சியோமி நிறுவனம் சார்பில் இதுவரை சுமார் 1 மில்லியன் எம்ஐ பேண்ட 3 ஸ்மார்ட் வாட்ச்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
110mAh Li-ion பேட்டரியை கொண்ட இந்த ஸ்மார்ட் வாட்ச் ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் வரை பயன்படத்த முடியும் எனக் கூறப்படுகிறது
தற்போது உலக அளவுவில் மிகவும் பிரபலமாகியுள்ள ஸ்மார்ட் வாட்ச்களில் எம்ஐ பேண்ட் 3-யும் அடங்கும். கொடுத்த பணத்திற்கு தக்க மதிப்பைப் பெற்றுள்ளதாக இந்த ஸ்மார்ட் வாட்ச்சிற்கு நல்ல பெயர் உள்ளது. இந்நிலையில், இந்த எம்ஐ பேண்ட் 3 ஸ்மார்ட்வாட்ச்கள் இந்தியாவில் மட்டும் சுமார் 1 மில்லியன் யுனிட்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எம்ஐ பேண்ட் 3 ஸ்மார்ட் வாட்ச் பிரபல ஆன்லைன் தளங்கள் மற்றும் ஆஃப்லைன் கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய விற்பனை சாதனையால் உலகில் அதிக விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட் வாட்ச்கள் பிராண்டில் இரண்டாம் இடத்தை சியோமி எம்ஐ பேண்ட் 3 ஸ்மார்ட் வாட்ச்கள் பிடித்துள்ளது.
இதற்கான முக்கிய காரணமாக இந்த தயாரிப்பின் ஸ்டெப் டிராக்கிங், பிரகாசமான திரை மற்றும் நீண்ட பேட்டரி பவர் போன்றவைகளாகும். 0.78 இஞ்ச் ஓலெட் திரை கொண்ட எம்ஐ பேண்ட் 3 ஸ்மார்ட் வாட்ச்கள் ஸ்வைப் வசதியைப் பெற்றுள்ளது.
110mAh Li-ion பேட்டரியை கொண்ட இந்த ஸ்மார்ட் வாட்ச் ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் வரை பயன்படத்த முடியும் எனக் கூறப்படுகிறது. புளூடூத் 4.2 கனெக்டிவிட்டி மற்றும் ஆண்ட்ராய்டு 4.4 அல்லது ஐஓஎஸ் 9.0 மென்பொருள்ள கொண்டுள்ளதால் இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் இதயத் துடிப்பு, தூக்கதின் அளவு மற்றும் நாம் உணவின் மூலம் எடுத்துக்கொள்ளும் கலோரி போன்ற பல தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Amazon Great Republic Day Sale 2026 Date Announced: See Bank Discounts, Offers