Poco F8 Series-ன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி நவம்பர் 26 என உறுதி செய்யப்பட்டுள்ளது
போகோ எஃப்8 தொடர் நவம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது.
எல்லாரும் ஆவலோட எதிர்பார்த்துட்டு இருந்த Poco F சீரிஸ் பத்தின ஒரு மாஸ்ஸான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கு! Poco F8 Series லான்ச் தேதி இப்போ கன்ஃபார்ம் ஆயிருக்கு. Poco நிறுவனம், நவம்பர் 26 அன்று இந்தோனேஷியாவின் பாலி-யில, அடுத்த தலைமுறை Poco F8 Series போன்களை உலகளவில் அறிமுகப்படுத்த போறாங்கன்னு உறுதி செஞ்சிருக்காங்க. இந்த சீரிஸ்ல Poco F8, Poco F8 Pro, மற்றும் Poco F8 Ultra என மூன்று மாடல்கள் இருந்தாலும், லான்ச் ஈவென்ட்ல F8 Pro மற்றும் F8 Ultra மட்டும்தான் அறிமுகமாக வாய்ப்பிருக்கு.அல்ட்ரா பவர்ஃபுல் சிப்செட்,Poco F8 Ultra: இந்த டாப்-எண்ட் மாடல், சக்திவாய்ந்த Snapdragon 8 Elite Gen 5 சிப்செட்-ஓட வரும்னு ஏற்கனவே Geekbench லீக்ஸ் மூலமா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Poco F8 Pro: இந்த மாடல் Snapdragon 8 Elite சிப்செட்-ஓட வரும்னு எதிர்பார்க்கப்படுது.
இரண்டு மாடல்களுமே Android 16 அடிப்படையிலான Xiaomi-ன் HyperOS 3 உடன் வரலாம்.
Poco F8 Ultra-வில் Triple 50MP Camera செட்டப் இருக்கும்: 50MP மெயின் கேமரா (OIS உடன்), 50MP அல்ட்ரா-வைடு மற்றும் 50MP Periscope Telephoto கேமரா (5x ஆப்டிகல் ஜூம்). முன்பக்கத்துல 20MP செல்ஃபி கேமரா இருக்கலாம். Poco F8 Pro-வில் 50MP மெயின் கேமரா (OIS), 8MP அல்ட்ரா-வைடு மற்றும் 50MP டெலிபோட்டோ (2x ஆப்டிகல் ஜூம்) கேமரா இருக்கும்.
இந்த சீரிஸ் போன்கள் Redmi K90 மற்றும் K90 Pro Max-ன் ரீபிராண்டட் வெர்ஷனா இருக்கலாம்னு சொல்லப்படுது.
● F8 Ultra-வில் 7,560mAh Battery இருக்கலாம்.
● இரண்டு போன்களுமே 100W Wired Charging சப்போர்ட் பண்ணும். F8 Ultra-வில் 50W Wireless Charging ஆதரவும் இருக்கலாம்.
இந்த போன்கள்ல 1.5K ரெசல்யூஷன், 120Hz Refresh Rate கொண்ட OLED Display இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. மேலும், F8 Ultra-வில் கூடுதல் Rear Speaker இருக்கவும் வாய்ப்பிருக்கு.
மொத்தத்துல, Poco F8 Series Snapdragon 8 Elite Gen 5, 100W Charging மற்றும் Triple 50MP Camera போன்ற டாப்-எண்ட் அம்சங்களோட நவம்பர் 26-ல் மார்க்கெட்டே அதிர வைக்கப் போகுது. இந்த லான்ச் ஈவென்ட்ல இந்தியாவுக்கான விலை விவரங்களும் வெளியாகும்னு எதிர்பார்க்கலாம். இந்த Poco F8 Series லான்ச் உங்களுக்கு எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருக்கு? F8 Ultra-ன் Snapdragon 8 Elite Gen 5 பவர் போதுமா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்