Photo Credit: YouTube/ Realme India
ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் யூடியூபில் சமீபத்திய #AskMadhav எபிசோடில் வரவிருக்கும் ரியல்மி ஸ்மார்ட்வாட்சின் முதல் தோற்றத்தை வழங்கினார். இந்த ஸ்மார்ட்வாட்ச் மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ஷெத் குறிப்பிட்டார். ரியல்மி ஸ்மார்ட்வாட்சில் சதுர வடிவ டயல் மற்றும் கருப்பு பட்டை உள்ளது. ரியல்மி 6 ப்ரோவின் ஊதா வேரியண்ட் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படுவதாகவும், ரியல்மி ப்ளூடூத் ஸ்பீக்கர்களை சந்தைக்குக் கொண்டுவருவதற்கும் நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் ஷெத் உறுதிப்படுத்தினார்.
#AskMadhav எபிசோட் வீடியோவில், ஷெத், வரவிருக்கும் ரியல்மி ஸ்மார்ட்வாட்சை அணிந்திருப்பதைக் காணலாம். ஆனால், ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஸ்மார்ட்வாட்ச் குறித்து எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. தனித்தனியாக, ரியல்மி 6 ப்ரோ ஒரு லைட்னிங் ஊதா கலர் ஆப்ஷனில் மிக விரைவில் வரும் என்று நிர்வாகி வெளிப்படுத்தினார். இந்த புதிய வீடியோவில் ஒரு வெள்ளை கலர் ஆப்ஷனும் காணப்படுகிறது. மேலும், இது எதிர்காலத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
முன் கேமரா ஸ்லோ மோஷன் மற்றும் யுஐஎஸ் போன்ற Realme 6 Pro-வின் பிரத்யேக அம்சங்களும் ஏப்ரல் மாதத்தில் Realme 6 பயனர்களுக்காக வெளிவருவது உறுதி. இருப்பினும், நைட்ஸ்கேப் 3.0 மற்றும் ட்ரைப்பாட் மோட் தற்போதுள்ள எந்த ரியல்மி போன்களுக்கும் வெளியிடப்படாது. மேலும், மேம்படுத்தப்பட்ட வன்பொருள் கொண்ட எதிர்கால போன்களில் மட்டுமே அவை வெளியிடும்.
ரியல்மி பேண்டிற்கு வரும் ஷெத், எதிர்காலத்தில் புதிய வாட்ச் முகங்களை எதிர்பார்க்கலாம் என்று கூறுகிறார். அழைப்பு அறிவிப்பு பிழைக்கான திருத்தம் செய்யப்பட்டுள்ளது, மேலும் பயனர்கள் தங்கள் சாதனங்களை கூகுள் பிளே ஸ்டோர் வழியாக புதுப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். குறிப்பிட்டுள்ளபடி, நிறுவனம் புளூடூத் ஸ்பீக்கர்களில் பணியாற்றி வருகிறது என்பதையும், மேலும் எதிர்காலத்தில் கூடுதல் தகவல்கள் பகிரப்படும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்