அமேசான் ப்ரீடம் விற்பனை; அதிரடி தள்ளுபடியுடன் முதல் நாள் தொடக்கம்

அமேசான் ப்ரீடம் விற்பனை; அதிரடி தள்ளுபடியுடன் முதல் நாள் தொடக்கம்

சுதந்திர தின சிறப்பி விற்பனையாக அதிரடி தள்ளுபடிகளுடன் அமேசான் ப்ரீட்ம் விற்பனை தொடங்கியுள்ளது.

ஆகஸ்டு 9 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு விற்பனை, ஆகஸ்டு 12 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி டெபிட், க்ரெடிட் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% கேஷ்-பேக்கும், அமேசான் பே-பாலன்ஸ் பயன்படுத்துவோருக்கு 5% தள்ளுபடியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன்கள், டிவி, தொழில்நுட்பம் சார்ந்த மற்ற பொருட்கள் தள்ளுபடியில் விற்பனையாக உள்ளது. கேட்ஜட்ஸ் 360 டிகிரி சார்பில் சிறப்பு விற்பனையில் இடம் பெற்றிருக்கும் சில பொருட்களை காணலாம்

1. ஹானர் 7எக்ஸ் - 64 ஜிபி

64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ள ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட் போன், 6000 ரூபாய் தள்ளுபடி கொண்டு, 10,999 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது. பழைய ஸ்மார்ட் போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்வது மூலம் 9000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். டூயல் கேமரா, 8 மெகா பிக்ஸல் ப்ரண்ட் கேமரா, 5.93 இன்ச் ஃபுல் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட் போன், 18:9 ஸ்கிரீன் ரேஷியோ, கிரின் 699 ஓக்டா-கோர் ப்ராஸஸர் 4ஜிபி RAM கொண்டுள்ளது

தள்ளுபடி விலை : 10,999 ரூபாய் (MRP- 16,999 ரூபாய்)

2. ஹானர் வியூ 10 – 128 ஜிபி

அமேசான் ப்ரீடம் விற்பனையில், 24,999 ரூபாய்க்கு ஹானர் வியூ 10 – 128 ஜிபி ஸ்மார்ட் போன் விற்பனையாகிறது. டூயல் ரியர் கேமரா, 13 மெகா பிக்ஸல் ப்ரண்ட் கேமரா, 5.99 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும், 8.0 ஓரியோ ஆண்டுராய்டு தொழில்நுட்பம் கொண்டுள்ளது

தள்ளுபடி விலை : 24,999 ரூபாய் (MRP- 35,999 ரூபாய்)

3. சென்ஹேசர் எச்டி 4.50 வையர்லெஸ் ஹெட்போன்

அமேசான் ப்ரைம் தின விற்பனையில் தவறவிட்டவர்களுக்கான பிரத்யேக விற்பனை வெளியாகி உள்ளது. 4.0 ப்ளூடூத் கனெக்டிவிட்டி, 19மணி நேரம் பேட்டரி பேக்-அப் உடன் 7,490 ரூபாய்க்கு சென்ஹேசர் எச்டி 4.50 எஸ்இ வையர்லெஸ் ஹெட்போன் விற்பனைக்கு வந்துள்ளது.

தள்ளுபடி விலை : 7,490 ரூபாய் (MRP- 14,990 ரூபாய்)

4. டிசிஎல் 55 இன்ச் 4K ஸ்மார்ட் எல்.இ.டி டிவி

20,000 ரூபாய் தள்ளுபடியில், டிசிஎல் 55 இன்ச் 4K ஸ்மார்ட் எல்.இ.டி டிவி விற்பனைக்கு வந்துள்ளது. 3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யூஎஸ்பி போர்ட், 1 விஜிஏ போர்ட் ஆகியவை கொண்டுள்ளது. 18 மாதம் வாரண்டியுடன் 39,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது

தள்ளுபடி விலை : 39,990 ரூபாய் (MRP- 59,990 ரூபாய்)

5. சோனி 55 இன்ச் ப்ரேவியா கேடி 55ஏ1 – 4K OLED ஸ்மார்ட் டிவி

அமேசான் அலெக்ஸா உடன் இணைந்து செயலாற்றும் இந்த டிவி 2,09,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. அல்டிமேட் பிக்-ஸ்கீரின் அனுபவத்திற்கு சோனி 55 இன்ச் டிவி சிறந்த தேர்வாக அமையும். 4 எச்டிஎம்ஐ போர்ட், 3 யூஎஸ்பி போர்ட், சிறப்பு சவுண்ட் டெக்னாலஜியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது

தள்ளுபடி விலை : 2,09,990 ரூபாய் (MRP- 3,04,990 ரூபாய்)

6. கிண்டில் பேப்பர் வையிட் வை-ஃபை

பர்பெக்ட் கிப்ட் பொருளாக கிண்டில் பேப்பர் வையிட் வை-ஃபை 8,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. பில்ட்-இன் பேக்லைட்டுடன் சிறப்பான வாசிப்பை அனுபவத்தை அளிக்கிறது. எளிதாக எடுத்து கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

தள்ளுபடி விலை : 8,990 ரூபாய் (MRP- 10,990 ரூபாய்)

7. போட் ராக்கர்ஸ் 400 ப்ளூடூத் ஹெட்போன்

400 மிமி ட்ரைவருடன் பெரும்பாலான ப்ளூடூத் கருவிகளுடன் இணைக்கும் வசதி கொண்டுள்ளது. பில்ட் இன் பேட்டரி 8 மணி நேரம் வரை தாங்க கூடியதாக உள்ளது. 2,990 ரூபாய் விற்பனை விலையில் இருந்து 999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

தள்ளுபடி விலை : 990 ரூபாய் (MRP- 2,990 ரூபாய்)

8. அமேசான் பையர் டிவி ஸ்டிக்

அமேசான் பையர் ஸ்டிக் மீடியே ப்ளேயர் 3,199 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த அமேசான் பையர் ஸ்டிக், சிறப்பு விலையில் வெளியாகி உள்ளது

தள்ளுபடி விலை : 3,199 ரூபாய் (MRP- 3,999 ரூபாய்)

9. 10.or G – 64 ஜிபி

டூயல் ரியர் கேமரா, டூயல் டோன் எல்.இ.டி ப்ளாஷ், 16 மெகா பிக்ஸல் ப்ரண்ட் பேசிங் கேமரா கொண்டுள்ள 10.or G – 64 ஜிபி ஸ்மார்ட் போன் 6,990 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 4 ஜிபி RAM, 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 4000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 626 SoC கொண்டு வடிவமைக்கப்படுள்ளது

தள்ளுபடி விலை : 6,999 ரூபாய் (MRP- 13,999 ரூபாய்)

10. ஏசர் நிட்ரோ AN515-51 – 15.6 இன்ச் லேப்டாப்

அமேசான் விற்பனையில் 72,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இண்டெல் கோர் ஐ7 பிராஸஸர், 16 ஜிபி RAM, 1 TB ஹார்டு ட்ரைவ் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. விண்டோஸ் 10 ஓஎஸ் உடன், Nvidia Ge-Force GTZ 1050 Ti கிராபிக் கார்டு கொண்டுள்ளது

தள்ளுபடி விலை : 72,990 ரூபாய் (MRP- 1,09,999 ரூபாய்)

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
  1. வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!
  2. Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
  3. பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்!
  4. சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
  5. OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்
  6. Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!
  7. Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!
  8. வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
  9. அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?
  10. அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்
© Copyright Red Pixels Ventures Limited 2021. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com