மதுபானங்களை வீட்டிற்கே டெலிவரி செய்யும் ஸ்விக்கி! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 22 மே 2020 11:03 IST
ஹைலைட்ஸ்
  • ஸ்விக்கி & ஜொமாடோ செயலியில் 'ஒயின் ஷாப்ஸ்' வசதி சேர்க்கப்பட்டுள்ளது
  • உத்தியோகபூர்வ ஐடி இல்லாமல் மதுவை ஆர்டர் செய்ய முடியாது
  • இந்த வசதி தற்போது, ​ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மட்டுமே கிடைக்கிறது

ராஞ்சியில் மதுபான சேவையை தொடங்கியது ஸ்விக்கி

Swiggy மற்றும் ஜொமாடோ இப்போது வரை வீட்டிற்கே உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றன. ஆனால், இப்போது இந்த இரண்டு நிறுவனங்களும் கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது, உங்கள் பொழுதுபோக்கிற்கான தீர்வைக் கண்டறிந்துள்ளன. இப்போது இந்த இரண்டு உணவு விநியோக நிறுவனங்களும் உங்களுக்காக மதுபானங்களை வீட்டிற்கே டெலிவரி செய்யும். தற்போது இந்த வசதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மட்டுமே கிடைக்கிறது.மேலும், வரும் நாட்களில் மாநிலத்தின் பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். 

ஸ்விக்கியிலிருந்து மதுவை ஆர்டர் செய்ய, நிறுவனம் தனது செயலியில் 'ஒயின் ஷாப்ஸ்' என்ற புதிய வசதியை சேர்த்துள்ளது. உங்களுக்கு பிடித்த மதுபானத்தை வரிசையில் நிற்காமல் இங்கே ஆர்டர் செய்யலாம். ஸ்விக்கியைப் போலவே, ஜொமாடோவும் இந்த வசதியை அதன் செயலியில் சேர்த்துள்ளது.

மது ஆர்டர்களுக்கு வயது சரிபார்ப்பு மற்றும் பயனர் அங்கீகாரம் கட்டாயம் தேவைப்படும்

அம்சத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பொருட்டு வயது சரிபார்ப்பு மற்றும் பயனர் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ஸ்விக்கி கேட்ஜெட்ஸ் 360-க்கு கூறியது. வயது சரிபார்ப்புக்கு, ஆர்டர் செய்யும் போது பயனர் தங்கள் அரசு அடையாளத்தை பதிவேற்ற வேண்டும். நம்பகத்தன்மைக்கு, பயனர் தனது செல்ஃபியையும் அனுப்ப வேண்டும். டெலிவரியின் போது வாடிக்கையாளர் நம்பகத்தன்மை OTP மூலம் சரிபார்க்கப்படும்.

ஸ்விக்கி, மதுபான ஆர்டர்களும் ஒரு குறிப்பிட்ட அளவில் எடுக்கப்படும், மாநில சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருக்காது என்று கூறியது.

ராஞ்சியில் தனது நிறுவனம் மதுபானங்களை வீட்டிற்கே வழங்கத் தொடங்கியுள்ளதாக Zomato-வும் கேட்ஜெட்ஸ் 360-க்குத் தெரிவித்தது. இருப்பினும், பயனரின் நம்பகத்தன்மையை அறிய என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை ஜொமாடோ இன்னும் தெளிவுபடுத்தவில்லை. இந்த வசதியை ஜார்கண்ட் மாநிலத்தில் பிற நகரங்களிலும் வரும் நாட்களில் விரிவுபடுத்தப் போவதாகவும் ஜொமாடோ கூறியது.

நிச்சயமாக, இந்தியாவில் மதுபானங்களை வீட்டிற்கே வழங்குவதற்கான சட்டப்பூர்வ ஏற்பாடுகள் எதுவும் இல்லாததால், உணவு விநியோகத் துறையில் இது ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Swiggy, Zomato, Coronavirus, COVID 19, Alcohol
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங் கேலக்ஸி A56 5G விலை உயர்விற்கிடையே ரூ. 7,000 தள்ளுபடியில் கிடைக்கிறது; சலுகையைச் சரிபார்க்கவும்
  2. மோட்டோ G77 பவர் மற்றும் ஒன்ப்ளஸ் நோர்ட் CE 6 லைட் மற்றும் ஐகூ Z10R 5G: ரூ.30,000 விலைக்குள் எது சிறந்த தேர்வு?
  3. ஹீரோ விடா விஎக்ஸ்2 பிளஸ் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்: விலை, இயங்குதூரம் மற்றும் அம்சங்கள்
  4. சோனி லிங்க்பட்ஸ் கிளிப் இந்தியாவில் அறிமுகம்: திறந்த காது வடிவமைப்பு,37 மணிநேர பேட்டரி, விலை மற்றும் அம்சங்கள்
  5. மோட்டோ G77 பவர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: 7000mAh பேட்டரி, 50MP கேமரா, விலை மற்றும் சலுகைகள்
  6. Q2 2026-ல் சாம்சங் முதலிடம், ஆப்பிள் 4% வளர்ச்சி, உலகளாவிய தொலைபேசி ஏற்றுமதி சரிவு
  7. லாவா விராட் V1 5ஜி மற்றும் 4ஜி போன்கள் ஜூலை 21-ல் இந்தியாவில் அறிமுகம்; வடிவமைப்பு மற்றும் வண்ணங்கள் கசிவு
  8. ரெட்மி நோட் 17 இந்திய நிறங்கள், சேமிப்பக விவரங்கள் கசிவு; சீன வெளியீட்டுக்கு முன்பே முக்கிய அம்சங்கள் வெளியீடு
  9. ரேம் தட்டுப்பாட்டால் ஒன்ப்ளஸ் பேட் கோ 2 மற்றும் பேட் லைட் டேப்லெட் விலைகள் இந்தியாவில் கணிசமாக உயர்ந்துள்ளன
  10. ரெட்மி டர்போ 5 விமர்சனம்: பலரை ஈர்க்கும் கேமிங்-கிரேட் ஸ்மார்ட்போன்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.