சாம்சங் நிறுவனம் தனது 2026 ஆடியோ வரிசையில் 'மியூசிக் ஸ்டுடியோ 5' மற்றும் 'மியூசிக் ஸ்டுடியோ 7' ஆகிய இரண்டு புதிய வைஃபை ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது
Photo Credit: Samsung
சாம்சங் இரண்டு புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர்களை அறிவித்துள்ளது: மியூசிக் ஸ்டுடியோ 5 மற்றும் மியூசிக் ஸ்டுடியோ 7.
நம்ம வீட்ல இருக்குற ஸ்பீக்கர்னாலே ஏதோ ஒரு மூலையில பெருசா கருப்பு கலர்ல தெரியணும்னு அவசியம் இல்லை. சாம்சங் நிறுவனம் இப்போ "மியூசிக் ஸ்டுடியோ" (Music Studio) அப்படிங்கிற ஒரு புது ஸ்பீக்கர் சீரிஸை அறிமுகம் பண்ணிருக்காங்க. இதை பார்த்தா ஒரு ஸ்பீக்கர் மாதிரியே தெரியாது, அவ்வளவு அழகா உங்க வீட்டு டிசைனோட கலந்துடும். பிரபல டிசைனர் எர்வான் பௌரோலெக் (Erwan Bouroullec) கூட சேர்ந்து சாம்சங் இந்த ஸ்பீக்கர்களை உருவாக்கியிருக்காங்க. இதுல "டைம்லெஸ் டாட் கான்செப்ட்" (Timeless Dot Concept) யூஸ் பண்ணிருக்காங்க. அதாவது, உங்க புக் ஷெல்ஃப்லயோ இல்ல டீப்பாய் மேலயோ வச்சா, அது ஒரு நவீன கலைப்படைப்பு மாதிரி இருக்கும். ஸ்பீக்கர்னு யாருமே கண்டுபிடிக்க முடியாது பாஸ்.
சாம்சங் இதுல AI Dynamic Bass Control வசதியை கொண்டு வந்திருக்காங்க. இது என்ன செய்யும்னா, நீங்க சத்தத்தை அதிகமா வச்சாலும் பேஸ் (Bass) கிழிஞ்சு போகாம, ரொம்பத் தெளிவா கேக்குற மாதிரி அட்ஜஸ்ட் பண்ணி கொடுக்கும். அப்புறம் இதுல Q-Symphony வசதி இருக்கு. உங்க சாம்சங் டிவி கூட இதை ஒயரே இல்லாம கனெக்ட் பண்ணி, டிவி ஸ்பீக்கரையும் இதையும் ஒன்னா சேர்த்து ஒரு தியேட்டர் எஃபெக்ட்டை கொண்டு வரலாம்.
வைஃபை, ப்ளூடூத், வாய்ஸ் கன்ட்ரோல்னு எல்லாமே இதுல இருக்கு. SmartThings ஆப் மூலமா உங்க போன்ல இருந்தே எல்லாத்தையும் கண்ட்ரோல் பண்ணிக்கலாம். ஆப்பிள் ஏர்ப்ளே (AirPlay) வசதியும் இதுல இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது.
விலை இன்னும் அதிகாரப்பூர்வமா அறிவிக்கலனாலும், ஜனவரி மாசம் நடக்குற CES 2026-ல இதோட முழு விவரமும் தெரிஞ்சிடும். உங்க வீட்டு ஹால்-ல இந்த மாதிரி ஒரு ஸ்பீக்கர் இருந்தா எப்படி இருக்கும்? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Asus Reportedly Halts Smartphone Launches ‘Temporarily’ to Focus on AI Robots, Smart Glasses
New Solid-State Freezer Could Replace Climate-Harming Refrigerants