நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், நாளையுடன் நிறைவடைய இருந்த 21 நாட்கள் ஊரடங்கு, தற்போது பல மாநிலங்களில் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். மேலும், மளிகை பொருட்கள், மருந்தகங்கள் இயங்குவதற்கான நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு காரணமாக நாட்டில் போக்குவரத்து தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. பல ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் டெலிவரி ஸ்லாட்டுக்கு வெளியே உள்ளன. அப்படி ஆர்டர் செய்தாலும், பொருட்கள் வருவதற்கு ஒரு வாரம் ஆகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், Swiggy, இந்தியாவின் 125-க்கும் மேற்பட்ட நகரங்களில் தனது ‘மளிகை' டெலிவரி பிரிவை தொடங்கியுள்ளது. மளிகை கடைகளில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக, இரண்டு மணி நேரத்தில் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் என்று ஸ்விக்கி கூறுகிறது. இந்த அம்சத்திற்காக ஸ்விக்கி, தேசிய பிராண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
ஸ்விக்கி செயலியின் உள்ளே ‘மளிகை' டேப் உள்ளது. அதைக் கிளிக் செய்வதன் மூலம், அருகிலுள்ள அனைத்து சேவை கடைகளையும் காண்பிக்கும். பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கடையில் கிடைக்கும் மளிகை பொருட்களை தேர்வு செய்து ஆர்டர் செய்யலாம். ஸ்விக்கி வழியாக வாங்கும் நபர்கள் ப்ரீபெய்ட் ஆர்டர்களில் ‘தொடர்பு இல்லாத' டெலிவரியையும் தேர்வு செய்யலாம். பயனர், தொடர்பு இல்லாத விநியோகத்தை தேர்வுசெய்தால், உங்கள் வீட்டு வாசலில் ஆர்டர் வழங்கப்பட்டவுடன் ஸ்விக்கி டெலிவரி நபர் உங்களுக்கு கால் செய்வார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்