சியோமி நிறுவனம் தனது Mi 'சூப்பர் பாஸ்' வயர்லெஸ் ஹெட்போனை (Mi Super Bass Wireless Headphones) இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 1,799 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ள இந்த வயர்லெஸ் ஹெட்போன், சியோமியின் மலிவு விலை சாதனங்கள் பட்டியலில் இணைந்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் ப்ரைம் டே விற்பனையன்று அறிமுகமாகியுள்ள இந்த ஹெட்போன், அமேசான் ப்ரைம் டே சேலில் விற்பனையும் ஆகவுள்ளது. அமேசான் நிறுவனம், இந்த விற்பனையில் ஆயிரக்கணக்கான தயாரிப்புகளில் இந்த மலிவு விலை வயர்லெஸ் ஹெட்போனும் ஒன்று.
சிவப்பு-கருப்பு மற்றும் சிவப்பு-தங்கம் என இரு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த ஹெட்போனை, அமேசான் மற்றும் Mi தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால், 20 மணி நேரம் வரை நீடிக்கும் பேட்டரி அளவை கொண்டுள்ளது, இந்த 'சூப்பர் பாஸ்' வயர்லெஸ் ஹெட்போன். மேலும், 40mm டைனமிக் டிரைவர் மற்றும் ப்ளூடூத் v5.0 தொடர்பையும் கொண்டுள்ளது இந்த ஹெட்போன். அதுமட்டுமின்றி, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியை இந்த ஹெட்போன் மூலம் நேரடியாக செயல்படுத்திக்கொள்ளலாம்.
பெயரில் குறிப்பிடப்பட்டிருப்பது போலவே, இந்த ஹெட்போன் சக்திவாய்ந்த பாஸ் திறனை கொண்டுள்ளது.
இந்த ஹெட்போனை சார்ஜ் செய்துகொள்ள மைக்ரோ-USB போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சார்ஜ் இல்லாத நேரங்களில், இந்த ஹெட்போனை சாதாரன ஹெட்போன் போலவும் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு, ஸ்மார்ட்போன்களில் இணைத்துக்கொள்ள 3.5mm சாக்கெட்டும் இந்த ஹெட்போனுடன் வழங்கப்பட்டுள்ளது..
இந்த ஹெட்போன், தற்போது சந்தையிலுள்ள போட் ராக்கர்ஸ் 400 (Boat Rockerz 400) மற்றும் ஏன்ட் ஆடியோ ட்ரிபில் 900 (Ant Audio Treble 900) ஆகிய மலிவு விலை வயர்லெஸ் ஹெட்போன்களுக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஹெட்போனுடன் 4,999 ரூபாய் மதிப்பில் Mi சவுண்ட்பாரையும் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்