சியோமி நிறுவனம் சார்பில் இன்று ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த போன்கள் மட்டுமில்லாமல் எம்ஐ டிவி 4A ப்ரோ 32 மற்றும் எம்ஐ ஸ்போர்ட்ஸ் புளூடூத் இயர்போன்ஸ் பேசிக் ஆகிய தயாரிப்புக்கள் இன்று அறிமுகமாகின. இன்று முதல் முன்பதிவு தொடங்குகின்ற நிலையில் விற்பனைக்கு வெளியாகும் நாள் இன்னும் அறியப்படவில்லை.
எம்ஐ டிவி 4A ப்ரோ 32 விலை மற்றும் அமைப்புகள்:
இந்தியாவல் ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படும் எம்ஐ டிவி 4A ப்ரோ 32 வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட், எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ஹோம் ஆகிய தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
32 இஞ்ச் தொலைக்காட்சியான இந்த தயாரிப்பு 60Hz மற்றும் ஹெச்டி திரையை கொண்டுள்ளது. 178 டிகிரி வியூவிங் ஆங்கில், 20W ஸ்பீக்கர்கள் மற்றும் ஆண்டுராய்டு டிவி ஆகிய வசதிகளுடன் வெளியாகுகிறது.
மேலும் 64-பிட் அம்லாஜிக் கோர்டெக்ஸ்- A53 பிராசஸ்சரை கொண்டுள்ள இந்த தயாரிப்பு 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி சேமிப்பு வசதிகளை கொண்டுள்ளது. குரோம்காஸ்ட் பில்டின், கூகுள் பிளே ஆக்சஸ், யூஎஸ்பி போர்ட், புளூடுத் பவர் கொண்ட எம்ஐ ரிமோர்ட், எர்த்னேட் போன்ற அமைப்புகள் வெளியாகியுள்ளது.
எம்ஐ ஸ்போர்ட்ஸ் புளூடூத் இயர்போன்ஸ் பேசிக்:
எம்ஐ ஸ்போர்ட்ஸ் புளூடூத் இயர்போன்ஸ் பேசிக் இந்தியாவில் ரூ.1,499க்கு விற்பனை செய்யபடுகிறது. இன்று முதல் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், சியோமி நிறுவனம் சார்பாக இன்னும் விற்பனைக்கு வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை.
மேலும் எம்ஐ.காம் மட்டுமின்றி மற்ற தளங்களில் விற்பனை செய்யப்படுமா என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த இயர்போன்ஸ் IPX4 சான்றிதழ் பெற்றுள்ளதால் வியர்வை மற்றும் தண்ணிர் துளிகளில் இருந்து இயர்போன்களை பாதுகாக்கும். இந்த இயர்போன்சில் கூகுள் உதவியாளரும், 9 மணிநேர பேட்டரி பவரும் இடம்பெற்றுள்ளது.
இதில் சிறப்பம்சமாக 5 சைஸ்களில் சிலிக்கான் இயர் பட்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்