Vivo X300 Series-ன் இந்திய வெளியீட்டு தேதி டிசம்பர் 2 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
Photo Credit: Vivo
விவோ X300 தொடரின் வெளியீட்டு தேதி டீஸர்
எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருந்த மாஸ் லான்ச் அப்டேட் வந்திருக்கு.Vivo நிறுவனம் அவங்களுடைய ஃபிளாக்ஷிப் கேமரா சீரிஸ் ஆன Vivo X300 Series-ஐ இந்தியாவில் எப்போ லான்ச் பண்றாங்கன்னு இப்போ அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காங்க. Vivo X300 மற்றும் Vivo X300 Pro போன்கள் வரும் டிசம்பர் 2 அன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த லான்ச் ஒரு தனி ஈவென்ட்டா நடக்குமா, இல்ல சிம்பிளா இருக்குமான்னு தெரியல. ஆனா, Vivo-ன் சோஷியல் மீடியா மற்றும் YouTube சேனல்கள்ல நீங்க நேரலையா பார்க்கலாம்.
இந்த சீரிஸ்-ஓட அல்டிமேட் ஹைலைட்டே கேமரா தான். இது ZEISS-Tuned Triple Rear Camera Setup உடன் வருது.
● X300 Pro: இதுல 50MP Sony LYT-828 மெயின் கேமரா, 50MP சாம்சங் JN1 அல்ட்ரா-வைடு கேமரா, மற்றும் 200MP HPB APO Telephoto Camera (Telephoto-ல 200MP!) இருக்கும்.
● X300: இதுல 200MP HPB மெயின் கேமரா, 50MP Sony LYT-602 டெலிபோட்டோ கேமரா மற்றும் 50MP சாம்சங் JN1 அல்ட்ரா-வைடு கேமரா இருக்கும். இரண்டுலயுமே 50MP செல்ஃபி கேமரா உறுதி.
இந்த போன்கள் 3nm MediaTek Dimensity 9500 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கூடவே, போட்டோ மற்றும் வீடியோ ப்ராசஸிங்க்குனே Pro Imaging VS1 chip மற்றும் V3+ Imaging Chip போன்ற Dual Imaging Chips கொடுக்கப்பட்டிருக்கு. இது கேமரா அனுபவத்தை வேற லெவலுக்கு கொண்டு போகும். இது Android 16 அடிப்படையிலான OriginOS 6-ல இயங்கும்.
● ZEISS Telephoto Extender Kit: இந்த சீரிஸ்-க்காக Vivo ஒரு Telephoto Extender Kit-ஐ டீஸ் பண்ணியிருக்காங்க. இதுல Zeiss 2.35x Teleconverter Lenses இருக்கும். இதை கேமரா ஆப்-ல NFC மூலம் இணைச்சு, இமேஜ் துல்லியத்தை குறைக்காம ஆப்டிகல் ஜூமை அதிகப்படுத்தலாம்.
● India-Exclusive Red Colour: Vivo X300 Series-ஐ இந்தியாவுக்குன்னே ஒரு பிரத்யேகமான சிவப்பு வண்ணத்தில் (Red Colourway) கொண்டு வர்றதா உறுதி செஞ்சிருக்காங்க.
X300 Pro-வில் 6.78-இன்ச் டிஸ்பிளே மற்றும் 6,510mAh பேட்டரியும், X300-ல் 6.31-இன்ச் டிஸ்பிளே மற்றும் 6,040mAh பேட்டரியும் இருக்கலாம்னு தகவல் இருக்கு.
மொத்தத்துல, Vivo X300 Series அதன் 200MP Camera, Dimensity 9500 மற்றும் Dual Imaging Chips-ஓட போட்டோகிராபிக்கு ஒரு பெரிய திருப்புமுனையா இருக்கும்னு எதிர்பார்க்கலாம்.இந்த Vivo X300 Series-ன் 200MP Telephoto Camera உங்களுக்கு எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருக்கு? இந்தியா-பிரத்யேக சிவப்பு வண்ணம் உங்களுக்கு பிடிச்சிருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்