CMF Watch Pro 2 இனி எல்லோர் கையிலும் இருக்க போகுதா?

CMF Watch Pro 2 இனி எல்லோர் கையிலும் இருக்க போகுதா?
ஹைலைட்ஸ்
  • CMF Watch Pro 2 ஈஸியா கழட்டி மாட்ட இரண்டு மேக்னெட் இருக்கிறது
  • CMF பிராண்டின் சிக்னேச்சர் கலரான ஆரஞ்சு நிறத்துடன் வருகிறது
  • CMF வாட்ச் ப்ரோ 2 ஆனது IP68 மதிப்பீட்டில் வருகிறது
விளம்பரம்

Nothing நிறுவனத்துக்கு சொந்தமான CMF பிராண்டு புதிதாக மூன்று முக்கியமான சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் CMF Phone 1 சாதனத்துடன், CMF Buds Pro 2 மற்றும் CMF Watch Pro 2 போன்ற சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டது. CMF Watch Pro 2வில் இதுவரை இல்லாத பல அம்சங்களுடன் வந்துள்ளது. 

மாற்றக்கூடிய பெசல்கள் மற்றும் பட்டைகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வாட்ச் டயல் பிரேமை நீங்களே மாற்றிக்கொள்ளலாம். CMF Watch Pro 2 குறைந்த விலை மாடலாக இருந்தாலும் Interchangeable Bezel ஆக்சஸரீஸ் உடன் வருகிறது. இதன் மூலம் உங்கள் விருப்பத்திற்கேற்ப நேரங்களில் பேசல்களை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு முன் வாடிக்கையாளர்கள் இந்த அம்சத்தை பெரியளவில் எந்த ஸ்மார்ட்வாட்ச்களிலும் பார்க்கவில்லை என்பதனால் இது மக்களை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.

1.32-இன்ச் AMOLED இருக்கிறது. 100க்கும் மேற்பட்ட தீம்கள் இருக்கிறது. புளூடூத் அழைப்பு, 120க்கும் மேற்பட்ட விளையாட்டுகள், இதய துடிப்பு மற்றும் இரத்த ஆக்ஸிஜன் அளவு சென்சார்கள், மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு ஆகிய வசதிகள் வியக்க வைக்கிறது. 11 நாட்கள் வரை பேட்டரி நீடித்து நிற்கும். CMF Watch Pro 2 ஆஷ் கிரே மற்றும் டார்க் கிரே வண்ணத்தின் விலை 4,999 ரூபாய். ப்ளூ மற்றும் ஆரஞ்சு லெதர் பினிஷ் மாடல் 5499 ரூபாய் விலையில் கிடைக்கிறது. கூடுதல் வாட்ச் பட்டை வேண்டும் என்றால் 749 ரூபாய் தனியாக செலுத்த வேண்டும். பிளிப்கார்ட் வழியாக CMF Phone 1 வாங்கினால் வாட்ச் விலையில் 1000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். 

CMF Watch Pro 2 சாதனம் 466 x 466 தெளிவுத்திறன், 60Hz புதுப்பிப்பு வீதம், 620 nits உச்ச பிரகாசம் மற்றும் 353 ppi பிக்சல் அடர்த்தியுடன் 1.32-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. வெயிலில் நின்று பார்த்தாலும் தெளிவாக தெரியும். இதய துடிப்பு, இரத்த ஆக்ஸிஜன் செறிவு மற்றும் மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்க உதவுகிறது. CMF Watch ஆப் உடன் இணைத்து பயன்படுத்தலாம். 

புளூடூத் 5.3, GPS, GLONASS, Galileo, QZSS மற்றும் Beidou இணைப்புகளை கொண்டுள்ளது. புளூடூத் அழைப்பு அம்சத்தைப் பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளவும் பெறவும் முடியும். CMF Watch Pro 2 305mAh பேட்டரியுடன் வருகிறது. 11 நாட்கள் வரை தாங்கும் பேட்டரியை கொண்டுள்ளது. கடிகாரம் தூசி மற்றும் தண்ணீர் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீடு பெற்றுள்ளது. 
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: CMF Buds Pro 2, CMF Watch Pro 2, Nothing, CMF
Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »