வாடிக்கையாளர்களின் பின்னூட்டத்தின் அடிப்படையில் அமேசான் உணவு நடைமுறைக்கு வந்துள்ளது.
 
                அமேசான் உணவு விநியோகம் ஆரம்பத்தில் பெங்களூரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்கோடுகளில் வழங்கப்படும்
Swiggy மற்றும் Zomato-வுடன் போட்டியிட, Amazon இந்தியாவில் தனது உணவு விநியோகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உள்ளூர் உணவகங்கள் மற்றும் கிளவுட் சமையலறைகளில் தயாரிக்கப்படும் உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக, அமெரிக்க இ-காமர்ஸ் நிறுவனம் புதிய உணவு விநியோக சேவையை ஆரம்பத்தில் பெங்களூரில் தொடங்கியுள்ளது.
அமேசான் தனது தனியுரிம சுகாதார சான்றிதழ் பட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மக்களுக்கு சுத்தமான உணவின் உத்தரவாதத்தை அளிக்கிறது. இது தற்போது மிகவும் முக்கியமானது. ஏனெனில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்வதை பெரும்பாலும் தவிர்க்கின்றனர். இதுபோன்ற சமயங்களில் உணவை ஆர்டர் செய்ய மக்களை ஊக்குவிப்பதற்காக, கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
வாடிக்கையாளர் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நிறுவனம் தனது உணவு விநியோக சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது என்று அமேசான் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் கூறினார். புதிய சேவை உள்ளூர் வணிகங்களுக்கு, குறிப்பாக தேசிய ஊரடங்கு காரணமாக சிரமங்களை சந்திக்கும் உணவகங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, உள்ளூர் உணவகங்களை அவர்களின் இடத்தில் உணவு பரிமாற அரசு தடை விதித்துள்ளது.
அமேசான் இந்த புதிய சேவையை பெங்களூரில், 560048, 560037, 560066 மற்றும் 560103 ஆகிய நான்கு பின்கோடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், உணவகங்கள் மற்றும் கிளவுட் சமையலறைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அதன் அளவுகோல்களை நிறுவனம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பிப்ரவரியில் வெளியான ஒரு அறிக்கையில், அமேசான் தனது சொந்த ஆன்லைன் உணவு விநியோக சேவையை நாட்டில் தொடங்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக சேவையைத் தொடங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டதாக செய்திகளை அறிந்த சில வட்டாரங்கள் கேட்ஜெட்ஸ் 360 இடம் தெரிவித்தன.
How are we staying sane during this Coronavirus lockdown? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
 WhatsApp Tests Companion App for Apple Watch With Core Messaging Functionality
                            
                            
                                WhatsApp Tests Companion App for Apple Watch With Core Messaging Functionality
                            
                        
                     Samsung Internet Browser Beta for Windows PCs Launched with Galaxy AI Integration
                            
                            
                                Samsung Internet Browser Beta for Windows PCs Launched with Galaxy AI Integration
                            
                        
                     WhatsApp Announces Passkey-Encrypted Chat Backups With Biometric Authentication for Extra Security
                            
                            
                                WhatsApp Announces Passkey-Encrypted Chat Backups With Biometric Authentication for Extra Security
                            
                        
                     Apple CEO Tim Cook Forecasts Holiday Quarter iPhone Sales That Top Wall Street Estimates
                            
                            
                                Apple CEO Tim Cook Forecasts Holiday Quarter iPhone Sales That Top Wall Street Estimates