விவோ நிறுவனத்தின் அடுத்த இமேஜிங் பிளாக்ஷிப் மாடலான Vivo X300 Ultra குறித்த டிஸ்ப்ளே மற்றும் டிசைன் விவரங்கள் கசிந்துள்ளன
2026-ன் ஆரம்பத்திலேயே விவோ (Vivo) நிறுவனம் ஒரு பெரிய "சம்பவத்துக்கு" ரெடி ஆகிட்டு இருக்காங்க. விவோ-வோட அல்டிமேட் கேமரா போனா வரப்போற Vivo X300 Ultra பத்தின சுடச்சுட தகவல்கள் இப்போ ஆன்லைன்ல கசிஞ்சிருக்கு. ஆனா இதுல ஒரு சின்ன வருத்தமான செய்தியும் இருக்கு, அதை முதல்ல பார்த்திடலாம். நம்ம விவோ X200 சீரிஸ்ல ஆப்பிள் ஐபோன் மாதிரி ஒரு பிரத்யேக கேமரா பட்டன் (Action Button) கொண்டு வந்தாங்க. ஆனா இப்போ வந்திருக்கிற 'டிஜிட்டல் சாட் ஸ்டேஷன்' (Digital Chat Station) தகவல்படி, X300 Ultra-வில் அந்த பட்டன் இருக்காதுன்னு தெரியுது. இடவசதி பிரச்சனை மற்றும் அன்றாட பயன்பாட்டுல அந்த பட்டன் பெருசா யூஸ் ஆகலங்கற காரணத்துக்காக விவோ அதை தூக்கிட்டதா சொல்றாங்க. ஆனா கேமரா பிரியர்களுக்கு இது கொஞ்சம் ஏமாற்றம் தான்.
ஆனா டிஸ்ப்ளே விஷயத்துல விவோ வேற லெவல் ஸ்கெட்ச் போட்டுருக்காங்க. 6.82-இன்ச் கொண்ட BOE LTPO 2K பிளாட் டிஸ்ப்ளே இதுல வரப்போகுது. வளைந்த திரை (Curved Display) பிடிக்காதவங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். அதுமட்டும் இல்லாம, LIPO டெக்னாலஜி மூலமா இதோட பெசல்கள் (Bezels) ரொம்பவே மெல்லியதா, நாலு பக்கமும் சமமா இருக்கும்னு சொல்றாங்க. போனை கையில வச்சிருந்தா வெறும் ஸ்கிரீன் மட்டும் தான் கண்ணுக்குத் தெரியும்.
இதோட பெர்ஃபார்மன்ஸ் பத்தி சொல்லவே வேணாம்.. Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் இதுல இருக்கப்போகுது. இது கூடவே 7000mAh மெகா பேட்டரி வரப்போகுதுன்னு ஒரு தகவல் ஓடிட்டு இருக்கு. இது மட்டும் நிஜமா இருந்தா, கேமராவுக்காகவும் பேட்டரிக்காகவும் நீங்க வேற எந்த போனையுமே பார்க்கத் தேவையில்லை. வழக்கம் போல விவோ-வோட அந்த பெரிய வட்டமான கேமரா மாட்யூல் இதுலயும் தொடருது. ரெண்டு 200MP கேமராக்கள் மற்றும் ஒரு 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ்னு கேமராவுல விவோ ஒரு புது சாம்ராஜ்யத்தையே படைக்கப்போறாங்க.
மார்ச் 2026-ல இந்த போன் சீனாவுல லான்ச் ஆகி, அப்புறமா இந்தியாவுக்கு வரும்னு எதிர்பார்க்கப்படுது. நீங்க இந்த 'கேமரா கிங்' போனுக்காக வெயிட் பண்றீங்களா? இல்ல கேமரா பட்டன் இல்லாதது உங்களுக்கு குறையா தெரியுதா? கமெண்ட்ல சொல்லுங்க.இதோட பெர்ஃபார்மன்ஸ் பத்தி சொல்லவே வேணாம்.. Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் இதுல இருக்கப்போகுது. இது கூடவே 7000mAh மெகா பேட்டரி வரப்போகுதுன்னு ஒரு தகவல் ஓடிட்டு இருக்கு.
இது மட்டும் நிஜமா இருந்தா, கேமராவுக்காகவும் பேட்டரிக்காகவும் நீங்க வேற எந்த போனையுமே பார்க்கத் தேவையில்லை. வழக்கம் போல விவோ-வோட அந்த பெரிய வட்டமான கேமரா மாட்யூல் இதுலயும் தொடருது. ரெண்டு 200MP கேமராக்கள் மற்றும் ஒரு 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ்னு கேமராவுல விவோ ஒரு புது சாம்ராஜ்யத்தையே படைக்கப்போறாங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Spotify Says Family Plan Verification Will Continue as It Tightens Account-Sharing Rules