சாம்சங்-ல இருந்து ஒரு "கனெக்டிவிட்டி" புரட்சி! டவர் இல்லாத காட்டுல கூட இனி போன் பேசலாம். Galaxy S26-ல் வரப்போகும் அந்த மேஜிக் பீச்சர்

சாம்சங் நிறுவனம் தனது அடுத்த பிளாக்ஷிப் மாடலான Galaxy S26 தொடரில் முழுமையான சாட்டிலைட் வாய்ஸ் கால் வசதியை அறிமுகம் செய்யவுள்ளது.

சாம்சங்-ல இருந்து ஒரு
ஹைலைட்ஸ்
  • புதிய Exynos Modem 5410 சிப்செட் மூலம் எமர்ஜென்சி மெசேஜ் மட்டுமின்றி முழு
  • மொபைல் டவர் இல்லாத கடல், பாலைவனம் மற்றும் மலைப்பகுதிகளிலும் தடையற்ற நேரடி
  • முந்தைய மாடல்களை விட பேட்டரி பயன்பாட்டைக் குறைக்கும் 4nm EUV தொழில்நுட்பம
விளம்பரம்

நம்ம ஊர்ல மலைக்கோ இல்ல அடர்ந்த காட்டுக்கோ டூர் போனா முதல்ல நடக்குற விஷயம் என்ன? "டவர் இல்லைப்பா, போன் பேச முடியல"னு சொல்லுவோம். ஆனா, 2026-ல வரப்போற Samsung Galaxy S26 இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்போகுது. ஆமாங்க, இனி டவர் இல்லனாலும் நீங்க டைரக்டா சாட்டிலைட் (Satellite) வழியா வாய்ஸ் கால் பேசிக்கலாம். ஐபோன் 14-ல இருந்தே ஆப்பிள் நிறுவனம் சாட்டிலைட் கனெக்டிவிட்டி குடுத்திருந்தாங்க. ஆனா அது வெறும் எமர்ஜென்சி மெசேஜ் அனுப்புறதுக்கு மட்டும் தான் இருந்துச்சு. ஆனா சாம்சங் இப்போ "அடுத்த லெவலுக்கு" போயிட்டாங்க. அவங்க ரிலீஸ் பண்ணிருக்க Exynos Modem 5410 அப்படிங்கிற சிப்செட், சாட்டிலைட் மூலமா வாய்ஸ் கால் மட்டும் இல்லாம வீடியோ கால் கூட பண்ற அளவுக்கு பவர்ஃபுல்லானது.

தொழில்நுட்ப ரகசியம் என்ன?

இந்த மோடம்ல மூணு முக்கியமான விஷயங்களை சாம்சங் சேர்த்திருக்காங்க:

  1. LTE DTC (Direct to Cell): இதுதான் அந்த மாஸ் பீச்சர். ஸ்பெஷல் ஆன்டெனா எதுவுமே இல்லாம, உங்க போன்ல இருந்தே நேரடியா சாட்டிலைட் மூலமா பேச இது உதவும்.
  2. NB-IoT NTN: டவர் சுத்தமா இல்லாத பாலைவனம் இல்லனா கடல்ல நீங்க இருந்தா கூட, உங்க லொகேஷனை துல்லியமா ஷேர் பண்ண இது உதவும்.
  3. NR-NTN: இதுதான் எதிர்காலத்துல சாட்டிலைட் மூலமா வீடியோ கால் பண்றதுக்கு வழிவகை செய்யும்.

பேட்டரி கவலை வேணாம்:

சாதாரணமா சாட்டிலைட் சிக்னலை பிடிக்க போன் ரொம்ப பவரை இழுக்கும். ஆனா இந்த 5410 மோடம் 4nm EUV ப்ராசஸ்ல உருவானதுனால, பேட்டரி ரொம்ப கம்மியா தான் செலவாகும்னு சாம்சங் உறுதி குடுத்திருக்காங்க. இது சாம்சங்கோட முதல் 2nm சிப்செட் (Exynos 2600) கூட சேர்ந்து வரும்போது, பெர்ஃபார்மன்ஸ் சும்மா தெறிக்கும். பிப்ரவரி 2026-ல நடக்குற 'அன்பேக்டு' (Unpacked) ஈவென்ட்ல இந்த S26 சீரிஸ் வெளியாகும். அமெரிக்காவுல ஸ்னாப்டிராகன் X85 மோடம் மூலமாவும், மத்த நாடுகள்ல சாம்சங்கோட எக்சினோஸ் மோடம் மூலமாவும் இந்த சாட்டிலைட் வசதி கிடைக்கும்னு எதிர்பார்க்கப்படுது. காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டாலும் சரி, கடலுக்கு நடுவுல இருந்தாலும் சரி.. இனி உங்க சாம்சங் போன் இருந்தா நீங்க யாருகிட்ட வேணும்னாலும் பேசலாம். இந்த வசதி உங்களுக்கு பிடிச்சிருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க!சாதாரணமா சாட்டிலைட் சிக்னலை பிடிக்க போன் ரொம்ப பவரை இழுக்கும். ஆனா இந்த 5410 மோடம் 4nm EUV ப்ராசஸ்ல உருவானதுனால, பேட்டரி ரொம்ப கம்மியா தான் செலவாகும்னு சாம்சங் உறுதி குடுத்திருக்காங்க. இது சாம்சங்கோட முதல் 2nm சிப்செட் (Exynos 2600) கூட சேர்ந்து வரும்போது, பெர்ஃபார்மன்ஸ் சும்மா தெறிக்கும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் ...மேலும்

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  2. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  3. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  4. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  5. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  6. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
  7. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்! ரூ.1457 பெனிபிட்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
  8. Pixel 10a வந்தாச்சு மக்களே! தரமான கேமரா, வேற லெவல் பேட்டரி.. ஐபோனுக்கு செம்ம டஃப் கொடுக்கும் போலயே
  9. இனி டேட்டா கேபிள் தேவையில்லை! Pixel 9 போன் வச்சிருக்கீங்களா? ஐபோனுக்கு அசால்ட்டா ஃபைல் அனுப்பலாம்
  10. மே 19-ல் கூகுள் போடப்போகும் மெகா பிளான்! Android 17 முதல் Gemini AI வரை - முழு விபரம் இதோ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »