அன்றாட வாழ்க்கையில் மனிதன் அண்ணாந்து பார்க்கும் சில அதிசய வான்வெளி நிகழ்வுகள்தான் சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும். சூரிய கிரகணத்தை விட சந்திர கிரகணம் அடிக்கடி நிகழ்வது. ஆயினும் அவை மிகவும் அழகானவை. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த சந்திர கிரகணத்திற்கு நாசா 'Wolf Moon Eclipse' என்ற பெயரைச் சூட்டியுள்ளது. கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், இந்த கிரகண நிகழ்வை இந்தியாவிலும் பார்க்கலாம் என்பதே. இன்னும் சொல்லப்போனால் இந்த சந்திர கிரகணத்தை ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் பார்க்கலாம் என்று நாசா அறிவித்துள்ளது. இந்த ஆண்டு நிகழவிருக்கும் 4 சந்திர கிரகணங்களில் இது முதலாவது.
சந்திர கிரகணம் என்பது நிலவுக்கும் சூரியனுக்கும் இடையே நமது பூமி கடக்கும்போது நடக்கும் ஒரு அரிய நிகழ்வு. இந்த நிகழ்வால் பூமியில் விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு (அதாவது மூன்று கோள்களும் கடக்கும் வரை) சற்றே தெளிவற்று காணப்படும். இந்த நிலையால் நம் பூமியின் நிழல் நிலவின் மீது விழும். கிரகணம் உச்சியில் வரும்போது நிலவின் வெளிப்புற அடுக்கு பூமியின் நிழலில் மீது விழும். மேலும் கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது 90 சதவிகித நிலவு பூமியால் மறைக்கப்படும். இந்த நிகழ்வால் நிலவின் ஒளி மங்கும், பிறநாட்களில் காட்சியளிப்பது போல இருக்காது. முன்பே குறிப்பிட்டது போல ஜனவரி 10ம் தேதி தோன்றும் சந்திர கிரகணத்தைப் போல இன்னும் மூன்று கிரகங்கள் தோன்ற உள்ளன. அவை இந்த ஆண்டு ஜூன் 5, ஜூலை 5 மற்றும் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் நிகழவுள்ளது.
முன்பே குறிப்பிட்டது போல இந்த சந்திர கிரகண நிகழ்வு ஜனவரி 10ம் தேதி, அதாவது வரும் வெள்ளியன்று இந்திய நேரப்படி சரியாக இரவு 10 மணி 37 நிமிடங்களுக்குத் தொடங்கி அடுத்த நாள் ஜனவரி 11ம் தேதி காலை 2 மணி 42 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவிலும் இந்த கிரகணம் தெரியும் என்று முன்பே கூறினோம். அது போல ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நிகழ்வு தென்படும். ஆனால் துரதிர்ஷ்ட்டவசமாக இந்த அதிசய நிகழ்வினை அமெரிக்காவில் காணமுடியாது. காரணம் அந்நேரத்தில் அங்கு பகல் நேரம் நிலவும். இருப்பினும் CosmoSaoiens இந்த நிகழ்வினை நேரலை செய்ய உள்ளனர். கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நீங்கள் அதைக் காணலாம்.
நம் மனதில் அடுத்து எழும் கேள்வி இந்த நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கலாமா என்பதே. சூரிய கிரகணத்தைப் பார்க்கத்தான் பிரத்யேக கண்ணாடிகள் வேண்டுமே தவிர சந்திர கிரகண நிகழ்வை நாம் நம் வெறும் கண்களால் பார்க்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்