399 ரூபாயில் ரியல்மியின் அட்டாசமான புதிய இயர்போன் அறிமுகம்!

399 ரூபாயில் ரியல்மியின் அட்டாசமான புதிய இயர்போன் அறிமுகம்!

ரியல்மி டீசர்ட் ஒன்றும் அறிமுகமாகியுள்ளது

ஹைலைட்ஸ்
  • Realme Buds Classic feature an in-line remote to control music and calls
  • The earbuds have a 3.5mm connector
  • Realme Buds Classic compete against Xiaomi’s Mi Earphones Basic
விளம்பரம்

ரியல்மி நிறுவனம் 399 ரூபாய்க்கு அட்டகாசமான இயர்பட்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்

கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் இயர்போனுக்கான 3.5mm ஜேக்கை அகற்றி வருகின்றனர். அதற்குப் பதிலாக தங்களுடைய ப்ளூடூத்  இயர்பட்ஸை அறிமுகம் செய்து வருகின்றனர். இதனிடையே, சாதாரணமாக வயர்ட் இயர்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இன்று வரையில் அதை மட்டுமே எளிதாகப் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், ரியல்மி நிறுவனம் 3.5mm இயர்போன் பிரியர்களுக்காக புதிதாக ஒரு இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன்  விலை வெறும் 399 ரூபாய் தான். முன்னதாக ரியல்மி C12 மற்றும் C15 ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த போது, ரியல்மி பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. 

அப்போது சாதாரணமான வயர் இயர்போனை கொண்டு வரும்படி பலரும் கருத்துக்களை பதிவிட்டனர். அதற்கு ஏற்றாற் போல, தற்போது 3.5mm இயர்போன் அறிமுகமாகியுள்ளது. இது HD வாய்ஸ் ரெக்கார்டிங் அம்சத்துடன் வந்துள்ளது.

இந்தக் ரியல்மி பட்ஸ் கிளாஸிக் இயர்போன் இரண்டு விதமான நிறங்களில் வருகிறது. கருப்பு மற்றும் வெள்ளை ஆகும். ஆகஸ்ட் 24 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் அமேசான் மற்றும் ரியல்மி ஆன்லைன் ஷாப்பிங்கில் இதனை வாங்கிக்கொள்ளலாம். 

இதே போல், ரியல்மி டீசர்ட் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 999 ரூபாய் மதிப்புள்ள இந்த டீசர்ட், செப்டம்பர் 4 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. .


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »