OnePlus Buds Pro 3 செவ்வாயன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது OnePlus Buds Pro 3 பற்றி தான்.
OnePlus Buds Pro 3 கடந்த செவ்வாயன்று இந்தியாவிலும் மற்ற உலகச் சந்தைகளிலும் அறிமுகமானது. இதில் 43 மணிநேரம் வரை பேட்டரி நீடிக்கும். வாட்டர் புரூப் IP55 மதிப்பீடு பெற்றுள்ளது. OnePlus Buds Pro 2 போலவே டிசைன் இருக்கிறது. புளூடூத் 5.4 இணைப்புடன் வந்துள்ளது. OnePlus அதன் இணையதளத்தில் Buds Pro 3 வெளியீடு பற்றி உள்ளது. ஓவல் வடிவ கேஸுடன் காட்டப்பட்டுள்ளன. மேலும் இந்த கேஸ் டிசைன் பாக்ஸி டிசைனைக் கொண்ட முந்தைய OnePlus இயர்பட்களில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் மாறியுள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள், அறிமுகம் குறித்த புதிய அறிவிப்புகளைப் பெற, இணையதளத்தில் உள்ள "Notify Me" பொத்தானைக் கிளிக் செய்யயலாம்.
இதுவரை வெளியான தகவல்படி, OnePlus Buds Pro 3 ஆனது IP55 மதிப்பீடு கொண்ட தூசி மற்றும் நீர் எதிர்ப்பு தரத்துடன் வந்துள்ளது. ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 உடன் ஒப்பிடும்போது 43 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ப்ளூடூத் 5.4 இணைப்பு மற்றும்6 மிமீ ட்வீட்டர், 11 மிமீ வூஃபர் மற்றும் இரட்டை இயக்கி அமைப்பை உள்ளடக்கியதாக இருக்கிறது. டிஜிட்டல்-டு-அனலாக் மாற்றி (DAC) மற்றும் 24-பிட்/192kHz ஆடியோவுடன் LHDC 5.0 ஆடியோ கோடெக்கை சப்போர்ட் செய்கிறது.. பட்ஸ் ப்ரோ 2 போலவே 49டிபியில் இருந்து 50டிபி வரை அடாப்டிவ் டெக்னாலஜி மூலம் இரைச்சலை ரத்து செய்வதாக நிறுவனம் கூறியுள்ளது.
Oppo Enco X2 என்கிற டேனிஷ் ஸ்பீக்கர் தயாரிப்பு நிறுவனமான Dynaudio மூலம் ஆல் டியூன் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் அணுகக்கூடிய EQ முன்னமைவுகள் Dynaudio ஆல் டியூன் செய்யப்படுகின்றன. மேலும் SBC, AAC மற்றும் LHDC 5.0 ஆடியோ கோடெக்குகளை ஆதரிக்கிறது. சார்ஜிங் கேஸில் சார்ஜ் செய்வதற்கான USB Type-C போர்ட் உள்ளது, ஆனால் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. 10 நிமிடங்களை விரைவாக சார்ஜ் செய்தால், 5.5 மணிநேரம் வரை பிளேபேக் கிடைக்கும். இயர்போன்களுடன் சேர்ந்து 61.38 கிராம் எடை கொண்டதாக உள்ளது.
வண்ணத்தை பொறுத்தவரையில் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 ஆனது ஆரஞ்சு கலர் ஆப்ஷனிலும் வந்துள்ளது. இது தவிர, மிட்நைட் ஓபஸ் மற்றும் லூனார் ரேடியன்ஸ் என்கிற 2 கலர்களில் அறிமுகமாகி உள்ளது. 10 நிமிட சார்ஜில் 5 மணிநேரம் மியூசிக்கை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. OnePlus Buds Pro 3 இந்தியாவில் ஆரம்ப விலை ரூ. 11,999 என்கிற அளவில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் இந்தியா இணையதளம் மற்றும் பிற ஆன்லைன் மற்றும் சில்லறை சேனல்கள் வழியாக ஆகஸ்ட் 23 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் வாங்குவதற்கு கிடைக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Microsoft to Host Xbox Partner Preview This Week, Featuring IO Interactive's 007 First Light
Apple Cracks Down on AI Data Sharing With New App Review Guidelines