ஃப்ளிப்கார்ட்டின் 'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்', தவறவிடக்கூடாத சலுகைகள்!

அமேசான் நிறுவனத்தின் ஃப்ரீடம் செலிற்கு போட்டியாக ஃப்ளிப்கார்ட் நிறுவனம்  'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்' என்ற ஒரு விற்பனையை அறிவித்திருந்தது.

ஃப்ளிப்கார்ட்டின் 'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்', தவறவிடக்கூடாத சலுகைகள்!

Photo Credit: Flipkart

இன்று துவங்கியது ஃப்ளிப்கார்ட்டின் 'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்'

ஹைலைட்ஸ்
  • துவங்கியது ஃப்ளிப்கார்ட்டின் 'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்'
  • ஃப்ளிப்கார்ட்டின் இந்த விற்பனை ஆகஸ்ட் 10 வரை நடைபெறும்
  • ஐசிஐசிஐ கார்டுகளுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி
விளம்பரம்

அமேசான் நிறுவனத்தின் ஃப்ரீடம் செலிற்கு போட்டியாக ஃப்ளிப்கார்ட் நிறுவனம்  'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்' என்ற ஒரு விற்பனையை அறிவித்திருந்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட இந்த  'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்', ஆகஸ்ட் 8 ஆன இன்று துவங்கி ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது. பிளிப்கார்ட்டின் இந்த 'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்' விற்பனையில் மொபைல்போன்கள், டேப்லெட்கள், லேப்டாப்கள், டிவிக்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் பிற பிரபலமான தயாரிப்பு வகைகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு கூடுதல் தள்ளுபடியுடன் ஃப்ளிப்கார்ட் 'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்' விற்பனையின் போது ஃபிளாஷ் சேலும் நடைபெறவுள்ளது. ஐசிஐசிஐ வங்கியிடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்த வால்மார்ட் நிறுவனம், ஐசிஐசிஐ வங்கி கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடியை வழங்கவுள்ளது. 

ஃப்ளிப்கார்ட்டின் 'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்' - ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த சலுகைகள்

விவோ Z1 Pro (Vivo Z1 Pro)

விவோ Z1 Pro-விற்கு ஃப்ளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் எந்த ஒரு தள்ளுபடியும் வழங்கப்படவில்லை, ஆனால் நீங்கள் ஃப்ளிப்கார்ட்டின் 'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்' விற்பனையின் போது ஏதேனும் ஆன்லைன் கட்டண முறையைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை பெற்றால் 1,000 ரூபாய் தள்ளுபடி பெறலாம். சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனிற்கான ஒரு நல்ல சலுகை இதுதான். விவோ Z1 Pro 4GB RAM, 64GB சேமிப்பு வகை 14,990 ரூபாய் என்ற விலையில் இந்தியாவில் அறிமுகமானது. நீங்கள் இப்போது இந்த ஸ்மார்ட்போனை ஃப்ளிப்கார்ட் விற்பனையில் 13,990 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளலாம்.

ஆப்பிள் ஐபோன் XS (Apple iPhone XS)

ஐபோன் XS 64GB ஸ்மார்ட்போன் இந்த ஃப்ளிப்கார்ட்டின் 'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்' விற்ப்னையில் 78,999 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்து 17,900 ரூபாய் (அதிகபட்சம்) வரை தள்ளுபடி பெறலாம். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்கள் 10 சதவிகிதம் கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம், ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் 5 சதவிகித 'வரம்பற்ற' கேஷ்பேக்கைப் பெறலாம்.

கூகுள் பிக்சல் 3a XL (Google Pixel 3a XL)

கூகுள் பிக்சல் 3a XL ஸ்மார்ட்போனும் இந்த வார 'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்' விற்பனையில் 39,999 ரூபாய்க்கு கிடைக்கப்பெறும். மிக சமீபத்திய விலைக் குறைப்பு கூகுள் பிக்சல் 3a XL ஸ்மார்ட்போன் 40,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. விற்பனையின் போது, ​​உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்து 17,900 ரூபாய் வரி கூடுதல் தள்ளுபடியை பெறலாம்.

ப்ளாக் ஷார்க் Black Shark 2 (6GB, 128GB)

பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனின் விலை ஃப்ளிப்கார்ட்டில் இப்போது 34,999 ரூபாய். இந்த கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் 39.999 ரூபாய் என்ற விலைக்கு அறிமுகமானது. ஒரு அட்டகாசமான கேமிங் ஸ்மார்ட்போனை பெறுவதற்காக நீங்கள் காத்திருந்தால், பிளாக் ஷார்க் 2 ஒரு நல்ல விலையில் கிடைக்கப்பெறுகிறது. 

ரெட்மீ நோட் 7S (Redmi Note 7S)

இந்த விற்பனையில் ரெட்மீ  நோட் 7S ஸ்மார்ட்போனும் சலுகையை பெற்றுள்ளது. அதன்படி 3GB / 32GB வகை ரெட்மீ நோட் 7S 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. அதாவது ரெட்மீ நோட் 7S விலை 1,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. இனி ஃபோல்டபிள் போன்லயும் தத்ரூபமான போட்டோஸ்! சாம்சங் Z Fold 8-ன் மிரட்டலான கேமரா சிறப்பம்சங்கள் கசிந்தது
  2. ஆப்பிள், குவால்காமுக்கு செம டஃப்! சாம்சங்கின் 2nm எக்ஸினோஸ் 2600 வந்தாச்சு
  3. 8.9mm தடிமன்.. 10 நாள் பேட்டரி! ஒன்பிளஸ் வாட்ச் லைட் (OnePlus Watch Lite) லான்ச் ஆகிடுச்சு
  4. 200MP கேமரா.. ஆனா சைஸ் ரொம்ப சின்னது! OPPO Reno15 Pro Mini - இதோட டிசைனை பார்த்தா அசந்துடுவீங்க
  5. வந்துவிட்டது புது Oppo Pad Air 5: 2.8K Display, 10,050mAh Battery & 5G Support
  6. அமேசான் பே-வில் அதிரடி! ₹5,000 வரை பேமெண்ட் பண்ண இனி பின் நம்பர் போட வேணாம்
  7. 7000mAh பேட்டரி.. 200MP கேமரா.. ரியல்மி 16 ப்ரோ+ (Realme 16 Pro+) ரகசியங்கள் அம்பலம்
  8. இனி ஆப் ஸ்டோர்ல எதை தேடினாலும் விளம்பரமா தான் இருக்கும்! ஆப்பிள் எடுத்த அதிரடி முடிவு! கடுப்பில் யூசர்கள்
  9. 5G சப்போர்ட்.. 12.1-இன்ச் டிஸ்ப்ளே! வந்துவிட்டது புது OnePlus Pad Go 2! விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
  10. 7,400mAh பேட்டரியா? ஒன்பிளஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேட்டரியுடன் வந்துவிட்டது OnePlus 15R
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »