எம்ஐ டிவி ஸ்டிக் மூலமாக நெட்ஃபிலிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, டிஸ்னி ஹாட்ஸ்டார், HBO, Spotify உள்ளிட்ட தளங்களில் திரைப்படங்கள், சீரியல், டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.
 
                ஆகஸ்ட் 7 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்த டிவி ஸ்டிக் விற்பனைக்கு வருகிறது
இந்தியாவில் எம்ஐ டிவி ஸ்டிக் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
அமேசான் ஃபயர் ஸ்டிக் 3,999 ரூபாய்க்கு விற்கப்பட்டு வரும் நிலையில், அதற்குப் போட்டியாக ஷாவ்மி நிறுவனமும், புதிதாக டிவி ஸ்டிக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.2,799 ஆகும். ஆகஸ்ட் 7 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்த டிவி ஸ்டிக் விற்பனைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் இதனை mi.com, ஃபிளிப்கார்ட், எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ் தளங்களில் பெற்றுக் கொள்ளலாம். 
சிறப்பம்சங்கள்:
எம்ஐ டிவி ஸ்டிக் குவாட் கோர் கார்டெக்ஸ்-A53 சிபியூ தளத்தில் செயல்படுகிறது. 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. ஆண்ட்ராய்டு 9 தளத்தில் இயங்கும் இந்த டிவி ஸ்டிக்கில், வைஃபை, ப்ளூடூத் ஆதரவும் உள்ளது. 
டிவியில் உள்ள மைக்ரோ USB போர்ட் மூலம் இதை ஆன் செய்யலாம். HDMI போர்ட்டில் இணைத்துக் கொண்டு ஹெச்டி வீடியோக்களைப் பார்க்கலாம். இந்த டிவி ஸ்டிக்கின் எடை வெறும் 28.5 கிராம் தான். 
எம்ஐ டிவி ஸ்டிக் VP9-10, H.265, H.264, VC-1, MPEG1/2/4, and ரியல்8/9/10 ஆகிய டைப் வீடியோக்கள் சப்போர்ட் செய்கிறது. இதே போல், Dolby மற்றும் DTS ஒலியும் வழங்குகிறது. 1,920x1,080 பிக்சல்கள் வரையில் 60fps இல் வீடியோ ஸ்ட்ரீம் செய்யலாம்.
எம்ஐ டிவி ஸ்டிக் மூலமாக நெட்ஃபிலிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, டிஸ்னி ஹாட்ஸ்டார், HBO, Spotify உள்ளிட்ட தளங்களில்  திரைப்படங்கள், சீரியல், டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.  கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக 5,000 க்கும் அதிகமான ஆப்ஸ்களைப் பயன்படுத்த முடியும்.
எம்ஐ டிவி ஸ்டிக் ரிமோட்டில் வாய்ஸ் கன்ட்ரோல் வசதியும் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட டிவைஸ்களுக்கு குரோம்காஸ்ட் ஆதரவும் அளிக்கிறது. 
Is Nord the iPhone SE of the OnePlus world? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
 iPhone 17 Series, iPhone Air Join Apple’s Self Service Repair Programme Across US, Canada and Europe
                            
                            
                                iPhone 17 Series, iPhone Air Join Apple’s Self Service Repair Programme Across US, Canada and Europe
                            
                        
                     iQOO 15 Indian Variant Allegedly Surfaces on Geekbench With Snapdragon 8 Elite Gen 5 Chipset
                            
                            
                                iQOO 15 Indian Variant Allegedly Surfaces on Geekbench With Snapdragon 8 Elite Gen 5 Chipset
                            
                        
                     Apple CEO Reportedly Confirms Partnership Plans Beyond OpenAI; Revamped Siri Expected to Launch in 2026
                            
                            
                                Apple CEO Reportedly Confirms Partnership Plans Beyond OpenAI; Revamped Siri Expected to Launch in 2026
                            
                        
                     Scientists May Have Finally Solved the Sun’s Mysteriously Hot Atmosphere Puzzle
                            
                            
                                Scientists May Have Finally Solved the Sun’s Mysteriously Hot Atmosphere Puzzle