இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ள கோக்கி (GOQii) நிறுவனத்தின் உடற்பயிற்சி தொழில் நுட்பமான ‘ரன் ஜிபிஎஸ்' என்னும் ஸ்மார்ட் பேண்ட் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ரூபாய் 4,999 க்கு விற்பனை செய்யப்படும் இந்த ‘மாரதான் கோச்சிங்' நாட்டில் ஓடுவதை விரும்புகின்ற மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அமேசான் மற்றும் கோக்கி நிறுவனத்தின் இணையதளத்தில் இது கிடைக்கிறது. மேலும் இதல் மூன்று மாதத்திற்கு மாரதான் பயிற்சி எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்பேர்ட் ரன்னர்கள் மற்றும் டாக்டர்களின் அறிவுரைகள் மட்டும் திட்டங்கள் கிடைக்கும்.
‘சமீபத்தில் வெளியான ‘இந்தியா ஃவிட் ரிப்போர்ட்' படி 2017-ல் இந்தியர்களிடையே இருந்த ஓடும் பழக்கம், 22 சதவிகிதத்திலிருந்து 33 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ‘ரன் ஜிபிஎஸ்' வைத்து பயிற்சியை செய்யும்போது இன்னும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.
மேலும் இதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேன்படுத்தி டிப்ரஷன் லெவல்களை குறைக்க முடிகிறது. இதனால் எல்லாரும் பலனடைய முடியும்' என கோக்கி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான விஷால் கோண்டால் கூறினார்.
இந்த கோக்கி ‘ரன் ஜிபிஎஸ்' 6 ஸ்க்ரீன்கள் இடம் பெற்றுள்ளது. இது நாம் நடக்கும் தூரம், வேகம் மற்றும் எவ்வளவு கலோரிகள் உடைந்துள்ளது மற்றும் இதய துடிப்பை கணிக்க முடிகிறது. மேலும் இதை பவர் பாங்க், லாப்டாப் மற்றும் சார்ஜர்கள் போன்றவைகளை பொருத்தி எளிதில் சார்ஜ் செய்ய முடியும்.
அதுபோல் ப்ளூடூத் மூலம் கோக்கி அண்ட்ராய்டு ஆப் மற்றும் ஐஓஎஸ் தளங்களில் இணைக்க முடிகிறது.
Written with inputs from IANS
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்