ரியல்மி நிறுவனம் தனது அடுத்த புரட்சிகரமான ஸ்மார்ட்போனை 10,001 mAh பேட்டரியுடன் தயார் செய்து வருகிறது
Photo Credit: Realme
10,001 mAh பேட்டரி கொண்ட இந்த Realme ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது
இன்னைக்கு நம்ம பார்க்கப்போறது ஒரு மிரட்டலான அப்டேட். "போன் பேட்டரி டக்குனு தீர்ந்து போகுதுப்பா"னு கவலைப்படுறவங்களுக்கு ரியல்மி ஒரு தரமான விடையை கண்டுபிடிச்சிருக்காங்க. ஆமாங்க, ரியல்மி நிறுவனம் இப்போ 10,001 mAh பேட்டரி இருக்குற ஒரு ஸ்மார்ட்போனை ரகசியமா ரெடி பண்ணிட்டு இருக்காங்க. இதோட மாடல் நம்பர் RMX5107-னு இப்போ இணையத்துல லீக் ஆகியிருக்கு. நேத்துதான் 'ஆனர்' (Honor) நிறுவனம் அவங்களோட 'Win' சீரிஸ்ல 10,000 mAh பேட்டரியை அறிவிச்சாங்க. அவங்களுக்குப் போட்டியா, ரியல்மி ஒரு படி மேல போய் "உங்களை விட ஒரு mAh அதிகமாவே கொடுக்குறோம்"னு 10,001 mAh பேட்டரியை கொண்டு வர்றாங்க. இது சும்மா சாதாரண விஷயம் இல்லை பாஸ், ஒரு சாதாரண பவர் பேங்க்-ல இருக்குற பவரை உங்க போனுக்குள்ளயே குடுத்துட்டாங்க.
நம்ம ஊர்ல இருக்குற பழைய பெரிய பேட்டரி போன் எல்லாம் செங்கல் மாதிரி கனமா இருக்கும். ஆனா ரியல்மி இதுல Silicon-Carbon (Si/C) பேட்டரி டெக்னாலஜியை யூஸ் பண்றாங்க. இதனால, இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தும் போனோட தடிமன் வெறும் 8.5mm தான் இருக்குமாம். அதாவது, ஒரு சாதா போன் எவ்வளவு ஸ்லிம்மா இருக்குமோ அதே மாதிரிதான் இதுவும் இருக்கும். ஆனா பேட்டரி மட்டும் அஞ்சு நாளைக்கு நிக்கும்.
லீக் ஆன ஸ்கிரீன்ஷாட் படி, இந்த போன்ல 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் இருக்கு. இதுல லேட்டஸ்ட் Realme UI 7.0 (ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலானது) ரன் ஆகுது. கேமராவுல 50MP மெயின் சென்சார் இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. முக்கியமா, இதுல ரியல்மியோட 320W SuperSonic சார்ஜிங் வசதி வந்தா, இந்த ராட்சச பேட்டரியை கூட ஒரு 10 நிமிஷத்துல ஃபுல் சார்ஜ் பண்ணிடலாம்.
இந்த போன் இப்போதைக்கு ஐரோப்பாவோட EEC சர்டிபிகேஷன் வாங்கிட்டு, ரஷ்யாவுல டெஸ்டிங்ல இருக்கு. 2026 ஆரம்பத்துல இது இந்தியாவுக்கு Realme GT சீரிஸ்ல வர அதிக வாய்ப்பு இருக்கு. மொபைலை சார்ஜ் போடுறதையே மறக்க வைக்கப்போற இந்த 'பேட்டரி கிங்'-குக்காக நீங்க வெயிட் பண்றீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy Fit 4 Features Allegedly Revealed Through Companion App Teardown