Realme நிறுவனம் தனது 16 Pro+ 5G ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது
2026-ன் ஆரம்பமே அதிரடியா இருக்கப்போகுது. ஏன்னா, நம்ம ரியல்மி நிறுவனம் அவங்களோட மோஸ்ட் எக்ஸ்பெக்டட் Realme 16 Pro+ போனோட ஸ்பெக்ஸை அதிகாரப்பூர்வமா கன்பார்ம் பண்ணிட்டாங்க. லான்ச்சுக்கு முன்னாடியே இதோட பவரை பார்த்தா மத்த பிராண்ட்ஸ்க்கு எல்லாம் இப்போவே நடுக்கம் ஆரம்பிச்சிருக்கும். இந்த போன்ல Snapdragon 7 Gen 4 சிப்செட் இருக்குறது இப்போ உறுதியாகிடுச்சு. இதோட அன்டுடு (AnTuTu) ஸ்கோர் சும்மா மிரட்டுதுங்க.. சுமார் 1.44 மில்லியன் ஸ்கோர் பண்ணிருக்காம்! அதாவது மிட்-ரேஞ்ச் விலையில ஒரு பிளாக்ஷிப் லெவல் பெர்ஃபார்மன்ஸை நீங்க எதிர்பார்க்கலாம். இது கூடவே 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷனும் வருது. கேமிங் விளையாடுறவங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் தான்.
நம்ம ஊர்ல போன் சார்ஜ் சீக்கிரம் தீந்துடுதேன்னு கவலைப்படுறவங்களுக்கு ரியல்மி கொடுத்திருக்கிற கிஃப்ட் தான் இந்த 7000mAh Titan Battery. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தும் போன் பார்க்க ரொம்ப ஸ்லிம்மா, 'அர்பன் வைல்ட்' டிசைன்ல செம்ம ஸ்டைலா இருக்கு. இதை சார்ஜ் பண்ண 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் குடுத்திருக்காங்க. ஒருவாட்டி சார்ஜ் போட்டா மூணு நாளைக்கு கவலையே இல்லை பாஸ்!
போட்டோகிராபி லவ்வர்ஸ்க்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு. இதுல 200MP மெயின் கேமரா (Samsung HP5 சென்சார்) கூடவே, மறுபடியும் 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸை கொண்டு வந்திருக்காங்க. ஜூம் பண்ணி போட்டோ எடுக்குறதுல இந்த முறை ரியல்மி வேற லெவல் ஸ்கெட்ச் போட்டுருக்காங்க.
நம்ம ஊர்ல போன் சார்ஜ் சீக்கிரம் தீந்துடுதேன்னு கவலைப்படுறவங்களுக்கு ரியல்மி கொடுத்திருக்கிற கிஃப்ட் தான் இந்த 7000mAh Titan Battery. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தும் போன் பார்க்க ரொம்ப ஸ்லிம்மா, 'அர்பன் வைல்ட்' டிசைன்ல செம்ம ஸ்டைலா இருக்கு. இதை சார்ஜ் பண்ண 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் குடுத்திருக்காங்க. ஒருவாட்டி சார்ஜ் போட்டா மூணு நாளைக்கு கவலையே இல்லை பாஸ்! டிஸ்ப்ளேவை பொறுத்தவரை 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் இருக்குறதால வெயில்ல வச்சு பார்த்தாலும் ஸ்கிரீன் பளிச்சுனு தெரியும்.
ஜனவரி 6, 2026-ல இந்த போன் இந்தியாவுல லான்ச் ஆகுது. இதோட விலை ₹35,000-லிருந்து ₹40,000 பட்ஜெட்ல இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட்ல இதோட டீஸர் இப்போவே அனல் பறக்குது. நீங்க இந்த 7000mAh பேட்டரி போனுக்காக வெயிட் பண்றீங்களா? இல்ல வேற ஏதாச்சும் போன் ஐடியாவுல இருக்கீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்