ஸ்மார்ட்போன்களுக்கு அமேசான், ஃபிளிப்கார்ட் இரண்டிலும் ஆஃபர் மழை!

அமேசான் பிரைம் டே சேல் இன்றோடு நிறைவு பெறுகிறது. ஃபிளிப்கார்ட்டின் பிக் சேவிங்ஸ் டே சேல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

ஸ்மார்ட்போன்களுக்கு அமேசான், ஃபிளிப்கார்ட் இரண்டிலும் ஆஃபர் மழை!

அமேசான் ஃபிளிப்கார்ட் இரண்டிலும் ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ்
  • அமேசான் பிரைம் டே ஆஃபர் இன்றிரவு 12 மணிக்கு முடிவடைகிறது
  • ஃபிளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் டே சேல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை உள்ளது
  • இரண்டு தளங்களிலும் ஸ்மார்ட்போன்களுக்கு எக்கச்சகக ஆஃபர்களை அறிவித்துள்ளன
விளம்பரம்

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியப் பிறகு, அதாவது மார்ச் மாதத்திற்குப் பிறகு அமேசானிலும், ஃபிளிப்கார்ட்டிலும் முதன்முறையாக சிறப்பான ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமேசான் தரப்பில் பிரைம் டே சேல் நடைபெற்று வருகிறது. இது இன்றிரவு (ஆகஸ்ட் 7) 12 மணிக்கு நிறைவு பெறுகிறது. ஃபிளிப்கார்ட் தரப்பில் பிக் சேவிங்ஸ் டே சேல் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. 

புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களும், ஏற்கனவே பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் மாற்றுவதற்கும் இது ஒரு உகந்த நேரம் ஆகும். இதில் ஒரு குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அமேசானின் பிரைம் டே சேல் ஆஃபரானது, பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உள்ளதாகும். ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ள ஆஃபரை யார் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். இருப்பினும் பிரைம் சந்தாவைச் செலுத்தி அமேசானில் பிரைம் வாடிக்கையாளராக மாறலாம்.

அமேசானில் பிரைம் டே சேலில் ஆஃபரில் கிடைக்கும் சூப்பர் ஸ்மார்ட்போன்கள்:

OnePlus 7T
ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் தற்போது  பிரைம் டே சேலில் 35,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 39,999 ஆகும். HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், கட்டணமில்லா ஈஎம்ஐ வசதியும் உண்டு.

Price: Rs. 35,999 (MRP Rs. 39,999)

OnePlus 7T Pro
பழைய ஸ்மர்ட்போன்களைப் பற்றிப் பேசுகையில், ஒன்பிளஸ் 7T ப்ரோ, 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் 43,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 53,999 ஆகும். 

Price: Rs. 43,999 (MRP Rs. 53,999)

Oppo Reno 4 Pro

ஒப்போ சமீபத்தில் அறிமுகப்படுத்திய ரெனோ 4 ப்ரோவும் அமேசான் பிரைம் டே சேலில் இடம்பெற்றுள்ளது. இது ஒரு புதிய ஸ்மார்ட்போன் என்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் தள்ளுபடி இருக்காது. அமேசான் பே வழியாக 3,000 கேஷ்பேக் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ஒப்போ ரெனோ 4 ப்ரோவை 31,990 ரூபாய்க்கு (அசல் விலை ரூ .34,990) வாங்க முடியும். ரூ. 14,600 வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது.

Price: Rs. 34,990 (MRP Rs. 37,990)

Redmi K20 Pro (6GB, 128GB)
ஷாவ்மியின் ரெட்மி கே 20 ப்ரோ 22,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ. 28,999 ஆகும். இதற்கு ரூ. 13,600 வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது. ரெட்மி கே 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வருகிறது. குவால்காம் ஸ்நாப்டிராகன் 855 SoC பிராசசர் உள்ளது.
Price: Rs. 22,999 (MRP Rs. 28,999)

Samsung Galaxy S10
சாம்சங் கேலக்ஸி S10 இன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் தற்போது, பிரைம் டே 2020 விற்பனைக்கு அமேசானில் 44,999 ரூபாய்க்கு கிடைக்கிறது (அசல் விலை ரூ. 71,000). கேலக்ஸி எஸ் 10 டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 10 மெகாபிக்சல் முன் கேமராவுடன் வருகிறது. இந்த தொலைபேசி சாம்சங்கின் எக்ஸினோஸ் 9820 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது 3,400 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது மற்றும் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 

Price: Rs. 44,999 (MRP Rs. 71,000)

ஃபிளிப்கார்ட்டின் பிக் சேவிங்ஸ் டே சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு உள்ள ஆஃபர்கள்:

Apple iPhone XR
ஐபோன் XR ஸ்மாரட்போன் 44,999 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதன் அசல் விலை 52,500 ரூபாய் ஆகும். கிட்டத்தட்ட 8 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
Price: Rs. 44,999 (MRP Rs. 52,500)

Apple iPhone SE (2020)
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE (2020) ஸ்மார்ட்போனின் விலையும் ரூ. 36,999 ஆக சிறப்பு தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது. இதன் அசல் விலை ரூ.42,500 ஆகும். 40 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் புதிய ஐபோன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு மாற விரும்புகிறவர்கள், இந்த ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில்  ஆப்பிளின் A13 பயோனிக் சிப்,  4.7 இன்ச் அளவிலான திரை இருப்பது கூடுதல் சிறப்பு.

Price: Rs. 36,999 (MRP Rs. 42,500)

Oppo Reno 2F
ஒப்போ ரெனோ 2F ஸ்மார்ட்போனின் விலை 23,490 ரூபாயிலிருந்து 17,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஐபோன் SE 2020 ஸ்மார்ட்போன் 42,500 ரூபாயிலிருந்து 36,999 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Motorola G86 Power 5G: ஒருமுறை சார்ஜ் போட்டா மூணு நாள் வரும்! அம்சங்கள் கேட்டா அசந்து போவீங்க!
  2. கேமர்களுக்கு ஒரு குட் நியூஸ்! Acer Nitro Lite 16 லேப்டாப் வந்தாச்சு! விலை கேட்டா ஷாக் ஆவீங்க!
  3. இந்த போன் சார்ஜ் போட்டா போதும்... மூணு நாள் வரும்! Oppo Find X9 Pro-வின் மிரட்டல் அம்சங்கள்!
  4. ஐபோன் 17 வாங்க காத்திருப்போர்க்கு சூப்பர் நியூஸ்! புதிய கலர்களில் ஜொலிக்கப் போகுது
  5. Vivo Y31 5G: இந்தியால கெத்து காட்ட வருதா? என்னலாம் எதிர்பார்க்கலாம்?
  6. அறிமுகமாகிறது Primebook 2 Neo: 8GB RAM, Full HD டிஸ்ப்ளே - வாங்கலாமா?
  7. சாம்சங் போன்களில் பூட்லோடர் லாக்? One UI 8-ல் புதிய சிக்கல் - உங்கள் போன் பாதிக்கப்படுமா?
  8. Oppo Reno 14FS 5G: ₹45,700 விலையில் அறிமுகமா? அசத்தல் டிசைன், Snapdragon 6 Gen 4 SoC உடன் கசிந்த தகவல்கள்!
  9. Snapdragon 7 Gen 4 SoC உடன் Realme 15 Pro 5G - அம்சங்கள், விலை, எப்போ வாங்கலாம்? முழு விவரம்!
  10. Infinix Smart 10: ₹6,799-க்கு AI அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம்! 5,000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வாங்கலா
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »