அமேசானின் பேசிக்கில் பயன்படுத்தப்படும் மின்பொருட்கள் பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்று அமேசானில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் கூறியுள்ளனர்
Amazon is facing issues with its private labels for some time
அமேசானின் சொந்த தயாரிப்பு பொருட்கள் தரம் குறைந்தவையாகும், எளிதில் தீப்பிடிக்கக்கூடியதாகவும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் ஆன்லைன் ஷாப்பிங்கில் முதல் இடத்தில் அமேசான் உள்ளது. இந்நிறுவனம் இந்தியா உட்பட அமெரிக்க, இங்கிலாந்து என பல்வேறு நாடுகளில் 'அமேசான் பேசிக்' என்ற பெயரில் சொந்த தயாரிப்புகளையும் விற்பனை செய்து வருகிறது. மைக்ரோவேவ் ஓவன், பேட்டரி, USB கேபிள், மல்டி பிளக் பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அமேசான் தயாரித்து விற்பனை செய்கிறது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை அமேசான் தளத்தில் தேடும் போது, முதல் இடத்தில் அமேசானின் சொந்த தயாரிப்புகள் காட்டப்படுவதால் அதிகளவு விற்பனையாகிறது.
இந்த நிலையில், அமேசானின் சில சொந்த தயாரிப்பு பொருட்கள் தரம் குறைந்தவையாக உள்ளதாகவும், தீப்பிடித்து வருவதாகவும் CNN செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக CNN நிறுவனம் அமேசானின் மைக்ரோ வேவ் ஓவனை மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் இன்ஜினியரிங் ஆராய்ச்சித்துறைக்கு அனுப்பி வைத்து சோதனை செய்தது. அதில், மைக்ரோவேவ் ஓவனின் பேனல் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதே போல், அமேசானில் வாடிக்கையாளர் பதவிட்ட கருத்துகளை ஆராயும் போது, மொபைலில் சார்ஜ் ஏற்றுவதற்காக அமேசானின் USB கேபிளை பயன்படுத்தும் போது மின்சக்தி தாங்காமல் எளிதில் உருகுவதாகவும், புகை வருவதாகவும் வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அமேசானின் சொந்த தயாரிப்பில் வாங்கப்பட்ட மல்டி ஜங்ஷன் பிளக் பாயிண்ட் ஒன்று தீப்பிடித்தாகவும் செய்திகள் வந்துள்ளன.
இதே போல் பல வாடிக்கையாளர்கள் அமேசானின் மல்டி பிளக்பாயிண்ட் தீப்பிடிப்பதாக குற்றம்சாட்டினர். பின்னர், அந்த பொருள் அமேசான் தளத்தில் இருந்து அகற்றப்பட்டது.
இதுகுறித்து அமேசானில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் கூறுகையில், அமேசானின் பேசிக்கில் பயன்படுத்தப்படும் மின்பொருட்கள் பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்றும், அவைகளில் பல இந்தியாவில் தான் விற்கப்படுவதாகவும் CNN செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.
![]()
AmazonBasics USB cable seem to have quality issues in India as well
Which are the best truly wireless earphones under Rs. 10,000? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series