Vivo X300 மற்றும் X300 Pro மாடல்களின் இந்திய விலை வரம்பு லீக் ஆகியுள்ளது.
Photo Credit: Vivo
விவோ X300 ப்ரோவுடன் வரும் டெலிகன்வெர்ட்டர் கிட்டின் விலை ரூ. 20,999 ஆக இருக்கலாம்.
எல்லாரும் Vivo X300 Series லான்ச்-க்காக ரெடியா இருப்பீங்கன்னு நினைக்கிறேன். இந்த கேமரா கிங் போன்கள் வரும் டிசம்பர் 2 அன்று இந்தியாவில் லான்ச் ஆகுறது உறுதி. இந்த நிலையில, ஒரு டிப்ஸ்டர் மூலமா போன் மற்றும் Teleconverter Kit-ன் இந்திய விலை லீக் ஆகிருக்கு. முன்னாடி வந்த லீக்ஸ்ல இந்த போனோட அதிகபட்ச விலை ₹89,999 வரைக்கும் இருக்கலாம்னு சொல்லியிருந்தாங்க. இப்போ டிப்ஸ்டர் Sanju Choudhary (@saaaanjjjuuu) வெளியிட்ட தகவல்படி, இந்த போன்களின் ஆன்-சேல் விலை இதைவிட கம்மியா இருக்கும்னு சொல்லியிருக்காரு.
● 12GB RAM + 256GB Storage: சுமார் ₹74,999
● 16GB RAM + 512GB Storage: சுமார் ₹80,999
இந்த சீரிஸ்-ஓட Pro மாடலோட தனியா வாங்கக்கூடிய ZEISS 2.35x Teleconverter Kit-ன் விலையும் லீக் ஆகியிருக்கு. இதன் விலை ₹20,999 ஆக இருக்கலாம்னு சொல்லியிருக்காங்க. இந்த கிட், ஆப்டிகல் ஜூமை அதிகப்படுத்தி, இமேஜ் துல்லியத்தை குறைக்காம போட்டோ எடுக்க உதவும். இந்த Vivo X300 Series-ல Summit Red என்ற இந்தியா-பிரத்யேக கலர் ஆப்ஷன் கூட வரலாம்னு சொல்லியிருக்காங்க. குளோபல் மாடல்கள் Mist Blue, Phantom Black, மற்றும் Dune Brown போன்ற கலர்கள்ல வந்திருக்கு.
● சிப்செட்: 3nm MediaTek Dimensity 9500 சிப்செட், கூடவே V3+ மற்றும் VS1 Pro Imaging Chips.
● கேமரா: X300 Pro-ல 200MP Telephoto Camera, X300-ல 200MP Main Camera மற்றும் 50MP Telephoto Camera இருக்கும். இரண்டுலயும் 50MP செல்ஃபி கேமரா உறுதி.
● சாஃப்ட்வேர்: Android 16 அடிப்படையிலான OriginOS 6 (அல்லது Funtouch OS 15).
இந்த லீக் ஆன விலைகள், சமீபத்துல லான்ச் ஆன OnePlus 15-க்கு (₹72,999) ஒரு நேரடி போட்டியா இருக்கும்னு சொல்லலாம். Vivo X300 Series-ன் அதிகபட்ச சில்லறை விலை (MRP) ₹89,999 ஆக இருக்கலாம். ஆனா, ஆன்-சேல் விலை சலுகைகளோட தான் ₹74,999-க்கு கிடைக்கும்னு டிப்ஸ்டர் சொல்லியிருக்காரு.
மொத்தத்துல, Vivo X300 சீரிஸ் டிசம்பர் 2-ல ₹74,999 விலையில லான்ச் ஆனா, Dimensity 9500 சிப்செட் மற்றும் 200MP Camera பவரோட இந்திய மார்க்கெட்ல ஒரு பெரிய கேமரா ஃபிளாக்ஷிப் போனா இருக்கும். இந்த லீக் ஆன விலை மற்றும் Summit Red கலர் உங்களுக்கு பிடிச்சிருக்கா? Teleconverter Kit-க்கு ₹20,999 கொடுக்க நீங்க தயாரா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்