'ஹானர் பேண்ட் 5' ஃபிட்னஸ் பேண்டின் முக்கிய சிறப்பம்சங்களில் AMOLED முழு வண்ண காட்சித்திரை, நிகழ்நேர இதய துடிப்பு மானிட்டர் ஆகியவை அடங்கும்.
Honor Band 5: ஃப்ளிப்கார்ட் வழியாக 'ஹானர் பேண்ட் 5' விற்பனையாகவுள்ளது
ஹவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் தனது சமீபத்திய ஸ்மார்ட் பேண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இது 'ஹானர் பேண்ட் 5' என அழைக்கப்படுகிறது. இந்த புதிய ஃபிட்னஸ் பேண்ட், உடல்நிலை கண்காணிப்பு மற்றும் அளவீட்டு தொழில்நுட்பத்தை குறைந்த போட்டி விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புதிய 'ஹானர் பேண்ட் 5' ஃபிட்னஸ் பேண்டின் முக்கிய சிறப்பம்சங்களில் AMOLED முழு வண்ண காட்சித்திரை, ஸ்டைலான வாட்ச் மற்றும் நிகழ்நேர இதய துடிப்பு மானிட்டர் ஆகியவை அடங்கும். முன்னதாக, இந்த 'ஹானர் பேண்ட் 5' கடந்த மாதம் சீனாவில் முதன்முறையாக அறிமுகமானது.
இந்தியாவில் இந்த 'ஹானர் பேண்ட் 5' ஃபிட்னஸ் பேண்ட் 2,599 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. மேலும் இந்த பேண்ட் மிட்நைட் நேவி (Midnight Navy), கோரல் பிங்க் (Coral Pink) மற்றும் மெடியோரைட் பிளாக் (Meteorite Black) ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். ஃப்ளிப்கார்ட் வழியாக இன்று முதல் இந்த பேண்டின் விற்பனை தொடங்கியுள்ளது. முன்னதாக குறிப்பிட்டுள்ளபடி, ஸ்மார்ட் பேண்ட் முதன்முதலில் கடந்த மாதத்தில் சீனாவில் அறிமுகமானது.
ஹானர் பேண்ட் 5 ஃபிட்னஸ் பேண்டை உங்கள் ஸ்மார்ட்போனில் புளூடூத் வழியாக ஹவாய் ஹெல்த் செயலி மூலம் இணைத்துக்கொள்ளலாம். பல உடற்பயிற்சி தொடர்பான அம்சங்களை வழங்குவதைத் தவிர, ஸ்மார்ட்போனிற்கு வரும் அழைப்புகளை நிராகரிக்க அல்லது முடக்குவதற்கான திறனுடன் ஸ்மார்ட் பேண்ட் உங்கள் ஸ்மார்ட்போனின் தகவல்களை காட்சி திரையில் நிகழ்நேரத்தில் காண்பிக்கும். கூடுதலாக, உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் அதைக் கண்டுபிடிப்பதற்கு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
புதிய ஹானர் பேண்ட் 5 ஏழு புதுமையான நவீன தொழில்நுட்பங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் பேண்ட் முழு வண்ண AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த பேண்ட்டில் ஸ்டைலான வாட்ச் அமைந்துள்ளது. ட்ரூசீன் 3.0 (TruSeen 3.0) ஹார்ட் ரேட் மானிட்டர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரவில் இதயத் துடிப்பை தொடர்ந்து கண்காணிக்கிறது. இறுதியாக, நான்கு வகையான நீச்சல் ஸ்டைல்கள் (ஃப்ரீஸ்டைல், பட்டாம்பூச்சி, மார்பக ஸ்ட்ரோக் மற்றும் பேக்ஸ்ட்ரோக்) ஆகியவற்றை அடையாளம் காணக்கூடிய திறன் உள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட் பேண்ட் 50 மீட்டர் வரை வாட்டர் ரெசிஸ்டன்ட் திறன் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset