரைம் டே சேலில் பிரபல ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஹெட்போன்ஸ், ஸ்மார்ட் டிவிகள் என பல்வேறு தயாரிப்புகள் மிகக்குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. மற்ற வாடிக்கையாளர்களும் பிரைம் சந்தாவைச் செலுத்தி பிரைம் வாடிக்கையாளர்களாக மாறலாம். 

HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட பொருட்களுக்கு கேஷ்பேக் ஆஃபரும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அமேசான் பிரைம் டே சேலில் ஸ்மார்ட்போன்களுக்கான ஆஃபர்கள்:

OnePlus 7T
ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் தற்போது  பிரைம் டே சேலில் 35,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 39,999 ஆகும். HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், கட்டணமில்லா ஈஎம்ஐ வசதியும் உண்டு.
விலை: Rs. 35,999 (MRP Rs. 39,999)

OnePlus 7T Pro
பழைய ஸ்மர்ட்போன்களைப் பற்றிப் பேசுகையில், ஒன்பிளஸ் 7T ப்ரோ, 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் 43,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 53,999 ஆகும். 

Price: Rs. 43,999 (MRP Rs. 53,999)

Oppo Reno 4 Pro
ஒப்போ சமீபத்தில் அறிமுகப்படுத்திய ரெனோ 4 ப்ரோவும் அமேசான் பிரைம் டே சேலில் இடம்பெற்றுள்ளது. இது ஒரு புதிய ஸ்மார்ட்போன் என்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் தள்ளுபடி இருக்காது. அமேசான் பே வழியாக 3,000 கேஷ்பேக் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ஒப்போ ரெனோ 4 ப்ரோவை 31,990 ரூபாய்க்கு (அசல் விலை ரூ .34,990) வாங்க முடியும். ரூ. 14,600 வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது.

Price: Rs. 34,990 (MRP Rs. 37,990)

Redmi K20 Pro (6GB, 128GB)
ஷாவ்மியின் ரெட்மி கே 20 ப்ரோ 22,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ. 28,999 ஆகும். இதற்கு ரூ. 13,600 வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது. ரெட்மி கே 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வருகிறது. குவால்காம் ஸ்நாப்டிராகன் 855 SoC பிராசசர் உள்ளது.

Price: Rs. 22,999 (MRP Rs. 28,999)

Samsung Galaxy S10
சாம்சங் கேலக்ஸி S10 இன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் தற்போது, பிரைம் டே 2020 விற்பனைக்கு அமேசானில் 44,999 ரூபாய்க்கு கிடைக்கிறது (அசல் விலை ரூ. 71,000). கேலக்ஸி எஸ் 10 டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 10 மெகாபிக்சல் முன் கேமராவுடன் வருகிறது. இந்த தொலைபேசி சாம்சங்கின் எக்ஸினோஸ் 9820 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது 3,400 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது மற்றும் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 

Price: Rs. 44,999 (MRP Rs. 71,000)

அமேசான் பிரைம் டே சேல் 2020

எக்கோ டாட், ஃபயர் டிவி , ஸ்மார்ட் பல்பு - காம்போ ஆஃபர்:

நீங்கள் எக்கோ டாட் மற்றும் ஃபயர் டிவியை வாங்க நினைத்துக் கொண்டிருந்தால், அவற்றைத் தனித்தனியாக வாங்க வேண்டாம். அமேசான் பிரைம் டே சேலில் காம்போ ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எக்கோ டாட், ஃபயர் டிவி , விப்ரோவின் ஸ்மார்ட் எல்இடி பல்பு ஆகியவை காம்போ ஆஃபரில்  4,448 ரூபாய்க்கு கிடைக்கிறது. உண்மையில் இவை மூன்றின் மொத்த விலை 10,597 ரூபாய் ஆகும். கிட்டத்தட்ட பாதி விலைக்கு வாங்கி விடலாம்.

அமேசானின் ஃபயர் டிவி ஸ்டிக் ரெகுலர் மற்றும் 4K வேரியன்டுகள் தள்ளுபடி விற்பனையில் கிடைக்கின்றன. உங்கள் வீட்டிலுள்ள சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவதற்கு அமேசான் ஃபயர் ஸ்டிக் உதவுகிறது. ஃபயர் ஸ்டிக்கின் ரெகுலர் வேரியன்டின் அசல் விலை 3,999 ரூபாய் ஆகும். தற்போது அமேசான் பிரைம் டே சேலில் 2,399 ரூபாய்க்கு இது கிடைக்கிறது. இதே போல், 4K டிவி ஸ்டிக்கின் விலை 5,999 ரூபாயிலிருந்து 3,599 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.


Is Nord the iPhone SE of the OnePlus world? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. iPhone 17 Pro கேமரா சோதனையில் Samsung Galaxy S26 Ultra-வை முந்தியது: DxOMark மதிப்பீடு
  2. OnePlus 15T வெள்ளை நிற மாடல் மற்றும் டிஸ்ப்ளே அம்சங்கள் வெளியீடு; சீனாவில் Pre-Order தொடக்கம்
  3. OnePlus Nord Buds 4 Pro இந்திய வெளியீட்டு தேதி, முக்கிய அம்சங்கள் மற்றும் கிடைக்கும் விவரங்கள் அறிவிப்பு
  4. Realme Note 80 6,300mAh பேட்டரி, 6.74-இஞ்ச் டிஸ்ப்ளே உடன் அறிமுகம்: விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியானது
  5. Lava Bold 2 5G இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு; Under-Display Fingerprint Scanner உறுதி
  6. iQOO Z11 165Hz டிஸ்ப்ளே, 9,020mAh பேட்டரியுடன் டீஸ்; சீனாவில் விரைவில் அறிமுகம்
  7. SanDisk Extreme Fit USB Type‑C Flash Drive இந்தியாவில் அறிமுகமானது.. அசத்தும் அம்சங்கள்
  8. Samsung Galaxy M17e 5G: 50MP கேமரா, 6,000mAh பேட்டரியுடன் மார்ச் 17ல் இந்தியாவில் அறிமுகம்
  9. OnePlus 15T வடிவமைப்பு மற்றும் நிறங்கள் சீனா வெளியீட்டுக்கு முன் அதிகாரப்பூர்வமாக வெளியீடு
  10. Oppo Find N6 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மார்ச் 17 அன்று சீனாவில் அறிமுகம்; கான்பிகரேஷன் மற்றும் நிறங்கள் உறுதி
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »