சாம்சங் நிறுவனம் தனது அடுத்த பிளாக்ஷிப் மாடலான Galaxy S26 சீரிஸின் விலையை நிர்ணயம் செய்ய முடியாமல் திணறி வருகிறது
Photo Credit: Samsung
Galaxy S26 தொடர் இதுவரை இருந்தவற்றிலேயே மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கலாம்.
புது வருஷம் பொறக்கப்போகுது, அதுகூடவே சாம்சங்கோட அடுத்த 'சம்பவம்' Galaxy S26 சீரிஸும் ரெடி ஆயிட்டு இருக்கு. ஆனா, இப்போ வந்திருக்கிற ஒரு செய்தி சாம்சங் ரசிகர்களுக்கு கொஞ்சம் கவலையைத் தந்திருக்கு. ஆமாங்க, சாம்சங் வரலாற்றிலேயே இந்த S26 சீரிஸ் தான் "மிகவும் விலை அதிகமான" போனா இருக்கும்னு பேசிக்கிறாங்க. சாம்சங் நிறுவனம் இப்போ ஒரு இக்கட்டான சூழ்நிலையில இருக்காங்க. ஒரு பக்கம் போனுக்குத் தேவையான ராம் (RAM), சிப்செட், மற்றும் டிஸ்ப்ளே பேனல்களோட விலை சர்வதேச மார்க்கெட்ல பயங்கரமா ஏறிப்போச்சு. குறிப்பா, ஏஐ (AI) டெக்னாலஜி வளர்ந்துட்டே போறதால, மெமரி பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதோட விலை 30-40% வரைக்கும் உயரும்னு சொல்றாங்க.
இன்னொரு பக்கம், குவால்காம் (Qualcomm) நிறுவனத்தோட Snapdragon 8 Elite Gen 5 சிப்செட்டோட விலையும் ரொம்ப அதிகம். சாம்சங் அவங்களோட சொந்த எக்ஸினோஸ் (Exynos) சிப்செட்டை கொண்டு வந்து விலையை குறைக்கலாம்னு பார்த்தா, பெர்ஃபார்மன்ஸ்ல கோட்டை விட்டுடுவோமோங்கற பயமும் இருக்கு. இதனால, லாபத்தை விடக்கூடாதுன்னு நினைச்சா விலையை ஏத்தித்தான் ஆகணும்ங்கற முடிவுக்கு சாம்சங் தள்ளப்பட்டிருக்காங்க.
கிடைச்ச தகவல்படி, பிப்ரவரி 25, 2026-ல சான் பிரான்சிஸ்கோவுல நடக்குற 'அன்பேக்டு' (Unpacked) ஈவென்ட்ல இந்த போன் லான்ச் ஆகும். இந்திய விலையைப் பார்த்தா:
● Galaxy S26: ₹85,000-க்கு மேல ஆரம்பிக்கலாம்.
● Galaxy S26 Ultra: ₹1,35,000-லிருந்து ₹1,45,000 வரைக்கும் போக வாய்ப்பு இருக்கு.
இன்னொரு பக்கம், குவால்காம் (Qualcomm) நிறுவனத்தோட Snapdragon 8 Elite Gen 5 சிப்செட்டோட விலையும் ரொம்ப அதிகம். சாம்சங் அவங்களோட சொந்த எக்ஸினோஸ் (Exynos) சிப்செட்டை கொண்டு வந்து விலையை குறைக்கலாம்னு பார்த்தா, பெர்ஃபார்மன்ஸ்ல கோட்டை விட்டுடுவோமோங்கற பயமும் இருக்கு. இதனால, லாபத்தை விடக்கூடாதுன்னு நினைச்சா விலையை ஏத்தித்தான் ஆகணும்ங்கற முடிவுக்கு சாம்சங் தள்ளப்பட்டிருக்காங்க.
விலை ஏறினாலும், வசதிகள்ல சாம்சங் குறை வைக்கல. கேலக்ஸி S26 அல்ட்ரா-வுல 6.9-இன்ச் டிஸ்ப்ளே, 200MP கேமரா, 60W ஃபாஸ்ட் சார்ஜிங்னு பல அதிரடி அப்டேட்ஸ் இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. அதே சமயம், ஆப்பிளோட iPhone 17-க்கு போட்டியா விலையை கம்மி பண்ணவும் சாம்சங் முயற்சி செஞ்சுட்டு வர்றாங்க. இவ்வளவு விலை கொடுத்து சாம்சங் S26 சீரிஸ் போன்களை நீங்க வாங்குவீங்களா? இல்ல ஆப்பிள் பக்கம் போயிடலாமா? உங்க மைண்ட் வாய்ஸ் என்னன்னு கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
New Electrochemical Method Doubles Hydrogen Output While Cutting Energy Costs