ஜொமாடோ பயனர்கள் ஹோம்ஸ்கிரீனில் கிடைக்கும் ஜோமாடோ சந்தை பிரிவு வழியாகச் சென்று அதன் செயலியின் மூலம் மளிகை விநியோகத்தைப் பெறலாம்.
ஜொமாடோ அதன் சமீபத்திய நடவடிக்கைக்கு பல்வேறு உள்ளூர் மளிகைக் கடைகள் மற்றும் எஃப்எம்சிஜி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது
உலகையே நிலைகுலையச் செய்திருக்கும் கொரோனா வைரஸ் தொற்று (COVID-19) காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக மளிகை விநியோக கோரிக்கைகள் வேகமாக வளர்ந்துள்ளதையடுத்து, மக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை Zomato வழங்கவுள்ளது. இதனை, ஜோமாடோ தலைமை நிர்வாக அதிகாரி தீபீந்தர் கோயல் ஒரு வலைப்பதிவு மூலம் அறிவித்தார்.
ஜொமாடோ அதன் சமீபத்திய நடவடிக்கைக்கு பல்வேறு உள்ளூர் மளிகைக் கடைகள் மற்றும் எஃப்எம்சிஜி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஜொமாடோ பயனர்கள் ஹோம்ஸ்கிரீனில் கிடைக்கும் ஜோமாடோ சந்தை பிரிவு வழியாகச் சென்று அதன் செயலியின் மூலம் மளிகை விநியோகத்தைப் பெறலாம். இது, முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த சேவையை அறிவித்துள்ளது.
ஸ்விக்கியும் நாட்டின் பல பகுதிகளில் மளிகை விநியோக சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது.
பிக் பேஸ்கெட் மற்றும் க்ரோஃபர்ஸ் போன்ற ஆன்லைன் மளிகை விநியோக தளங்கள் இந்திய நுகர்வோரின் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதில் சவால்களை எதிர்கொள்கின்றன. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்களும் தங்கள் தளங்களில் இருந்து மளிகை மற்றும் வீட்டு அத்தியாவசிய ஏற்றுமதிகளை அதிகரிக்க கடுமையாக முயற்சி செய்கின்றன.
இறுதியாக, பேடிஎம்-மும் தனது செயலியின் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கியது. மேலும், ஷாப் க்ளூஸ்-ம் அதன் தளத்தில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Meant For You (2025) Now Streaming Online: What You Need to Know About this Turkish Film